பி. புல்லையா
Appearance
பி. புல்லையா | |
---|---|
பிறப்பு | 2 மே 1911 நெல்லூர், ஆந்திரப் பிரதேசம், இந்தியா |
இறப்பு | 1985 |
பணி | திரைப்பட இயக்குனர் திரைப்படத் தயாரிப்பாளர் |
வாழ்க்கைத் துணை | பி. சாந்தகுமாரி |
பி. புல்லையா (P. Pullaiah, 1911–1985) (Telugu: పి.పుల్లయ్య) தெலுங்கு, தமிழ்த் திரைப்பட இயக்குநராவார். தெலுங்குத் திரைப்படத்துறைக்கான இவரின் பங்களிப்பினைப் பாராட்டி இவருக்கு இரகுபதி வெங்கையா விருது எனும் விருது வழங்கப்பட்டது. இவரை Daddy என திரைத்துறையினர் அழைத்தனர்.[1]
சொந்த வாழ்க்கை
[தொகு]தெலுங்கு, தமிழ்த் திரைப்பட நடிகையான பி. சாந்தகுமாரி இவரின் மனைவியாவார்.
திரைத்துறைக்கான பங்களிப்புகள்
[தொகு]இயக்கிய தமிழ்த் திரைப்படங்கள்
[தொகு]- விஜயலட்சுமி (1946)
- பக்த ஜனா (1948)
- மனம்போல் மாங்கல்யம் (1953)
- பெண்ணின் பெருமை (1956)
- வணங்காமுடி (1957)[2]
- அதிசய திருடன் (1958)[3]
- இல்லறமே நல்லறம் (1958)
- கலைவாணன் (1959)[1]
- ஆசை முகம் (1964)
பின்னாளில் புகழீட்டிய யு. விஸ்வேசுவர ராவ், கே. இராகவேந்திர ராவ் ஆகிய இயக்குநர்கள் இவரிடம் துணை இயக்குநராகப் பணியாற்றியவர்கள் ஆவர்.[1]
தமது மகள் பத்மாவின் பெயரினை உள்ளடக்கி பத்மசிறீ எனும் படத் தயாரிப்பு நிறுவனத்தை நிறுவி, புல்லையா - சாந்த குமாரி தம்பதியினர் திரைப்படங்களைத் தயாரித்தனர்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 ராண்டார் கை (18 October 2014). "Blast from the past: Kalaivaanan 1959". தி இந்து. http://www.thehindu.com/features/cinema/cinema-columns/blast-from-the-past-kalaivaanan-1959/article6514826.ece. பார்த்த நாள்: 4 நவம்பர் 2016.
- ↑ ராண்டார் கை (6 ஆகஸ்ட் 2011). "Vanangamudi 1957". தி இந்து. http://www.thehindu.com/features/cinema/vanangamudi-1957/article2330545.ece. பார்த்த நாள்: 4 நவம்பர் 2016.
- ↑ ராண்டார் கை (18 June 2016). "Athisaya Thirudan (1958)". தி இந்து. http://www.thehindu.com/features/cinema/athisaya-thirudan-1958/article8745787.ece. பார்த்த நாள்: 4 நவம்பர் 2016.