உப்சாலா பல்கலைக்கழகம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| உப்சாலா பல்கலைக்கழகம் | |
|---|---|
| குறிக்கோளுரை | Gratiae veritas naturae (இலத்தீன்) |
| ஆங்கிலத்தில் குறிக்கோளுரை | Truth through mercy and nature (கருணை மற்றும் இயற்கை மூலம் உண்மை) |
| நிறுவிய நாள் | 1477 |
| வகை | பொது |
| சார்பு | சுவீடன் திருச்சபை |
| நிதிக் கொடை | 4.541 பில்லியன் குரோனார் (2009)[1] |
| பணியாளர்கள் | 6,000 (4,000 கற்பித்தல்) |
| மாணவர்கள் | 20,450 (FTE, 2009)[2] |
| முனைவர் பட்ட மாணவர் | 2,000 |
| அமைவிடம் | உப்சாலா, சுவீடன் |
| இணையத்தளம் | www.uu.se |
உப்சாலா பல்கலைக்கழகம் (Uppsala University), சுவீடன் தலைநகரான ஸ்டாக்ஹோமிலிருந்து 70 கி.மீ. வடக்கில் உள்ள உப்சாலா என்னும் பல்கலைக்கழக நகரத்தில் அமைந்துள்ளது. இப்பல்கலைக்கழகமானது, ஐரோப்பாவின் மிகவும் மதிப்புமிக்க பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். 1477-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்பல்கலைக்கழகமானது சுவீடனில் உள்ள மிகப்பழமையான பல்கலைகழகமாகும். உப்சாலா பல்கலைக்கழகம், பின்வரும் ஒன்பது உயர் கல்விப்பிரிவுகளைக்கொண்டுள்ளது.
- கலைத்துறை
- சமூகவியல்கள்
- மொழிகள்
- இறையியல்
- சட்டம்
- மருத்துவம்
- மருந்தாள்மை
- அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
- கல்விசார் அறிவியல்கள்
இணையதளங்கள் [தொகு]
| விக்கி ஊடக நடுவத்தில் Uppsala University தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன. |