அக்டோபர் 18
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
(18 அக்டோபர் இலிருந்து மீள் வழிப்படுத்தப்பட்டது)
| << | அக்டோபர் 2009 | >> | ||||
| ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
| 1 | 2 | 3 | ||||
| 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
| 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 |
| 18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 |
| 25 | 26 | 27 | 28 | 29 | 30 | 31 |
| MMIX | ||||||
அக்டோபர் 18, கிரிகோரியன் ஆண்டின் 291வது நாளாகும். நெட்டாண்டுகளில் 292வது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 74 நாட்கள் உள்ளன.
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- 1356 - சுவிட்சர்லாந்தில் இடம்பெற்ற நிலநடுக்கம் அதன் பேசல் நகரை முற்றாக அழித்தது.
- 1860 - இரண்டாவது ஓப்பியம் போர் முடிவுக்கு வந்த்து.
- 1867 - ரஷ்யாவிடம் இருந்து அலாஸ்கா மாநிலத்தை ஐக்கிய அமெரிக்கா 7.2 மில்லியன் அமெரிக்க டாலர் விலை கொடுத்து வாங்கியது. இந்நாள் அலாஸ்கா நாள் எனக் கொண்டாடப்படுகிறது.
- 1898 - ஐக்கிய அமெரிக்கா புவெர்ட்டோ ரிக்கோவைக் கைப்பற்றியது.
- 1908 - பெல்ஜியம் கொங்கோவைக் கைப்பற்றியது.
- 1912 - முதலாம் பால்க்கான் போர் ஆரம்பமாகியது.
- 1922 - பிபிசி வானொலி ஆரம்பிக்கப்பட்டது.
- 1929 - கனடாவில் பெண்களும் மனிதர்கள் என சட்டபூர்வமாக எழுதப்பட்டது.
- 1944 - இரண்டாம் உலகப் போர்: ஹிட்லரிடமிருந்து ஜெர்மன் தேசிய இராணுவத்தை அமைப்பதற்கான கட்டளை பிறந்தது.
- 1944 - சோவியத் ஒன்றியம் செக்கொசுலவாக்கியாவை முற்றுகையிட்டுக் கைப்பற்றியது.
- 1945 - வெனிசுவேலாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து அதன் அதிபர் பதவியிழந்தார்.
- 1851 - இங்கிலாந்தில் பளிங்கு அரண்மனையில் அனைத்துலக வர்த்தகக் கண்காட்சி முடிவுற்றது.
- 1954 - டெக்சாஸ் இன்ஸ்ட்ருமெண்ட்ஸ் முதலாவது டிரான்சிஸ்டர் வானொலியை அறிமுகப்படுத்தியது.
- 1967 - சோவியத் விண்கலம் வெனேரா 4 வீனஸ் கோளை அடைந்தது. வேறொரு கோளின் வளிமண்டலத்தை அளந்த முதலாவது விண்கலம் இதுவாகும்.
- 1991 - அசர்பைஜான் சோவியத் ஒன்றியத்திடம் இருந்து விடுதலையை அறிவித்து விலகியது.
- 1991 - நாகப்பட்டினம் மாவட்டம் அமைக்கப்பட்டது.
- 2006 - ஈழப்போர்: காலி கடற்படைத்தளத்தில் கடற்புலிகள் நடத்திய தாக்குதலில் பல கடற்படைக் கலங்கள் அழிக்கப்பட்டன.
[தொகு] பிறப்புக்கள்
- 1910 - வி. நவரத்தினம், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் (இ. 2006)
- 1956 - மார்டினா நவரதிலோவா, டென்னிஸ் வீராங்கனை
- 1960 - ஜான் குளோட் வான் டாம், நடிகர்
- 1978 - ஜோதிகா, இந்தியத் திரைப்பட நடிகை
[தொகு] இறப்புகள்
- 1871 - சாள்ஸ் பாபேஜ், பிரித்தானிய கணிதவியலாளர் (பி. 1791)
- 1931 - தொமஸ் அல்வா எடிசன், அமெரிக்கக் கண்டுபிடிப்பாளர் (பி. 1847)