கரோலின்ஸ்கா மையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கரோலின்ஸ்கா மையம்

குறிக்கோள்: Att förbättra människors hälsa (மனித உடல் நலத்தை மேம்படுத்துதல்)
நிறுவல்: 1810
வகை: மருத்துவ பல்கலைக்கழகம்
அதிபர்: ஆன்டர்ஸ் ஆம்ஸ்டென்
ஆசிரியர்கள்: 3,600 (2009)[1]
மாணவர்கள்: 5,500 (FTE, 2009)[2]
முனைவர்பட்ட மாணவர்: 2,100 (2009)[1]
அமைவிடம்: ஸ்டாக்ஹோம், சுவீடன்
வளாகம்: மாநகரம்
இணையத்தளம்: www.ki.se
கரோலின்ஸ்கா மையத்தின் கொடி
கரோலின்ஸ்கா மையம், சோல்னா
கரோலின்ஸ்கா மருத்துவமனை, சோல்னா
கரோலின்ஸ்கா அரங்கம், சோல்னா வளாகம்
பெர்சீலியுஸ் ஆய்வகம், சோல்னா வளாகம்
கரோலின்ஸ்கா மைய நூலகம் மற்றும் பெர்சீலியுஸ் ஆய்வகம், சோல்னா வளாகம்
பழையத் தோட்டம் (முற்றம்), சோல்னா வளாகம்
பூர்வீக கரோலின் மையக் கட்டிடங்கள், ஸ்டாக்ஹோம்
கரோலின்ஸ்கா மருத்துவமனை, ஹுட்டிங்கே வளாகம்
நோவம் ஆய்வுப் பூங்கா, ஹுட்டிங்கே வளாகம்

கரோலின்ஸ்கா மையம் (Karolinska Institutet) சுவீடன் நாட்டின் தலைநகரமான ஸ்டாக்ஹோமில் உள்ளது. இது ஐரோப்பாவில் உள்ள மிகப்பெரிய மருத்துவப்பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும். 1810 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இம்மையமானது , உப்சாலா பல்கலைக்கழகம் (1477) மற்றும் லுண்ட் பல்கலைக்கழகத்தினை (1666) அடுத்து மூன்றவதாக சுவீடனில் உருவாக்கப்பட்ட பழமையான மருத்துவ மையம் ஆகும். சென்ற ஆண்டு (2010), 200 ஆம் ஆண்டு நிறைவு விழாவை விமரிசையாகக்கொண்டாடினார்கள். சோல்னா மற்றும் ஹுட்டிங்கேவில் உள்ள கரோலின்ஸ்கா பல்கலைக்கழக மருத்துவமனையானது கரோலின்ஸ்கா மையத்துடன் இணைந்த ஆய்வு மற்றும் கற்பித்தலை முதன்மையாக கொண்ட மருத்துவ வளாகம் ஆகும். சுவீடனில் நடக்கும் முப்பது சதவிகித (30%) மருத்துவப்பயிற்சியும், நாற்பது சதவிகித (40%) மருத்துவ ஆய்வும் இங்குதான் நடைபெறுகிறது. இந்த ஆய்வு மையம் அமைக்கும் குழுமம், மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபெல் பரிசு பெற்றவர்களை தேர்ந்தெடுக்கிறது.

ஆய்வுத்துறைகள் மற்றும் பிரிவுகள்[தொகு]

சோல்னா வளாகம்

1. செல் மற்றும் மூலக்கூறு உயிரியல் - CMB

2. சுற்றுசூழல் மருத்துவம் - IMM

3. கற்றல், தகவலியல், நிருவாகம் மற்றும் நெறிமுறைகள் - LIME

4. மருத்துவ உயிர்வேதியியல் மற்றும் உயிர்இயற்பியல் - MBB[தொகு]

உயிர்இயற்பியல்

உயிர்வேதியியல்

உடலிரசாயனவியல் - I

உடலிரசாயனவியல் - II

இரசாயன உயிரியல்

திசுக்கூழ் உயிரியல்

மருத்துவ அழற்சி ஆய்வு

மூலக்கூற்று உயிர்நரம்பியல்

மூலக்கூற்று கட்டமைப்பு உயிரியல்

கட்டமைப்பு மரபணுத்தொகுதி கூட்டமைப்பு

இரத்தநாள உயிரியல்


5. மருத்துவ நோய்ப்பரவு இயல் மற்றும் உயிரியல் புள்ளிவிவரம் - MEB

6. நுண்ணுயிரியல், கட்டி மற்றும் செல் உயிரியல் - MTC[தொகு]

புற்று மற்றும் கழலை உயிரியல்

புற்று மற்றும் உயிரிமருத்துவ சூழலியல்

எதிர்ப்பியல்

நோய்த் தொற்று


7. நரம்பு அறிவியல்

8. உடலியல் மற்றும் மருந்தியல் - FyFa

9. பெண்கள் மற்றும் குழந்தைகள் நலம்


கரோலின்ஸ்கா மருத்துவமனை வளாகம்

1. பிணி சார்ந்த நரம்பு அறிவியல்

2. பிணி சார்ந்த அறிவியல், இடையீடு மற்றும் தொழில்நுட்பம் - CLINTEC

3. மருத்துவம், சோல்னா

4. மூலக்கூறு மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை

5. கழலையியல்-நோயியல்

6. பொதுநல அறிவியல்


ஹுட்டிங்கே வளாகம்

1. உயிர்அறிவியல் மற்றும் ஊட்டச்சத்து - BioNut

2. அறுவை சிகிச்சை மற்றும் நடத்தை, ஹுட்டிங்கே

3. பல் மருத்துவம் - Dentmed

4. ஆய்வு மருத்துவம்

5. மருத்துவம், ஹுட்டிங்கே

6. உயிர்நரம்பியல், பராமரிப்பு அறிவியல் மற்றும் சமூகம் - NVS

கரோலின்ஸ்கா மையத்துடன் இணைந்த புகழ் பெற்றவர்கள்[தொகு]

1. யோன்ஸ் யாகோப் பெர்சீலியுஸ் (Jöns Jakob Berzelius, 1779–1848; கரோலின்ஸ்கா பேராசிரியர்) - தற்போது பயன்பாட்டிலுள்ள வேதியியல் குறியீடுகளை உருவாக்கியவர். தற்கால வேதியியல் தந்தைகளுள் ஒருவராகக்கருதப்படுகிறார். சிலிக்கான், செலீனியம், தோரியம் மற்றும் சீரியம் தனிமங்களை கண்டறிந்தவர்.

2. கார்ல் குஸ்தப் மோசந்தர் (Carl Gustaf Mosander, 1792–1858; பெர்சீலியுஸின் மாணவர்) - வேதியியல் வல்லுநர் - லாந்த்தனம், எர்பியம் மற்றும் டெர்பியம் தனிமங்களை கண்டறிந்தவர்.

3. குஸ்தப் ரெட்சியுஸ் (Gustaf Retzius, 1842–1919), உடற்கூறு வல்லுநர், 1877-1890 - கரோலின்ஸ்கா பேராசிரியர்.

4. கார்ல் ஒஸ்கார் மெதின் (Karl Oskar Medin, 1847–1928), குழந்தை மருத்துவ வல்லுநர் - இவருடைய இளம்பிள்ளை வாதம் (போலியோ) குறித்த பணிகள் புகழ் பெற்றவை. 1883-1914 - கரோலின்ஸ்கா பேராசிரியர்.

5. இவார் விக்மன் (Ivar Wickman, 1872–1914; மெதினின் மாணவர்), குழந்தை மருத்துவ வல்லுநர், இளம்பிள்ளை வாதம் (போலியோ) நிபுணர்.

6. யுகோ தியோரெல் (Hugo Theorell, 1903–1982), 1955- ஆம் ஆண்டிற்கான மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபெல் பரிசு பெற்றவர்.

7. டோர்ஸ்டென் வீசெல் (Torsten Wiesel, 1924-), 1981- ஆம் ஆண்டிற்கான மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபெல் பரிசு பெற்றவர்.

8. பெஹர் எட்மன் (Pehr Edman, 1916–1977) - வேதியியல் வல்லுநர் (மருத்துவ முனைவர், 1946) - எட்மன் படிச்சிதைவு (இவ்வினையானது புரதக்கூற்றில் உள்ள அமினோ அமிலங்களை வரிசைமுறைப்படுத்த உதவுகிறது) முறையை உருவாக்கியவர்.

9. லார்ஸ் லெக்செல் (Lars Leksell, 1907–1986), மருத்துவர், கதிரியக்க அறுவை சிகிச்சை முறை மற்றும் காமா கத்தியை (Gamma Knife) உருவாக்கியவர்.

10. சுனே பெர்க்ஸ்ட்ரோம் (Sune Bergström, 1916–2004), 1982- ஆம் ஆண்டிற்கான மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபெல் பரிசு (பெங்ட் சாமுயெல்சென் மற்றும் ஜான் ராபர்ட் வேன் ஆகியோருடன் இணைந்து) பெற்றவர்.

11. பெங்ட் சாமுயெல்சென் (Bengt Samuelsson, 1934- ), 1982- ஆம் ஆண்டிற்கான மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபெல் பரிசு (சுனே பெர்க்ஸ்ட்ரோம் மற்றும் ஜான் ராபர்ட் வேன் ஆகியோருடன் இணைந்து) பெற்றவர்.

12. ராக்னர் கிரானிட் (Ragnar Granit, 1900–1991), 1967 - ஆம் ஆண்டிற்கான மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபெல் பரிசு பெற்றவர்.

13. யோறான் லில்யெஸ்ட்ராண்ட் (Göran Liljestrand, 1886–1968), உடற்செயலியல் மற்றும் மருந்தியல் வல்லுநர்

14. உல்ப் வான் யூலெர் (Ulf von Euler, 1905–1983), உடற்செயலியல் வல்லுநர், 1970 - ஆம் ஆண்டிற்கான மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபெல் பரிசு பெற்றவர்.

15. சுவென் இவார் செல்டிங்கெர் (Sven Ivar Seldinger, 1921–1998), கதிரியலர், செல்டிங்கெர் உத்தியை (Seldinger technique - குருதிக்குழல்கள் மற்றும் உள்ளீடற்ற உறுப்புகளை பாதுகாப்பாக அணுகும் மருத்துவ முறை) உருவாக்கியவர்.

16. ரோல்ப் லுப்ட் (Rolf Luft, 1914–2007), கரோலின்ஸ்கா பேராசிரியர், நாளமில்லாச் சுரப்பு மருத்துவர்.

17. தாமஸ் லிண்டஹ்ல் (Tomas Lindahl), புற்றுநோய் ஆய்வாளர், வேத்தியர் (ராயல்) பதக்கம் பெற்றவர்.

சில படங்கள்[தொகு]

இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=கரோலின்ஸ்கா_மையம்&oldid=1480273" இருந்து மீள்விக்கப்பட்டது