மே 18
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(18 மே இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| << | மே 2013 | >> | ||||
| ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
| 1 | 2 | 3 | 4 | |||
| 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 |
| 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 |
| 19 | 20 | 21 | 22 | 23 | 24 | 25 |
| 26 | 27 | 28 | 29 | 30 | 31 | |
| MMXIII | ||||||
மே 18 கிரிகோரியன் ஆண்டின் 138ஆவது நாளாகும். நெட்டாண்டுகளில் 139ஆவது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 227 நாட்கள் உள்ளன.
பொருளடக்கம் |
நிகழ்வுகள் [தொகு]
- 1565 - ஓட்டோமான் படைகள் மால்ட்டாவை அடைந்தன. மால்ட்டாவின் ஆக்கிரமிப்பு ஆரம்பமாகியது.
- 1652 - வட அமெரிக்காவிலேயே முதன் முதலில் அடிமைத் தொழிலை இல்லாதொழிக்கும் சட்டத்தை ரோட் தீவு கொணர்ந்தது.
- 1765 - கனடாவின் மொன்ட்றியால் நகரத்தின் பெரும்பகுதி தீயினால் அழிந்தது.
- 1803 - ஐக்கிய இராச்சியம் பிரான்ஸ் மீது போரை அறிவித்தது.
- 1804 - முதலாம் நெப்போலியனை பிரெஞ்சு மன்னனாக செனட் தெரிவு செய்தது.
- 1869 - ஏசோ குடியரசு கலைக்கப்பட்டு ஜப்பானுடன் இணைக்கப்பட்டது.
- 1896 - கோடின்கா துயரம்: ரஷ்ய மன்னன் இரண்டாம் நிக்கலாசின் முடிசூடும் நிகழ்வுக் கொண்டாட்டத்தின் போது "கோடின்கா" என்ற இடத்தில் இடம்பெற்ற நெரிசலில் சிக்கி 1,389 பேர் இறந்தனர்.
- 1897 - ஐரிய எழுத்தாளர் பிராம் ஸ்டோக்கர் எழுதிய டிராக்குலா புதினம் வெளியிடப்பட்டது.
எடிசனின் போனோகிராஃபின் காப்புரிமப் படிமம், மே 18, 1880
- 1900 - தொங்கா ஐக்கிய இராச்சியத்தின் பகுதியாக்கப்பட்டது.
- 1910 - ஹேலியின் வால்வெள்ளியின் வாலினூடாக பூமி சென்றது.
- 1927 - மிச்சிகனில் பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு நிகழ்வில் பெரும்பாலும் குழந்தைகள் அடங்கிய 45 பேர் கொல்லப்பட்டனர்.
- 1944 - கிரிமிய தார்த்தார்கள் சோவியத் அரசினால் வெளியேற்றப்பட்டனர்.
- 1956 - உலகின் 4வது பெரிய மலையான லகோத்ஸே மலையின் உச்சியை முதன் முதலில் சுவிட்சர்லாந்து மலையேறிகள் எட்டினர்.
- 1969 - அப்பல்லோ 10 விண்ணுக்கு ஏவப்பட்டது.
- 1974 - சிரிக்கும் புத்தர் என்ற பெயரிடப்பட்ட திட்டத்தில் இந்தியா தனது முதலாவது அணுக்குண்டை வெற்றிகரமாக சோதித்தது.
- 1980 - வாஷிங்டனில் சென் ஹெலன்ஸ் மலை தீக்கக்கியதில் 57 பேர் கொல்லப்பட்டனர். 3 பில்லியன் அமெரிக்க டாலர் பெறுமதியான சேதம் ஏற்பட்டது.
- 1984 - அன்னலிங்கம் பகீரதன் சயனைட் அருந்தி உயிர் நீத்த முதலாவது விடுதலைப் புலிப் போராளி என்ற பெருமையைப் பெற்றார்.
- 1990 - பிரான்சில் TGV தொடருந்து உலகின் அதிஉயர் வேகத்தில் (515.3கிமீ/மணி) சென்றது.
- 1991 - ஹெலன் ஷார்மன் விண்வெளிக்குச் சென்ற முதலாவது பிரித்தானியர் என்ற பெருமையைப் பெற்றார்.
- 1991 - வடக்கு சோமாலியா சோமாலிலாந்து என்ற பெயரில் மீதமான சோமாலியாவில் இருந்து விடுதலையை அறிவித்தது. ஆனாலும் அனைத்துலகம் இதனை அங்கீகரிக்கவில்லை.
- 2006 - நேபாளம் மதசார்பற்ற நாடாகவும் அதன் மன்னர் ஒரு சம்பிரதாய மன்னராகவே இருப்பாரெனவும் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது.
- 2009 - ஈழப்போர் முடிவுக்கு வந்ததாக இலங்கை அரசு அதிகாரபூர்வமாக அறிவித்தது. இலங்கையும் அதன் நட்பு நாடுகளும் ஒருசேர 53,000 இற்கும் மேற்பட்ட பூர்வகுடி தமிழ் மக்களை கொன்ற நாள் என தமிழர்கள் குற்றம் சாட்டிய நாள்.
- 2010 - நாடு கடந்த தமிழீழ அரசு நிறுவப்பட்டது.
பிறப்புக்கள் [தொகு]
- 1048 - ஒமார் கையாம், பார்சியக் கவிஞர், கணிதவியலாளர் (இ. 1131)
- 1908 - இயான் பிளெமிங், ஆங்கில எழுத்தாளர் (இ. 1964)
- 1920 - திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் (இ. 2005)
- 1913 - நீலம் சஞ்சீவ ரெட்டி, இந்தியாவின் 5வது குடியரசுத் தலைவர் (இ. 1996)
- 1933 - தேவகவுடா, இந்தியாவின் 11வது பிரதமர்
- 1939 - பீட்டர் குருன்பெர்க், ஜெர்மனிய இயற்பியலாளர்