என்றி பெர்குசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
என்றி-லூயி பெர்குசன்
Henri-Louis Bergson
1927ல் பெர்குசன்
பிறப்பு(1859-10-18)18 அக்டோபர் 1859
பாரிஸ், பிரான்சு
இறப்பு4 சனவரி 1941(1941-01-04) (அகவை 81)
பாரிஸ், பிரான்சு
காலம்இருபதாம் நூற்றாண்டின் தத்துவயவியல்
பகுதிமேற்கத்திய தத்துவயவியல்
பள்ளிஐரோப்பியக்கண்ட தத்துவவியல் (பிரான்சிய ஆன்மவியல்)
Nobel Prize in Literature
1927
முக்கிய ஆர்வங்கள்
மீவியற்பியல் (Metaphysics), அறிமுறையியல் (epistemology), மொழிக்கொள்கையியல்,
கணிதக் கொள்கையியல்
குறிப்பிடத்தக்க
எண்ணக்கருக்கள்
Duration, Intuition,
Élan Vital,
திறந்த சமுதாயம்

என்றி-லூயி பெர்குசன் (பிரெஞ்சு:Henri-Louis Bergson) 18 அக்டோபர் 1859 - 4 ஜனவரி 1941), 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் செல்வாக்கு மிக்க பிரெஞ்சு தத்துவவியளாலர் ஆவர். அவரது செழிப்பான, ஜீவாதாரமான கருத்துகளுக்காகவும் அவற்றை சிறந்த திறமையுடன் வழங்கியதற்காகவும், 1927 இல் இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றார். 1930ல், ஃபிரான்ஸ் அவருக்கு மிகுந்த உயரிய மரியதையான தி கிராண்ட்-க்ராய் டெ லா லிஜியன் டி'ஹான்னியர் எனும் விருதை வழங்கியது.

வாழ்க்கைச் சரிதை[தொகு]

இவர் 1859 இல் பிரான்சின் தலைநகர் பாரிசில் பிறந்தார். இவர் போலந்தைச் சேர்ந்த யூதர் ஆவார். இவர் பெயருக்கான காரணமும் இதுவே. இவரது தாய் இங்கிலாந்தைச் சேர்ந்த யூதர் ஆவார். இவர்களின் குடும்பத்தினர் போலந்தில் வாழும் பிரபலமான வணிகர்களாக இருந்தனர். இவர் பிறந்தவுடன் சில காலம் இலண்டனில் வசித்த காரணத்தினால் தன் தாயிடம் இருந்து ஆங்கில மொழியைக் கற்றார். இவருக்கு ஒன்பது வயதிருக்கும்போது, இவர் குடும்பத்துடன் பிரான்சிற்கு குடி பெயர்ந்து பிரான்சு நாட்டின் குடிமகன் ஆனார். இவர் 1891ல் லூயி நியுபெர்கர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 1896 ஜீன் எனும் பெண் குழந்தை காது கேளாமல் பிறந்தது. பெர்குசனக்கு மினா பெர்குசன், எனும் சகோதரியும் உண்டு. இவர் அமைதியான பிரெஞ்சு பேராசிரியராக வாழ்ந்து வந்தார். இப்புத்தங்கள் இவர் வெளியிட்டார்: 1889ல், டைம் அண்ட் ஃப்ரீ வில் (எஸ்ஸை சர் லே டான்னீஸ் இம்மெடியட்ஸ் டெ லா கன்சயின்ஸ்) 1896ல், மேட்டர் அண்ட் மெமரி (மேட்டைரே அட் மெமைரே) 1907ல், க்ரியேட்டிவ் எவோலுஷன் (எல்'எவோலுஷன் க்ரியேட்ரிஸ்) 1932ல், தி டூ சோர்சஸ் ஆஃப் மொராலிடி அண்ட் ரிலிஜியன் (லெ டியு சோர்சஸ் டெ லா மொராலெ அட் டெ லா ரிலிஜியன்) 1900ல், தி காலேஜ் ஆஃப் பிரான்ஸ் பெர்குசனை, க்ரீக் மற்றும் லத்தீன் தத்துவவியலின் தலைவராக நியமித்தது, இவர் இப்பதவியில் 1904 வரை இருந்தார். அதன் பின்னர் கேப்ரியல் டார்ட் இன் தி சேர் ஆஃப் மாடர்ன் பிலாசபியில், 1920 வரை தலைவராக இருந்தார்.

கல்வியும் பணியும்[தொகு]

பெர்குசன் லைசீ ஃபான்டனெஸ் எனும் பள்ளியில் 1868ல் இருந்து 1878 வரை பயின்றார் என கருதப்படுகிறது. 1877ல் தன் 18 வயதின் போது இவர் தன் அறிவியல் சார்ந்த பணிக்காகவும், ஒரு கணித சிக்கலுக்கு விடை கண்டதாலும் பரிசு பெற்றார். அடுத்த வருடம் அந்த விடையானது அன்ன்லெஸ் டீ மேத்தமெடிக்குயஸ் எனும் புத்தகத்தில் வெளி வந்தது இதுவே இவரின் முதல் வெளியீடு. தான் எந்த துறையை தேர்ந்தெடுப்பது என்ற சிறு தயக்கத்திற்கு பின் அவர் மெய்யியலை தேர்வு செய்தார். தனக்கு 19 வயது இருக்கும் போது பிரபலமான எகோல் நார்மலெ சுப்பிரியூர் எனும் கல்லூரியில் சேர்ந்து லைசென்ஸெ-எஸ்-லெட்டர்ஸ் எனும் பட்டத்தை பெற்றார், அதை தொடர்ந்து 1881ல் அக்ரகேஷன் டெ பிலாசப்பி எனும் பட்டத்தை பெற்றார். அதே வருடம் ஆங்கர்ஸ் நகரத்தில் உள்ள லைசீ எனும் பள்ளியில் கற்பித்தலுகாக பணியமர்த்தப்பட்டார். அதன் பின் அவர் க்லெர்மான்ட்-ஃபெர்ராண்ட்க்கு வந்த பின் மெய்யியலில் தன்னால் முடிந்ததை காட்ட எண்ணி லூக்ரெடிஸின் வாழ்க்கை சாராம்சத்தை விளக்கும் புதிய பதிப்பை வெளியிட்டார். பெர்குசன் பணியாற்றி கொண்டிருந்தாலும் தன் தனிப்பட்ட கல்வியை பயிலவும் ஆனார், அதன் விளைவாக நேரமும் பகுத்தறிவும் எனும் விளக்கவுரையையும், அரிஸ்டாட்டிலை பற்றிய லத்தீன் ஆய்வறிக்கையையும் வெளியிட்டு 1889ல் பாரிஸ் பல்கலைகழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். தன் விளக்கவுரையும், ஆய்வறிக்கையும் ஃபெலிக்ஸ் அல்கனால் வெளியிடப்பட்டது. பெர்குசன் சில காலம் முன்சிபல் கல்லூரியில் கற்பித்த பின் 1888ல் மீண்டும் பாரிஸ்க்கு லைசீ ஹென்ரி குவாற்றே எனும் கல்லூரிக்கு பணி நியமனம் ஆகி வந்து எட்டு ஆண்டுகள் அங்கிருந்தார். அங்கே அவர் டார்வினை பற்றி ஆய்வு செய்து அவரது கோட்பாடுகளின் விளக்கத்தை அளித்தார்.

என்றி பெர்குசனின் பிற்காலங்கள்[தொகு]

பெர்குசன் சிறந்த பல தொண்டாற்றிய பின்னர், பாரிஸில் உள்ள போர்டெ டி'அடிய்யூல் எனும் இடத்தில் ஒரு அமைதியான தெருவில் வாழ்ந்து வந்தார். 1927ல் அவருக்கு க்ரியேட்டிவ் எவோலுஷன் எனும் புத்தகத்துக்கு நோபல் பரிசு கிடைத்தது. ஆனால் அவர் அச்சமயம் வாத நோய் சார்ந்த வியாதியால் ஸ்டாக்ஹோமுக்கு செல்ல இயலவில்லை. கல்லூரி வேலை ஓய்வுக்கு பின் அவர் தெளிவற்ற நிலைக்கு தள்ளப்பட்டார், அவரது உடலில் பாதி முடங்கி போனது. பெர்குசன் கத்தோலிக்கத்துக்கு மாற எண்ணியிருந்தார், அவர் தன் உயிலில் என் நினைவுகள் எப்போதும் என்னை கத்தோலிக்கத்துக்கு அருகில் கொண்டு சென்றது, அதில் நான் யூதத்தின் முழுமையை காண்கிறேன். என்று எழுதி இருந்தார். ஆனால், அவர் நாசிசம், யூத எதிர்ப்பு மற்றும் யூத மக்களின் மீது இழைக்கப்பட்ட துயரங்களை மனதில் கொண்டு அவர் கத்தோலிக்கதுக்கு மாறாது இருந்தார். 3 ஜனவரி 1941ல் பெர்குசன் மூச்சுக்குழலழற்சி நோயினால் பாரிஸில் இறந்து போனார். ஒரு உரோம கத்தோலிக்க பாதிரியார் பெர்குசனின் வேண்டுகோளுக்கு இணங்க ஜெபம் செய்தார். என்றி பெர்குசன் சிமெட்ரி டெ கார்ச்சஸ், ஹௌடஸ்-டெ-செய்னெ எனும் இடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டார்.

படைப்புகள்[தொகு]

இவருடைய முக்கியமான நான்கு படைப்புகள்:

  • 1889 ஆண்டில் வெளியான காலமும் தன்னுள்ளமும் (Essai sur les données immédiates de la conscience)
  • 1896 ஆம் ஆண்டு பொருளும் நினைவும் (Matière et mémoire)
  • 1907 ஆம் ஆண்டு புத்தாக்கக் கூர்ப்பு (படிவளர்ச்சி) (L'Evolution créatrice)
  • 1932, இரு ஊற்றுகளான அறநெறியும் சமயமும் (Les deux sources de la morale et de la religion)


  1. Hancock, Curtis L.(May 1995).R. Baine Harris "The Influence of Plotinus on Berson's Critique of Empirical Science". Neoplatonism and Contemporary Thought, International Society for Neoplatonic Studies, 407, Albany:State University of New York Press. 2010-05-10 அன்று அணுகப்பட்டது..
"https://ta.wikipedia.org/w/index.php?title=என்றி_பெர்குசன்&oldid=3047221" இலிருந்து மீள்விக்கப்பட்டது