எம். ஜி. ஆர். திரை வரலாறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ம. கோ. இராமச்சந்திரன் 1936 தொடங்கி 1987 வரை திரைப்பட உலகில் நடிகராகவும், இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் பணியாற்றினார். அவர் நடித்த, இயக்கிய திரைப்படங்களின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது.

சதிலீலாவதி திரைப்படத்தில் எம். ஜி. ஆரின் தோற்றம்
உள்ளடக்கம்
எம்.ஜி.ஆர். நடித்த திரைப்படங்கள்
1930–1939 1940–1949 1950–1959 1960–1969 1970–1978 1990–1991

நடித்த, இயக்கிய திரைப்படங்கள்[தொகு]

1930 களில்[தொகு]

வரிசை
எண்
ஆண்டு திரைப்படம் தயாரிப்பு
நிறுவனம்
கதாபாத்திரம் இயக்குநர் குறிப்புகள்
1 1936 சதிலீலாவதி மனோரமா பிலிம்ஸ் ஆய்வாளர் ரெங்கைய நாயுடு எல்லிஸ் ஆர். டங்கன் முதல் திரைப்படம், சிறு வேடம்.
2 1936 இரு சகோதரர்கள் பரமேஸ்வரி சௌண்ட் பிக்சர்ஸ் இளம் முஸ்லிம் இளைஞன் எல்லிஸ் ஆர். டங்கன் சிறு வேடம்
3 1938 தட்சயக்ஞம் மெட்ரோபாலிடன் பிக்சர்ஸ் விஷ்ணு ராஜா சந்திரசேகர் புராணப்படம்
4 1938 வீர ஜெகதீஸ் வி. எஸ். டாக்கீஸ் பையன் டி. பி. கைலாசம்
ஆர். பிரகாஷ்
5 1939 மாயா மச்சீந்திரா மெட்ரோபாலிடன் பிக்சர்ஸ் சூரியகேது ராஜா சந்திரசேகர்
6 1939 பிரகலாதா சலீம் சங்கர் பிலிம்ஸ் இந்திரன் பி. என். ராவ் புராணப்படம்

1940 களில்[தொகு]

தொடர்
வரிசை
எண்
ஆண்டு திரைப்படம் தயாரிப்பு
நிறுவனம்
கதாபாத்திரம் இயக்குநர் குறிப்புகள்
7 1941 வேதவதி (சீதா ஜனனம்) சியாமளா பிக்சர்ஸ் இந்திரஜித் டி. ஆர். ரகுநாத்
8 1941 அசோக் குமார் முருகன் டாக்கீஸ் பிலிம் கம்பெனி தளபதி மகேந்திரன் ராஜா சந்திரசேகர் எம். கே. தியாகராஜ பாகவதருடன் நடித்த முதல் படம்
9 1942 தமிழறியும் பெருமாள் உமா பிக்சர்ஸ் சந்தானம் டி. ஆர். ரகுநாத்
10 1943 தாசிப் பெண் (ஜோதிமலர்) புவனேஸ்வரி பிக்சர்ஸ் கௌரவ நடிகர் எல்லிஸ் ஆர். டங்கன்
11 1944 ஹரிச்சந்திரா ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி பிலிம் கம்பெனி ஒரு அமைச்சர் கே. பி. நாகபூஷணம் பி. யு. சின்னப்பாவுடன் நடித்த முதல் திரைப்படம்
12 1945 சாலிவாகனன் பாஸ்கர் பிக்சர்ஸ் விக்ரமாதித்யன் பி. என். ராவ் வில்லனாக நடித்தார்
13 1945 மீரா சந்திரப்பிரபா சினிடோன் தளபதி ஜெயமல் எல்லிஸ் ஆர். டங்கன்
14 1946 ஸ்ரீ முருகன் ஜூபிடர் பிக்சர்ஸ் பரமசிவன் எம். சோமசுந்தரம்
வி. எஸ். நாராயண்
புராணப்படம். சிவ - பார்வதி நடனத்தில் சிவன் வேடத்தில் நடனமாடினார்.
ஜூபிடர் நிறுவனத்தில் எம். ஜி. ஆர். நடித்த முதல் படம்
15 1947 ராஜகுமாரி ஜூபிடர் பிக்சர்ஸ் மோகன் ஏ. எஸ். ஏ. சாமி கதாநாயகனாக நடித்த முதல் படம்
16 1947 பைத்தியக்காரன் என். எஸ். கே. பிலிம்ஸ் மூர்த்தி கிருஷ்ணன்-பஞ்சு இரண்டாவது கதாநாயகன்
17 1948 அபிமன்யு ஜூபிடர் பிக்சர்ஸ் அர்ச்சுனன் எம். சோமசுந்தரம்
ஏ. காசிலிங்கம்
18 1948 ராஜ முக்தி நரேந்திர பிக்சர்ஸ் மகேந்திரவர்மன் ராஜா சந்திரசேகர் வி. என். ஜானகி, பி. பானுமதி இருவரும் இந்தப் படத்தில் நடித்திருந்தனர்.
ஆனால் எம். ஜி. ஆருக்கு ஜோடியாக அல்லாமல் எம். கே. தியாகராஜ பாகவதருடன் ஜோடி சேர்ந்து நடித்தனர்.
19 1948 மோகினி ஜூபிடர் பிக்சர்ஸ் தளபதி விஜயகுமார் லங்கா சத்தியம் இரண்டாவது கதாநாயகன்.
வி. என். ஜானகியுடன் ஜோடியாக நடித்த முதல் படம்.
டி. எஸ். பாலையா பிரதான பாத்திரத்தில் மாதுரிதேவியுடன் ஜோடி சேர்ந்து நடித்தார்.
20 1949 ரத்னகுமார் முருகன் டாக்கீஸ் பிலிம் கம்பெனி பாலதேவன் கிருஷ்ணன்-பஞ்சு பி. பானுமதி கதாநாயகியாக நடித்த முதல் படம்.
ஆனால் அவர் கதாநாயகனாக நடித்த பி. யு..சின்னப்பாவுக்கு ஜோடியாக நடித்தார்.
எம். ஜி. ஆர். துணை நடிகர்.

1950 களில்[தொகு]

தொடர்
வரிசை
எண்
ஆண்டு திரைப்படம் தயாரிப்பு
நிறுவனம்
கதாபாத்திரம் இயக்குநர் குறிப்புகள்
21 1950 மருதநாட்டு இளவரசி ஜி. கோவிந்தன் அன் கோ. காண்டீபன் ஏ. காசிலிங்கம் ராஜகுமாரிக்குப் பின்னர்.தனிக் கதாநாயகனாக நடித்த இரண்டாவது படம்.
22 1950 மந்திரி குமாரி மாடர்ன் தியேட்டர்ஸ் தளபதி வீரமோகன் எல்லிஸ் ஆர். டங்கன் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தில் எம். ஜி. ஆர். நடித்த முதல் படம்.
23 1951 மர்மயோகி ஜூபிடர் பிக்சர்ஸ் இளவரசன் கரிகாலன் கே. ராம்நாத்
24 1951 ஏக்தா ராஜா ஜூபிடர் பிக்சர்ஸ் இளவரசன் கரிகாலன் கே. ராம்நாத் மர்மயோகி இந்திப் பதிப்பு
25 1951 சர்வாதிகாரி மாடர்ன் தியேட்டர்ஸ் பிரதாப் வீரன் டி. ஆர். சுந்தரம்
26 1951 சர்வாதிகாரி மாடர்ன் தியேட்டர்ஸ் பிரதாப் வீரன் டி. ஆர். சுந்தரம் சர்வாதிகாரி தெலுங்கு பதிப்பு
27 1952 அந்தமான் கைதி ராதாகிருஷ்ணா பிலிம்ஸ் நடராஜ் வி. கிருஷ்ணன் (இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை பின்னணி)
28 1952 குமாரி ஆர். பத்மநாபன்-ராஜேஸ்வரி விஜயன் ஆர். பத்மநாபன் கே. வி. மகாதேவன் இசையமைத்த முதல் எம். ஜி. ஆர். திரைப்படம்
29 1952 என் தங்கை அசோகா பிக்சர்ஸ் ராஜேந்திரன் சி. ஹெச் நாராயணமூர்த்தி எம். ஜி. ஆர். நடித்த பாத்திரம் இறுதியில் இறந்து போகும் முதல் திரைப்படம்
30 1953 நாம் ஜூபிடர் மேகலா பிக்சர்ஸ் குமரன் ஏ. காசிலிங்கம் எம் ஜி ஆர் எம் ஜி சக்ரபாணி, கருணாநிதி, பி எஸ் வீரப்பா கூட்டு தயாரிப்பு
31 1953 ஜெனோவா சந்திரா பிக்சர்ஸ் சிப்ரெக்கா எஃப். நாகூர் முதல் மலையாள திரைப்படம்
32 1953 ஜெனோவா சந்திரா பிக்சர்ஸ் சிப்ரெக்கா எஃப். நாகூர் மலையாளப் படத்தின் தமிழ் பதிப்பு
33 1954 பணக்காரி உமா பிக்சர்ஸ் ஆபீசர் சௌந்தர் கே. எஸ். கோபாலகிருஷ்ணன்
34 1954 மலைக்கள்ளன் பட்சிராஜா ஸ்டூடியோஸ் மலைக்கள்ளன்
அப்துல் ரஹீம்
குமாரதேவன்
எஸ். எம். ஸ்ரீராமுலு நாயுடு
35 1954 கூண்டுக்கிளி ஆர். ஆர். பிக்சர்ஸ் தங்கராஜ் டி. ஆர். ராமண்ணா சிவாஜி கணேசனுடன் நடித்த ஒரே திரைப்படம்
36 1955 குலேபகாவலி ஆர். ஆர். பிக்சர்ஸ் தாசன் டி. ஆர். ராமண்ணா விஸ்வநாதன்-ராமமூர்த்தி இசையமைத்த முதல் எம். ஜி. ஆர். நடித்த திரைப்படம்
37 1956 அலிபாபாவும் நாற்பது திருடர்களும் மாடர்ன் தியேட்டர்ஸ் அலி பாபா டி. ஆர். சுந்தரம் முதல் முழுநீள தமிழ் வண்ணப் படம் (கேவா கலர்)
38 1956 மதுரை வீரன் கிருஷ்ணா பிக்சர்ஸ் வீரன் டி. யோகானந்த் எம். ஜி. ஆர். நடித்த பாத்திரம் இறுதியில் இறந்து போகும் இரண்டாவது திரைப்படம்
39 1956 தாய்க்குப்பின் தாரம் தேவர் பிலிம்ஸ் முத்தையன் எம். ஏ. திருமுகம் தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் எம். ஜி. ஆர். நடித்த முதல் திரைப்படம்
40 1957 சக்கரவர்த்தித் திருமகள் உமா பிக்சர்ஸ் உதயசூரியன் ப. நீலகண்டன் ப. நீலகண்டன் இயக்கத்தில் எம். ஜி. ஆர். நடித்த முதல் திரைப்படம்
41 1957 ராஜ ராஜன் நீலா புரொடக்சன்ஸ் இளவரசன் ராஜராஜன் டி. ஆர். சுந்தரம்
42 1957 புதுமைப்பித்தன் சிவகாமி பிக்சர்ஸ் இளவரசன் ஜீவகன் டி. ஆர். ராமண்ணா
43 1957 மகாதேவி ஸ்ரீ கணேஷ் மூவிடோன் தளபதி வல்லபன் சுந்தர் ராவ் நட்கர்ணி
44 1958 நாடோடி மன்னன் எம். ஜி. ஆர். பிக்சர்ஸ் மார்த்தாண்டன்
வீராங்கன்
எம். ஜி. ராமச்சந்திரன் தயாரித்து இயக்கிய முதல் திரைப்படம்
இரட்டை வேடத்தில் நடித்த முதல் திரைப்படம்
பி. சரோஜாதேவியுடன் இணைந்து நடித்த முதல் திரைப்படம்
45 1959 தாய் மகளுக்குக் கட்டிய தாலி கல்பனா கலா மந்திர் கனகு ஆர். ஆர். சந்திரன் ஜமுனாவுடன் சேர்ந்து நடித்த ஒரே திரைப்படம்.
சி. என். அண்ணாதுரை கதை, வசனத்தில் நடித்த முதல் திரைப்படம்.

1960 களில்[தொகு]

தொடர்
வரிசை
எண்
ஆண்டு திரைப்படம் தயாரிப்பு
நிறுவனம்
கதாபாத்திரம் இயக்குநர் குறிப்புகள்
46 1960 பாக்தாத் திருடன் சதர்ன் மூவீஸ் அலி டி. பி. சுந்தரம் வைஜயந்திமாலாவுடன் சேர்ந்து நடித்த ஒரே திரைப்படம்
47 1960 ராஜா தேசிங்கு கிருஷ்ணா பிக்சர்ஸ் தேசிங்கு ராஜன்
மொகமட்கான்
டி. ஆர். ரகுநாத் எஸ். எஸ். ராஜேந்திரனுடன் சேர்ந்து நடித்த முதல் திரைப்படம்.
எம். ஜி. ஆர். நடித்த பாத்திரம் இறுதியில் இறந்து போகும் மூன்றாவது திரைப்படம்
48 1960 மன்னாதி மன்னன் நடேஷ் ஆர்ட் பிக்சர்ஸ் இளவரசன் மணிவண்ணன் எம். நடேசன்
49 1961 அரசிளங்குமரி ஜூபிடர் பிக்சர்ஸ் அறிவழகன் ஏ. எஸ். ஏ. சாமி
ஏ. காசிலிங்கம்
நடித்த கடைசி ஜூபிடர் நிறுவன திரைப்படம்
50 1961 திருடாதே ஏ. எல். எஸ். புரொடக்சன்ஸ் பாலு ப. நீலகண்டன்
51 1961 சபாஷ் மாப்பிளே ராகவன் புரொடக்சன்ஸ் வாசு எஸ். ராகவன்
52 1961 நல்லவன் வாழ்வான் அரசு பிக்சர்ஸ் முத்து ப. நீலகண்டன் சி. என். அண்ணாதுரை கதை, வசனம் எழுதினார்
53 1961 தாய் சொல்லைத் தட்டாதே தேவர் பிலிம்ஸ் போலீஸ் ஆஃபீசர் ராஜு எம். ஏ. திருமுகம்
54 1962 ராணி சம்யுக்தா சரஸ்வதி பிக்சர்ஸ் பிரிதிவிராஜன் டி. யோகானந்த் எம். ஜி. ஆர். நடித்த பாத்திரம் இறுதியில் இறந்து போகும் நாலாவது திரைப்படம்
55 1962 மாடப்புறா பி. வி. என். புரொடக்சன்ஸ் ராமு எஸ். ஏ. சுப்பாராமன்
56 1962 தாயைக்காத்த தனயன் தேவர் பிலிம்ஸ் வேட்டைக்காரன் சேகர் எம். ஏ. திருமுகம்
57 1962 குடும்பத் தலைவன் தேவர் பிலிம்ஸ் வாசு எம். ஏ. திருமுகம்
58 1962 பாசம் ஆர். ஆர். பிக்சர்ஸ் கோபி டி. ஆர். ராமண்ணா எம். ஜி. ஆர். நடித்த பாத்திரம் இறுதியில் இறந்து போகும் ஐந்தாவது திரைப்படம்
59 1962 விக்ரமாதித்தன் பாரத் புரொடக்சன்ஸ் ராஜா விக்ரமாதித்தன் டி. ஆர். ரகுநாத்
என். எஸ். ராமதாஸ்
60 1963 பணத்தோட்டம் சரவணா பிலிம்ஸ் செல்வம் கே. சங்கர் கே. சங்கர் இயக்கத்தில் நடித்த முதல் படம்
சரவணா பிலிம்ஸ் நிறுவனத்துக்காக நடித்த முதல் படம்.
61 1963 கொடுத்து வைத்தவள் ஈ. வி. ஆர். பிக்சர்ஸ் முருகன்
கட்டிட ஒப்பந்தக்காரர் செல்வம்
ப. நீலகண்டன்
62 1963 தர்மம் தலைகாக்கும் தேவர் பிலிம்ஸ் டாக்டர் சந்திரன் எம். ஏ. திருமுகம்
63 1963 கலை அரசி சரோடி பிரதர்ஸ் மோகன்
வேற்றுக்கோள் கோமாளி
ஏ. காசிலிங்கம்
64 1963 பெரிய இடத்துப் பெண் ஆர். ஆர். பிக்சர்ஸ் அழகப்பன்/முருகப்பன் டி. ஆர். ராமண்ணா
65 1963 ஆனந்த ஜோதி ஹரிஹரன் பிலிம்ஸ் பள்ளி ஆசிரியர் ஆனந்த் வி. என். ரெட்டி தேவிகாவுடன் நடித்த ஒரே திரைப்படம்
66 1963 நீதிக்குப்பின் பாசம் தேவர் பிலிம்ஸ் வழக்கறிஞர் கோபால் எம். ஏ. திருமுகம்
67 1963 காஞ்சித்தலைவன் மேகலா பிக்சர்ஸ் நரசிம்ம பல்லவன் ஏ. காசிலிங்கம்
68 1963 பரிசு கௌரி பிக்சர்ஸ் இரகசிய போலீஸ் வேணு டி. யோகானந்த்
69 1964 வேட்டைக்காரன் தேவர் பிலிம்ஸ் பாபு, வேட்டைக்காரன் எம். ஏ. திருமுகம்
70 1964 என் கடமை நடேஷ் ஆர்ட் பிக்சர்ஸ் போலீஸ் ஆபீசர் நாதன் எம். நடேசன்
71 1964 பணக்கார குடும்பம் ஆர். ஆர். பிக்சர்ஸ் நல்ல தம்பி டி. ஆர். ராமண்ணா
72 1964 தெய்வத்தாய் சத்யா மூவீஸ் சிபிஐ அதிகாரி மாறன் பி. மாதவன்
73 1964 தொழிலாளி தேவர் பிலிம்ஸ் தொழிலாளி ராஜு எம். ஏ. திருமுகம்
74 1964 படகோட்டி சரவணா பிலிம்ஸ் மீனவர் மாணிக்கம் டி. பிரகாஷ் ராவ் நடித்த முதல் ஈஸ்ட்மன் வண்ண திரைப்படம்
75 1964 தாயின் மடியில் அன்னை பிலிம்ஸ் ஜாக்கி ராஜா ஏ. சுப்பா ராவ்
76 1965 எங்க வீட்டுப் பிள்ளை விஜயா கம்பைன்ஸ் ராமு (ராமன்)
இளங்கோ (லட்சுமணன்)
சாணக்யா இரட்டை வேடங்களில்
77 1965 பணம் படைத்தவன் ஆர். ஆர். பிக்சர்ஸ் ராஜா டி. ஆர். ராமண்ணா
78 1965 ஆயிரத்தில் ஒருவன் பத்மினி பிக்சர்ஸ் மணிமாறன் பி. ஆர். பந்துலு ஜெயலலிதாவுடன் சேர்ந்து நடித்த முதல் படம்
79 1965 கலங்கரை விளக்கம் சரவணா பிலிம்ஸ் வழக்கறிஞர் ரவி கே. சங்கர்
80 1965 கன்னித்தாய் தேவர் பிலிம்ஸ் கேப்டன் சரவணன் எம். ஏ. திருமுகம்
81 1965 தாழம்பூ ஸ்ரீ பாலமுருகன் பிலிம்ஸ் துரை (பட்டதாரி) என். எஸ். ராமதாஸ்
82 1965 ஆசை முகம் மோகன் புரொடக்சன்ஸ் மனோகர், வஜ்ரவேலு பி. புல்லையா
83 1966 அன்பே வா ஏவி. எம். புரொடக்சன்ஸ் பாலு/முதலாளி ஜே. பி. ஏ. சி. திருலோகச்சந்தர்
84 1966 நான் ஆணையிட்டால் சத்யா மூவீஸ் பாஷா அல்லது பாண்டியன் சாணக்யா
85 1966 முகராசி தேவர் பிலிம்ஸ் போலீஸ் அதிகாரி ராமு எம். ஏ. திருமுகம் ஜெமினி கணேசனோடு சேர்ந்து நடித்த ஒரே திரைப்படம்
86 1966 நாடோடி பத்மினி பிக்சர்ஸ் தியாகு பி. ஆர். பந்துலு
87 1966 சந்திரோதயம் சரவணா பிலிம்ஸ் பத்திரிகையாளர் சந்திரன் கே. சங்கர்
88 1966 தாலி பாக்கியம் வரலட்சுமி பிக்சர்ஸ் முருகன் கே. பி. நாகபூஷணம்
89 1966 தனிப் பிறவி தேவர் பிலிம்ஸ் இரும்புத்தொழிலாளி முத்தையா எம். ஏ. திருமுகம்
90 1966 பறக்கும் பாவை ஆர். ஆர். பிக்சர்ஸ் ஜீவா, டாக்சி ஓட்டுநர் டி. ஆர். ராமண்ணா
91 1966 பெற்றால்தான் பிள்ளையா ஸ்ரீ முத்துக்குமரன் பிக்சர்ஸ் ஆனந்தன் (அனாதை) கிருஷ்ணன்-பஞ்சு எம். ஆர். ராதாவுடன் சேர்ந்து நடித்த இருபத்தைந்தாவதும் இறுதியுமான திரைப்படம்
92 1967 தாய்க்குத் தலைமகன் தேவர் பிலிம்ஸ் மருது எம். ஏ. திருமுகம் இத்திரைப்படம் வெளியாவதற்கு முதல் நாள் (12. சனவரி 1967) எம். ஜி. ஆரை எம். ஆர். ராதா துப்பாக்கியால் சுட்டுக் காயப்படுத்தினார்.
93 1967 அரச கட்டளை சத்தியராஜா பிக்சர்ஸ் விஜயன் எம். ஜி. சக்ரபாணி எம். ஜி. ஆரோடு பி. சரோஜாதேவி நடித்த கடைசித் திரைப்படம்
94 1967 காவல்காரன் சத்யா மூவீஸ் மணி (ஓட்டுநர்) ப. நீலகண்டன்
95 1967 விவசாயி தேவர் பிலிம்ஸ் முத்தையா எம். ஏ. திருமுகம்
96 1968 ரகசிய போலீஸ் 115 பத்மினி பிக்சர்ஸ் ராமு, ரகசிய போலீஸ் 115 பி. ஆர். பந்துலு
97 1968 தேர்த் திருவிழா தேவர் பிலிம்ஸ் சரவணன்
(ஒரு காட்சியில் எம். ஜி. ஆர்)
எம். ஏ. திருமுகம்
98 1968 குடியிருந்த கோயில் சரவணா ஸ்க்ரீன்ஸ் ஆனந்த்
பாபு (சேகர்)
கே. சங்கர்
99 1968 கண்ணன் என் காதலன் சத்யா மூவீஸ் "பியானோ" கண்ணன் ப. நீலகண்டன்
100 1968 ஒளி விளக்கு ஜெமினி ஸ்டூடியோஸ் முத்து சாணக்யா ஜெமினி நிறுவனத்தில் நடித்த ஒரே திரைப்படம். இலங்கையில் வெள்ளி விழா கொண்டாடியது.
101 1968 கணவன் வள்ளி பிலிம்ஸ் வேலையா ப. நீலகண்டன்
102 1968 புதிய பூமி ஜே. ஆர். மூவீஸ் டாக்டர் கதிரவன் சாணக்யா
103 1968 காதல் வாகனம் தேவர் பிலிம்ஸ் சுந்தரம் எம். ஏ. திருமுகம்
104 1969 அடிமைப் பெண் எம். ஜி. ஆர். பிக்சர்ஸ் வேங்கைமலை அரசன் (தந்தை)
இளவரசன் வேங்கையன் (மகன்)
கே. சங்கர் சொந்த தயாரிப்பு
105 1969 நம் நாடு (1969 திரைப்படம்) விஜயா இன்டர்நேஷனல் துரை சி. பி. ஜம்புலிங்கம்

1970 களில்[தொகு]

தொடர்
வரிசை
எண்
ஆண்டு திரைப்படம் தயாரிப்பு
நிறுவனம்
கதாபாத்திரம் இயக்குநர் குறிப்புகள்
106 1970 மாட்டுக்கார வேலன் ஜெயந்தி பிலிம்ஸ் வேலன்
ரகுநாத்
ப. நீலகண்டன் இரட்டை வேடம்
107 1970 என் அண்ணன் வீனஸ் பிக்சர்ஸ் ரெங்கன் ப. நீலகண்டன்
108 1970 தலைவன் தாமஸ் பிக்சர்ஸ் இரகசிய போலீஸ் இளங்கோ பி. ஏ. தாமஸ்
சிங்கமுத்து
109 1970 தேடிவந்த மாப்பிள்ளை பத்மினி பிக்சர்ஸ் சங்கர் பி. ஆர். பந்துலு
110 1970 எங்கள் தங்கம் மேகலா பிக்சர்ஸ் தங்கம் கிருஷ்ணன்-பஞ்சு
111 1971 குமரிக்கோட்டம் கே. சி. பிலிம்ஸ் கோபால் ப. நீலகண்டன்
112 1971 ரிக்‌ஷாக்காரன் சத்யா மூவீஸ் செல்வம் எம். கிருஷ்ணன் நாயர் சிறந்த நடிகருக்கான தேசிய திரைப்பட விருது
113 1971 நீரும் நெருப்பும் நியூ மணி ஜே சினி புரொடக்சன்ஸ் இளவரசன் மணிவண்ணன்
இளவரசன் கரிகாலன்
ப. நீலகண்டன் இரட்டை வேடம்
114 1971 ஒரு தாய் மக்கள் நாஞ்சில் புரொடக்சன்ஸ் கண்ணன் ப. நீலகண்டன்
115 1972 சங்கே முழங்கு வள்ளி பிலிம்ஸ் முருகன் ப. நீலகண்டன் லட்சுமியுடன் ஜோடியாக நடித்த முதல் திரைப்படம்
116 1972 நல்ல நேரம் தேவர் பிலிம்ஸ் ராஜு எம். ஏ. திருமுகம் தேவர் பிலிம்ஸ் நிறுவனத்தில் நடித்த இறுதி திரைப்படம்
117 1972 ராமன் தேடிய சீதை ஜெயந்தி பிலிம்ஸ் கோடீஸ்வரர் எஸ். ஜே. ராமன் ப. நீலகண்டன்
118 1972 நான் ஏன் பிறந்தேன் காமாட்சி ஏஜென்சீஸ் கண்ணன் எம். கிருஷ்ணன் நாயர்
119 1972 அன்னமிட்ட கை ராமச்சந்திரா புரொடக்சன்ஸ் துரைராஜ் எம். கிருஷ்ணன் நாயர் நடித்த கடைசி கருப்பு-வெள்ளை திரைப்படம்
120 1972 இதய வீணை உதயம் புரொடக்சன்ஸ் சௌந்தரம் கிருஷ்ணன்-பஞ்சு திமுக உறுப்பினராக இறுதி திரைப்படம்
121 1973 உலகம் சுற்றும் வாலிபன் எம். ஜி. ஆர். பிக்சர்ஸ் முருகன்
ராஜு
எம். ஜி. ராமச்சந்திரன் தயாரித்து இயக்கிய இரண்டாவது திரைப்படம்
122 1973 பட்டிக்காட்டு பொன்னையா வசந்த் பிக்சர்ஸ் பொன்னையா
முத்தையா
பி. எஸ். ரெங்கா ஜெயலலிதாவுடன் ஜோடியாக நடித்த கடைசிப் படம்
123 1974 நேற்று இன்று நாளை அமல்ராஜ் பிலிம்ஸ் மாணிக்கம் என்ற ரத்தினம்
குமார்
ப. நீலகண்டன்
124 1974 உரிமைக்குரல் சித்ராலயா பிலிம்ஸ் கோபிநாத் (கோபி) சி. வி. ஸ்ரீதர் ஸ்ரீதர் இயக்கத்தில் நடித்த முதல் திரைப்படம்
125 1974 சிரித்து வாழ வேண்டும் உதயம் புரொடக்சன்ஸ் இன்ஸ்பெக்டர் ராமு
உஸ்தாத் அப்துல் ரஹ்மான்
எஸ். எஸ். பாலன்
126 1975 நினைத்ததை முடிப்பவன் ஓரியன்டல் பிக்சர்ஸ் சௌந்தரம் (பாடகன்)
ரஞ்சித் குமார் (வியாபாரி)
ப. நீலகண்டன் எஸ். ஏ. அசோகனுடன் நடித்த 59 ஆவதும் இறுதியுமான திரைப்படம்
127 1975 நாளை நமதே கஜேந்திரா பிலிம்ஸ் சங்கர்
விஜயகுமார்
கே. எஸ். சேதுமாதவன்
128 1975 இதயக்கனி சத்யா மூவீஸ் போலீஸ் அதிகாரி மோகன் ஏ. ஜெகந்நாதன் ராதா சலூஜாவுடன் நடித்த முதல் திரைப்படம்
129 1975 பல்லாண்டு வாழ்க உதயம் புரொடக்சன்ஸ் ராஜன் (சின்னையா - உதவி சிறை அதிகாரி) கே. சங்கர்
130 1976 நீதிக்குத் தலைவணங்கு ஸ்ரீ உமையாம்பிகை புரொடக்சன்ஸ் விஜே ப. நீலகண்டன்
131 1976 உழைக்கும் கரங்கள் கே சீ பிலிம்ஸ் ரெங்கன் கே. சங்கர் 30 வருடங்களுக்கு முன் ஸ்ரீ முருகன் திரைப்படத்தில் ஆடியபின் இத்திரைப்படத்தில் பரமசிவனாக நடனம் ஆடினார்.
132 1976 ஊருக்கு உழைப்பவன் வீனஸ் பிக்சர்ஸ் போலீஸ் அதிகாரி செல்வம்
தொழிலதிபர் ராஜா
எம். கிருஷ்ணன் நாயர்
133 1977 இன்றுபோல் என்றும் வாழ்க சுப்பு புரொடக்சன்ஸ் விவசாயி முருகன் கே. சங்கர் ராதா சலூஜாவுடன் நடித்த இரண்டாவதும் இறுதியுமான திரைப்படம்
134 1977 நவரத்தினம் சி. என். வி. மூவீஸ் கோடீஸ்வரர் தங்கம் ஏ. பி. நாகராஜன் 9 நடிகைகளுடன் நடித்தார்.
135 1977 மீனவ நண்பன் முத்து எண்டர்பிரைசஸ் குமரன் ஸ்ரீதர்
136 1978 மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் சோலேஸ்வர் கம்பைன்ஸ் பைந்தழிழ் குமரன் அல்லது
இளவரசன் சுந்தர பாண்டியன்
எம். ஜி. ராமச்சந்திரன்
கே. சங்கர்

1990 களில்[தொகு]

தொடர்
வரிசை
எண்
ஆண்டு திரைப்படம் தயாரிப்பு
நிறுவனம்
கதாபாத்திரம் இயக்குநர் குறிப்புகள்
137 1990 அவசர போலீஸ் 100 சுதா சினி மூவீஸ் ராஜு கே. பாக்யராஜ் முடிக்கப்படாத அண்ணா நீ என் தெய்வம் என்ற எம். ஜி. ஆர். நடித்த திரைப்படம் இத் திரைப்படத்துடன் சேர்க்கப்பட்டது.
எம். என். நம்பியாருடன் சேர்ந்து நடித்த கடைசி திரைப்படம்
138 1991 நல்லதை நாடு கேட்கும் ஜேப்பியார் பிக்சர்ஸ் ஜேப்பியார்
எம். கர்ணன்
இதே தலைப்பில் எம். ஜி. ஆர். நடித்து ஜே. ஆர். மூவீஸ் தயாரித்த திரைப்படம் இத்திரைப்படத்துடன் சேர்க்கப்பட்டது.

முடிக்கப்படாத, வெளியிடப்படாத திரைப்படங்கள்[தொகு]

திரைப்படம் குறிப்புகள்
சாயா "முதல் கதாநாயகன்"
- கதாநாயகி : டி. வி. குமுதினி
– 1941 இல் வெளிவரவிருந்தது
சிலம்புக் குகை - 1956 இல் வெளிவரவிருந்தது
மலை நாட்டு இளவரசன் - 1956 இல் வெளிவரவிருந்தது
குமாரதேவன் - 1956 இல் வெளிவரவிருந்தது
ஊமையன் கோட்டை - 1956 இல் வெளிவரவிருந்தது
ரங்கோன் ராதா
உத்தம புத்திரன் - இதே தலைப்பில் சிவாஜி கணேசன் நடித்த படம் வந்ததால் கைவிடப்பட்டது.
பின்னர் நீரும் நெருப்பும் என்ற பெயரில் தயாரிக்கப்பட்டது.
வாழப் பிறந்தவன் - வித்துவான் வி. லட்சுமணன் தயாரித்து எஃப். நாகூர் இயக்கத்தில் 1957 இல் வெளிவரவிருந்தது
பவானி 1957 இல் வெளிவரவிருந்தது. கவிஞர் கண்ணதாசன் கதை வசனம் பாடல்கள் எழுதி கூட்டு தயாரிப்பு

அஞ்சலி தேவி கதைநாயகி.படம் இருபதாயிரம் அடி வளந்த நிலையில் நின்றது. எம் ஜி ஆர் கவிஞர் பங்கை கொடுத்து அவருக்கு நஷ்டம் இல்லாமல்; அதை எம் ஜி ஆர் பிக்சர்ஸ் க்கு வாங்கி கொண்டார்.

ஏழைக்கு காவலன் - 1957 இல் வெளிவரவிருந்தது
அதிரூப அமராவதி - 1958 இல் வெளிவரவிருந்தது
காத்தவராயன் - 1958 இல் வெளிவரவிருந்தது - பின்னர் சிவாஜியை வைத்து எடுக்கும்படி எம். ஜி. ஆர். இயக்குநர் டி. ஆர். ராமண்ணாவிடம் சொன்னார்.
அட்வகேட் அமரன் - எம். ஜி. ஆர். நாடகக் குழுவின் ஒரு நாடகம்
– 1959 இல் வெளிவரவிருந்தது
காணி நிலம் - 1959 இல் வெளிவரவிருந்தது
கேள்வி பதில் - 1959 இல் வெளிவரவிருந்தது
நடிகன் குரல் - 1959 இல் வெளிவரவிருந்தது
நாடோடியின் மகன் - நாடோடி மன்னன் இரண்டாம் பாகம்
– 1959 இல் வெளிவரவிருந்தது
பொன்னியின் செல்வன் - கல்கி கிருஷ்ணமூர்த்தியின் நாவல்
– 1959 இல் வெளிவரவிருந்தது
தென்னரங்க கரைi - 1959 இல் வெளிவரவிருந்தது
தூங்காதே தம்பி தூங்காதே - 1959 இல் வெளிவரவிருந்தது
இத்திரைப்படம் பின்னர் ஏவி எம் தயாரிப்பில் கமல் ஹாசன் நடித்து 1983 ஆம் ஆண்டு நவம்பரில் வெளியானது. அப்போது எம். ஜி. ஆர். தமிழ் நாடு முதலமைச்சராக இருந்தார்.
கேரள கன்னி - 1960 இல் வெளிவரவிருந்தது
பரமபிதா - சரவணா பிலிம்ஸ் தயாரித்து கே. சங்கர் இயக்கத்தில் 1961 ஆம் ஆண்டு வெளிவர இருந்தது. சரோஜாதேவி உடன் நடிப்பதாகவும் வண்ணப் படம் எனவும் அறிவிக்கப்பட்டது
மாடி வீட்டு ஏழை - 1961 ஆம் ஆண்டு நடிகர் ஜே. பி. சந்திரபாபு தயாரித்த திரைப்படம். கருத்து வேறுபாடுகளால் கைவிடப்பட்டது. பின் 1981 ஆம் ஆண்டு சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியானது.
இது சத்தியம் - 1962 இல் வெளிவரவிருந்தது
கே. சங்கர் இயக்கத்தில் பின் எஸ். ஏ. அசோகன் நடித்து ஆகஸ்ட் 30, 1962 வெளியானது
அன்று சிந்திய ரத்தம் - ஸ்ரீதர் இயக்கத்தில் 1963 இல் வெளிவரவிருந்தது
6 வருடங்களின் பின்னர் சிவாஜி கணேசன் நடித்து வெளியானது
மகன் மகள் - 1963 இல் வெளிவரவிருந்தது
வேலுத்தேவன் - 1964 இல் வெளிவரவிருந்தது
இன்ப நிலா - 1966 இல் வெளிவரவிருந்தது
ஏழைக்குக் காவலன் - 1966 இல் வெளிவரவிருந்தது
மறு பிறவி
- தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் 1967 இல் வெளிவரவிருந்தது
தந்தையும் மகனும் - தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் 1967 இல் வெளிவரவிருந்தது
கங்கையிலிருந்து கிரெம்ளின் வரை - 1969 இல் வெளிவரவிருந்தது
இணைந்த கைகள் - எம். ஜி. ஆர். பிக்சர்ஸ் தயாரிப்பில் 1969 இல் வெளிவரவிருந்தது
யேசுநாதர்
- 1969 இல் வெளியாக இருந்தது.
இந்தப் படத்தைத் தயாரிக்கவிருந்த பி. ஏ. தாமஸ் இரண்டு வருடங்களின் பின் தலைவன்தலைவன் என்ற திரைப்படத்தைத் தயாரித்து வெளியிட்டார்.
அணையா விளக்கு - 1973 இல் வெளியாகவிருந்தது பின்னர் இதே அணையா விளக்கு என்ற பெயரில் மு. க. நடித்து வெளிவந்தது.
கிழக்கு ஆபிரிக்காவில் ராஜு - உலகம் சுற்றும் வாலிபன் இரண்டாவது பாகமாக எடுக்கத் திட்டமிடப்பட்டது. ஆனால் எம். ஜி. ஆருக்கு நேரமின்மை காரணமாக கைவிடப்பட்டது.
மக்கள் என் பக்கம் - 1974 இல் வெளியாகவிருந்தது.
சத்யராஜ் நடித்து, பின்னர் வெளிவந்த மக்கள் என் பக்கம் இதனோடு தொடர்புடையதல்ல.
சமூகமே நான் உனக்குச் சொந்தம் - 1974 இல் வெளியாகவிருந்தது. லதா ஜோடியாக நடிக்கவிருந்தார்.
தியாகத்தின் வெற்றி - 1974 இல் வெளியாகவிருந்தது
நானும் ஒரு தொழிலாளி - ஸ்ரீதர் இயக்கத்தில் 1975 இல் வெளியாகவிருந்தது.
- இதே [[நானும் ஒரு தொழிலாளி தலைப்பில் ஸ்ரீதர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடித்த திரைப்படம் 1986 இல் வெளியானது.
அமைதி - 1976 இல் வெளியாகவிருந்தது
அண்ணா நீ என் தெய்வம் - ஸ்ரீதர் இயக்கத்தில் 1976 இல் வெளியாகவிருந்தது
முடிக்கப்படாத இத்திரைப்படத்தின் சில காட்சிகளை வைத்து எம். ஜி. ஆர். இறந்தபின் இயக்குநர் கே. பாக்யராஜ் அவசர போலீஸ் 100 என்ற பெயரில் ஒரு திரைப்படம் தயாரித்து வெளியிட்டார்.
புரட்சிப் பித்தன் - 1976 இல் வெளியாகவிருந்தது
நல்லதை நாடு கேட்கும் - 1977 இல் வெளியாகவிருந்தது
5% படமாக்கப்பட்டிருந்தது. அதையும் சேர்த்து இதே பெயரில் ஜேப்பியார் 1991 ஆம் ஆண்டு இன்னொரு திரைப்படத்தை தயாரித்து வெளியிட்டார்.
அக்கரைப் பச்சை' - 1978 இல் வெளியாகவிருந்தது
கேப்டன் ராஜா - 1978 இல் வெளியாகவிருந்தது
இளைய தலைமுறை - 1978 இல் வெளியாகவிருந்தது
இதுதான் பதில் - கே. சங்கர் இயக்கத்தில் 2 பாடல்கள் பதிவாயின
– 1980 இல் வெளியாகவிருந்தது
உன்னை விட மாட்டேன் - 1980 இல் வெளியாகவிருந்தது

உசாத்துணைகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._ஜி._ஆர்._திரை_வரலாறு&oldid=3791730" இலிருந்து மீள்விக்கப்பட்டது