ஓமர் கய்யாம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஓமர் கய்யாம்
முழுப் பெயர் ஓமர் கய்யாம்
பிறப்பு மே 18, 1048
இறப்பு டிசம்பர் 4, 1122
சிந்தனை
மரபு(கள்)
பாரசீகக் கணிதம், பாரசீகக் கவிதை, பாரசீக மெய்யியல்
முக்கிய
ஆர்வங்கள்
கவிதை, கணிதம், மெய்யியல், வானியல்

கியாஸ் ஒத்-தீன் அபொல்-ஃபத் ஓமார் இபின் எப்ராகிம் கய்யாம் நேஷபூரி (பாரசீக மொழி:غیاث الدین ابو الفتح عمر بن ابراهیم خیام نیشابوری பிறப்பு நேஷபூர், பாரசீகம், மே 18, 1048, இறப்பு டிசம்பர் 4, 1122) ஒரு பாரசீகக் கவிஞரும், கணிதவியலாளரும், மெய்யியலாளரும், வானியலாளரும் ஆவார். இவர் ஓமர் அல் கய்யாமி எனவும் அழைக்கப்படுகிறார். இவர் அவரது கவிதைகளுக்காகவே கூடுதலாக அறியப்படுகிறார். இயற்கணிதப் புதிர்கள் தொடர்பான செயல்விளக்கம் குறித்த ஆய்வுக்கட்டுரை (Treatise on Demonstration of Problems of Algebra), கணிதவியலில் அவரது குறிப்பிடத்தக்க பங்களிப்புகளில் ஒன்றாகும். இதில் முப்படிச் சமன்பாடுகளுக்குத் தீர்வு காண்பதற்கான வடிவவியல் முறை ஒன்றைக் கொடுத்துள்ளார். காலக்கணிப்பு முறையின் மேம்பாட்டுக்கும் இவர் பங்களிப்புச் செய்துள்ளார்.

இளமைக்காலம்[தொகு]

கய்யாம், ஈரானில் உள்ள, அன்றைய செல்யூக் பேரரசின் கோராசானின் தலைநகரமான நிஷாப்பூரில் பிறந்தார். இது அன்று கெய்ரோ, பாக்தாத் ஆகிய நகரங்களுக்குப் போட்டியாக விளங்கியது. இவர் கூடாரங்கள் செய்யும் ஒரு குடும்பத்தில் பிறந்ததாகக் கருதப்படுகிறது. இவர் தனது சிறு வயதின் ஒரு பகுதியை இன்றைய வடக்கு ஆப்கனிஸ்தானில் உள்ள பால்க் என்னும் நகரில் கழித்தார். அங்கே ஷேக் முகம்மத் மன்சூரி என்பவரிடம் கல்வி பயின்றார். பின்னர், கோராசான் பகுதியில் சிறந்த ஆசிரியராக விளங்கிய இமாம் மோவாபாக் நிஷாபூரி என்பவரிடம் கல்வி பயின்றார்.

மிகப் பிரபலமான மூன்று பள்ளித் தோழர்கள் என்னும் கதைப்படி, கய்யாமுடன் இன்னும் இரண்டு பெயர் பெற்ற மாணவர்களும் படித்து வந்தனர். அவர்களில் ஒருவர் நிசாம்-உல்-முல்க். இவர் பின்னர் செல்யூக்கிட் பேரரசில் வாசிர் எனப்படும் பெரிய பதவியில் அமர்ந்தார். மற்றவர் ஹசன்-இ-சாபா. இவர் ஹஷ்ஷாஷின் மதப்பிரிவுக்குத் தலைவரானார். இம் மூவரும் நண்பர்களாயினர். நிசாம்-உல்-முல்க் வாசிர் ஆனதும், மற்ற இரு நண்பர்களும் அவரிடம் சென்று அவரிடம் உதவி கோரினர். ஹசன்-இ-சாபா தனக்கு அரசில் ஒரு பதவி கேட்டுப் பெற்றுக்கொண்டார். ஆனால் அவர் பேராசை கொண்டவராக தனக்கு உதவிய வாசிரை பதவியிலிருந்து அகற்றும் தோல்வியுற்ற சதியொன்றில் பங்குபற்றியதனால் பதவியில் இருந்து அகற்றப்பட்டார். ஓமர் கய்யாம் அடக்கமாகத் தனக்கு வசிப்பதற்கும், அறிவியலைக் கற்பதற்கும், தொழுவதற்கும் ஒரு இடம் மட்டுமே கேட்டார். இவருக்கு உதவிப் பணமாக ஆண்டுக்கு 1,200 மித்கால் பொன் கொடுக்கப்பட்டது. கய்யாம் இதைக் கொண்டே தனது எஞ்சிய காலத்தைக் கழித்தார்.

ஓமர் கய்யாம் எழுதிய இரண்டு அத்தியாயங்கள் கொண்ட அவருடைய நூலின் முதல் பக்கத்தில் உள்ள "முப்படிய சமன்பாடும் கூம்பு வெட்டுகளின் வெட்டுகளும்" இந்த கையெழுத்துப் படி ஈரானில் உள்ள டெஃகரான் (Tehran) பல்கலைக்கழகத்தில் உள்ளது.


"http://ta.wikipedia.org/w/index.php?title=ஓமர்_கய்யாம்&oldid=1387262" இருந்து மீள்விக்கப்பட்டது