மன்மோகன் சிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மன்மோகன் சிங்
ਮਨਮੋਹਨ ਸਿੰਘ
Portrait of Manmohan Singh
13வது இந்தியப் பிரதமர்
பதவியில்
22 மே 2004 – 26 மே 2014
குடியரசுத் தலைவர்அப்துல் கலாம்
பிரதீபா பாட்டீல்
பிரணாப் முகர்ஜி
முன்னையவர்அடல் பிகாரி வாச்பாய்
பின்னவர்நரேந்திர மோதி
இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர்
பதவியில்
6 நவம்பர் 2005 – 24 அக்டோபர்2006
முன்னையவர்நட்வர் சிங்
பின்னவர்பிரனாப் முகர்ஜி
இந்தியாவின் நிதியமைச்சர்
பதவியில்
30 நவம்பர் 2008 – 24 சனவரி 2009
முன்னையவர்பழனியப்பன் சிதம்பரம்
பின்னவர்பிரனாப் முகர்ஜி
பதவியில்
21 சூன் 1991 – 16 மே 1996
பிரதமர்நரசிம்ம ராவ்
முன்னையவர்மது தன்டவதே
பின்னவர்ஜஸ்வந்த் சிங்
இந்தியத் திட்டக் குழுவின் துணைத் தலைவர்
பதவியில்
15 சனவரி 1985 – 31 ஆகத்து 1987
பிரதமர்ராஜீவ் காந்தி
முன்னையவர்நரசிம்ம ராவ்
பின்னவர்சிவ் சங்கர்
இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர்
பதவியில்
15 செப்டம்பர் 1982 – 15 சனவரி 1985
முன்னையவர்இந்திரபிரசாத் கோர்தன்பாய் பட்டேல்
பின்னவர்அமிதவ் கோசு
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு26 செப்டம்பர் 1932 (1932-09-26) (அகவை 91)
கா, பஞ்சாப்,பிரிட்டிஷ் ராஜ்
அரசியல் கட்சிஐக்கிய முற்போக்குக் கூட்டணி
இந்திய தேசிய காங்கிரசு
துணைவர்குர்சகாரன் கெளர் (திருமணம். 1958)
பிள்ளைகள்உபிந்தர் சிங்
தமன் சிங்
அம்ரித் சிங்
வாழிடம்(s)7 ரேஸ் கோர்ஸ் வீதி, புது தில்லி, இந்தியா (official)
குவாகாத்தி (private)
முன்னாள் கல்லூரிபஞ்சாப் பல்கலைக்கழகம், சண்டிகர்
செயின்ட் ஜான் கல்லூரி, கேம்பிரிச்சு
நியூபீல்ட் கல்லூரி, ஆக்சுபோர்டு
வேலைபொருளாதார நிபுனர்
குடிமைப் பணி
சமூக சேவையாளர்
பேராசிரியர்
கல்வியாளர்
இணையத்தளம்மன்மோகன் சிங்

மன்மோகன் சிங் (Manmohan Singh, பஞ்சாபி: ਮਨਮੋਹਨ ਸਿੰਘ, பிறப்பு: செப்டம்பர் 26, 1932) இந்தியாவின் 13 ஆவது, பிரதமர் ஆவார். மன்மோகன் சிங், மேற்கு பஞ்சாபிலுள்ள கா என்னும் (தற்போது பாகிஸ்தானில் உள்ளது) ஊரில் பிறந்தார். இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்தவர். மே 22, 2004 இல் இந்தியப் பிரதமராகப் பதவியேற்றார். சீக்கிய சமயத்தைச் சேர்ந்த இவர், இந்து சமயத்தை சாராத முதல் இந்தியப் பிரதமர் ஆவார்.

1991 முதல் 1996 வரை பி. வி. நரசிம்ம ராவ் அமைச்சரவையில் மன்மோகன் சிங் நிதி அமைச்சராக பணியாற்றினார். கல்வியாலும், பயிற்சியாலும் தேர்ந்த பொருளாதாரவியல் வல்லுநரான அவர், இந்தியாவின் பொருளாதார தாராளமயமாக்கல் கொள்கையின் துவக்கத்தில் பெரும்பங்கு வகித்தார். மன்மோகன் சிங் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். மேலும் மத்திய ரிசர்வ் வங்கியின் தலைவராகவும் பதவி வகித்துள்ளார். அவர் நிதியமைச்சராகும் முன் பின்தங்கிய நிலையில் இருந்த இந்திய பொருளாதாரம், இவரின் கொள்கைகளால் முன்னேறத் துவங்கியது எனக் கருதப்படுகிறது.

மக்களவை மூலம் தேர்ந்தெடுக்கப்படாத ஒரே பிரதமர் இவர் தான். 1999 தெற்கு டெல்லியில் போட்டியிட்ட இவர் பாஜக வேட்பாளரால் தோற்கடிக்கப்பட்டார். 1995 முதல் அஸ்ஸாம் மாநிலத்திலிருந்து இந்திய மேலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 2001 மற்றும் 2007ல் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி

மன்மோகன் சிங் கா, பஞ்சாப், பிரிட்டிஷ் இந்தியாவில் ஒரு சீக்கிய குடும்பத்தில் 26 செப்டம்பர் 1932 அன்று குர்முக் சிங் மற்றும் அம்ரித் கவுர் ஆகியோருக்குப் பிறந்தார். இவர் மிக இளம் வயதிலேயே தனது தாயை இழந்தார்.

இந்தியப் பிரிவினைக்குப் பிறகு, அவரது குடும்பம் அம்ரித்சர், இந்தியாவில் குடிப்பெயர்ந்தனர். இவர் அங்குள்ள இந்துக் கல்லூரியில் பயின்றார். இவருக்கு மனைவியும், மூன்று மகள்களும் உள்ளனர்.

பணி அனுபவம்

அரசியல் பதவிகள்
முன்னர்
இந்திரபிரசாத் கோர்தன்பாய் பட்டேல்
இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர்
1982–1985
பின்னர்
அமித்தாவ் கோஷ்
முன்னர் திட்டக் குழு துணைத்தளைவர்
1985–1987
பின்னர்
சிவ் சங்கர்
முன்னர் இந்தியாவின் நிதியமைச்சர்
1991–1996
பின்னர்
முன்னர் இந்தியப் பிரதமர்
2004–2014
பின்னர்
திட்டக் குழு தலைவர்
2004–2014
முன்னர்
நட்வர் சிங்
வெளிவிவகாரத் துறை அமைச்சர்
2005–2006
பின்னர்
முன்னர் இந்தியாவின் நிதியமைச்சர்
2008–2009
முன்னர் இந்தியாவின் நிதியமைச்சர்
2012
பின்னர்

இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=மன்மோகன்_சிங்&oldid=2819494" இலிருந்து மீள்விக்கப்பட்டது