அல்பேர்ட் காம்யு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அல்பேர்ட் காம்யு (Albert Camus) (நவம்பர் 7, 1913 - ஜனவரி 4, 1960) நோபல் பரிசு பெற்ற பிரஞ்சு எழுத்தாளர். 1957இல் இலக்கியத்துக்கான நோபல் பரிசைப் பெற்றார். 1960 இல் கார் விபத்தில் காலமானார். நாவல்கள், சிறுகதைகள், நாடகங்கள் எழுதிய காம்யுவின் L'Étranger (The Stranger) நாவல் தமிழில் "அந்நியன்" என்ற பெயரில் வெ. ஸ்ரீராமால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
காமசின் கூற்றுக்கள் [தொகு]
- "நான் எதிர்க்கிறேன், அதனால் இருக்கிறேன்."
- "எனக்கு முன்னால் நடக்காதே, நான் உன்னை பின்பற்றாமல் இருந்து விடுவேன். எனக்குப் பின்னால் நடக்காதே, நான் வழிகாட்டாமல் இருந்து விடுவேன். என்னோடு அருகே நட, என் நண்பனாய் இரு."
- "மாவீரர்கள், எனது நண்பா, மறக்கப்படுவது, பயன்படுத்தப்படுவது, நக்கலடிக்கப்படுவது, இதில் ஒன்றைத் தெரிவு செய்ய வேண்டு. புரிந்துகொள்ளப்படுவது ..ஒருபோதும் இல்லை."