எமில் டேர்க்கேம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
எமில் டேர்க்கேம்
Emile Durkheim.jpg
எமில் டேர்க்கேம்
பிறப்பு ஏப்ரல் 15 1858
பிறப்பிடம் Épinal, பிரான்ஸ்
இறப்பு நவம்பர் 15 1917 (அகவை 59)
இறப்பிடம் பாரிஸ், பிரான்ஸ்
தேசியம் பிரான்சியர்
பல்கலைக்கழகம் École Normale Supérieure

எமில் டேர்க்கேம் பிரான்சைச் சேர்ந்த ஒரு சமூகவியலாளர். சமூகவியல், மானிடவியல் ஆகிய துறைகளின் உருவாக்கத்துக்கு இவரது பங்களிப்புக்கள் மிகவும் முக்கியமானவை. சமூகவியல் தொடர்பான இவரது வேலைகளும், இத் துறையின் முதலாவது இதழில் இவர் ஆசிரியராக இருந்து ஆற்றிய பணிகளும், கல்வியாளர்கள் மத்தியில் சமூகவியலை ஒரு சமூக அறிவியல்துறையாக ஏற்றுக்கொள்ள வைத்தன. தனது வாழ்க்கைக் காலத்தில் டேர்க்கேம், கல்வி, குற்றவியல், மதம், தற்கொலை போன்ற சமூகவியல் தொடர்பான தலைப்புக்களில் பல விரிவுரைகளை ஆற்றியிருப்பதுடன், பல ஆய்வுகளையும் வெளியிட்டுள்ளார். இவர் சமூகவியல் துறையின் நிறுவனர்களுள் ஒருவராகப் போற்றப்படுகிறார்.

[தொகு] வரலாறு

[தொகு] இளமைக்காலம்

எமில் டேர்க்கேம், அக்காலத்தில் ஜெர்மனியின் ஒரு பகுதியாக இருந்த லொரைனின், பாஸ்காக் மாகாணத்தில் 1858 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15 ஆம் நாள் பிறந்தார். இவர் பல தலைமுறைகளாக மதப்பற்றுக்கொண்ட பிரெஞ்சு யூதக் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது, தந்தை, பாட்டன், பூட்டன் எல்லோருமே யூதமதக் குருவாக இருந்தனர். ஆனால், டேர்க்கேம் சிறு வயதிலேயே இதே வழியில் செல்வதில்லை என முடிவு எடுத்தார். இவர் ஒரு மதச் சார்பற்ற வாழ்க்கை வாழ்ந்தார். இவர் தனது பாதையை மாற்றிக்கொண்டாலும், தனது குடும்பத்துடனும், யூத சமுதாயத்துடனுமான தொடர்புகளை அவர் விட்டுவிடவில்லை. முதன்மையான இவரது உடன்பணியாளர்களும், மாணவர்களும் யூதர்களாகவே இருந்தனர். இவர்களுட் சிலர் இவரது நெருங்கிய உறவினர்கள்.ar:إميل دوركايم bat-smg:Emėlis Dorheims bg:Емил Дюркем br:Émile Durkheim bs:Émile Durkheim ca:Émile Durkheim cs:Émile Durkheim cy:Émile Durkheim da:Émile Durkheim de:Émile Durkheim el:Εμίλ Ντιρκάιμ en:Émile Durkheim eo:Émile Durkheim es:Émile Durkheim et:Émile Durkheim eu:Émile Durkheim fa:امیل دورکیم fi:Émile Durkheim fr:Émile Durkheim gl:Émile Durkheim he:אמיל דורקהיים hi:ईमिली डर्खीम hr:Émile Durkheim hu:Émile Durkheim id:Émile Durkheim io:Émile Durkheim is:Émile Durkheim it:Émile Durkheim ja:エミール・デュルケーム ko:에밀 뒤르켐 la:Aemilius Durkheim lb:Émile Durkheim lt:Émile Durkheim lv:Emīls Dirkems mk:Емил Диркем nl:Émile Durkheim nn:Émile Durkheim no:Emile Durkheim oc:Émile Durkheim pl:Émile Durkheim pms:Émile Durkheim pt:Émile Durkheim ro:Émile Durkheim ru:Дюркгейм, Эмиль sa:ईमिली डर्खीम simple:Émile Durkheim sk:Émile Durkheim sl:Émile Durkheim sv:Émile Durkheim sw:Émile Durkheim th:อีมิล เดอร์ไคหม์ tr:Émile Durkheim uk:Дюркгайм Еміль vi:Émile Durkheim vo:Émile Durkheim war:Émile Durkheim yo:Émile Durkheim zh:爱米尔·涂尔干

சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்