பணக்காரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பணக்காரி
இயக்கம்கே. எஸ். கோபாலகிருஷ்ணன்
தயாரிப்புஉமா பிக்சர்ஸ்
இசைஎஸ். வி. வெங்கட்ராமன்
நடிப்புஎம். ஜி. ராமச்சந்திரன்
வி. நாகைய்யா
ஜாவர் சீதாராமன்
டி. எஸ். துரைராஜ்
கே. ஏ. தங்கவேலு
டி. ஆர். ராஜகுமாரி
மங்கலம்
டி. எஸ். ஜெயா
கே. ஆர். செல்லம்
ஒளிப்பதிவுகுமாரதேவன்
வெளியீடுஏப்ரல் 1, 1953
நீளம்14127 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பணக்காரி 1953 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ராமச்சந்திரன், டி. ஆர். ராஜகுமாரி மற்றும் பலரும் நடித்திருந்தனர். எஸ். வி. வெங்கட்ராமன் இசையமைக்க பாபநாசம் சிவன், தஞ்சை ராமையாதாஸ் ஆகியோர் பாடல்களை இயற்றினர்.

தயாரிப்பு விபரம்[தொகு]

ரஷ்ய எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய் எழுதிய அன்னா கரீனா என்ற நாவலைத் தழுவி அதே தலைப்பில் எடுக்கப்பட்ட ஆங்கில திரைப்படம்1935 ஆம் ஆண்டு வெளியானது. அத் திரைப்படம் இந்தியாவில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதனால், முன்னர் சக்ரதாரி திரைப்படத்தை இயக்கிய கே. எஸ். கோபாலகிருஷ்ணன், அன்னா கரீனா கதையை தமிழில் பணக்காரி என்ற பெயரில் இயக்கி வெளியிட்டார். ஆனால் இத்திரைப்படம் வெற்றி பெறவில்லை.
துணுக்கு தகவல்: இதற்கு முன் பிச்சைக்காரி என ஒரு தமிழ்த் திரைப்படம் வெளியாகி வெற்றி பெற்றது. இதனால் விமர்சகர்கள் 'பணக்காரியை வாங்கியவர்கள் பிச்சைக்காரர் ஆனார்கள், பிச்சைக்காரியை வாங்கியவர்கள் பணக்காரர் ஆனார்கள்' என எழுதினார்கள்.

உசாத்துணை[தொகு]

(in தமிழ்) சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004 இம் மூலத்தில் இருந்து 2016-11-21 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20161121153846/http://www.lakshmansruthi.com/cineprofiles/1953-cinedetails18.asp. பார்த்த நாள்: 2016-11-02. 

"https://ta.wikipedia.org/w/index.php?title=பணக்காரி&oldid=3792797" இலிருந்து மீள்விக்கப்பட்டது