மகாதேவி
| மகாதேவி | |
|---|---|
சுவரிதழ் | |
| இயக்கம் | சுந்தர் ராவ் நட்கர்ணி |
| தயாரிப்பு | சுந்தர் ராவ் நட்கர்ணி ஸ்ரீ கணேஷ் மூவி டோன் பி. ராதாகிருஷ்ணா |
| கதை | கண்ணதாசன் |
| இசை | விஸ்வநாதன் ராமமூர்த்தி |
| நடிப்பு | ம. கோ. இராமச்சந்திரன் ஓ. ஏ. கே. தேவர் பி. எஸ். வீரப்பா மாஸ்டர் முரளி சந்திரபாபு கருணாநிதி சாவித்திரி சுசீலா டி. பி. முத்துலட்சுமி |
| விநியோகம் | சிறீ கிருஷ்ணா பிலிம்ஸ்[1] |
| வெளியீடு | நவம்பர் 22, 1957 |
| நீளம் | 17461 அடி |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
மகாதேவி 1957 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கண்ணதாசன் திரைக்கதை உரையாடல் எழுத சுந்தர் ராவ் நட்கர்ணி இயக்கினார். இத்திரைப்படத்தில் ம. கோ. இராமச்சந்திரன், ஓ. ஏ. கே. தேவர் மற்றும் பலரும் நடித்திருந்தனர். இப்படம் ஆர். ஜி. கட்கரி எழுதிய புண்ய பிரபவ் என்ற புதினத்தை அடிப்படையாகக் கொண்டது.[2] இந்தத் திரைப்படம் 22 நவம்பர் 1957 அன்று வெளியானது.[3]
கதை
[தொகு]போரில் தோல்வியுற்ற மன்னனையும், இளவரசி மகாதேவியையும் கைது செய்து தன் நாட்டுக்கு அரசன் அழைத்து வருகிறான். அவர்களின் நல்ல குணத்தை அறிந்த மன்னன் அவர்களை தன் மரியாதைக்குரிய விருந்தினர்களாக தன் அரண்மனையிலேயே தங்கவைக்கிறான். வெற்றி பெற்ற மன்னருக்கு மங்கம்மா என்ற வளர்ப்பு மகளும் ஒரு மகனும் உள்ளனர். அவரது மூத்த தளபதி கருணாகரனுக்கு மகாதேவியின் மீது காதல் உருவாகிறது. ஆனால் கருணாகரனின் காதலை மகாதேவி நிராகரிக்கிறாள். கருணாகரன் மகாதேவியை அடைய பல்வேறு தீய திட்டங்களைத் தீட்டுகிறான். ஆனால் இதற்கிடையில், மகாதேவி இளைய தளபதியான வல்லவனைக் காதலிக்கிறாள். இதற்கிடையில் மற்றொரு தளபதிக்கு மகாதேவி மீது காதல் பிறக்கிறது. இரு தளபதிகளும் மகாதேவியைக் காதலிக்கும் விவகாரம் அரசர் முன் வருகிறது. சண்டையில் யார் வெல்கிறார்களோ அவர்களுக்கே மகாதேவி என்று மனர் அறிவிக்கிறார். இரு தளபதிகளுக்கும் இடையில் சண்டை நடக்கிறது. அதில் கருணாகரன் வெற்றிபெறுகிறார். இந்த சண்டை குறித்து ஏதும் அறியாமல் இருக்கும் வல்லபனை ஒரு சிறுவன் மூலமாக மகாதேவி துண்டுகிறாள். பிறகு கருணாகரனுக்கும் வல்லபனுக்கும் இடையில் வாள் சண்டை நடக்கிறது. சண்டையில் வல்லபன் வென்றுவிட, வல்லபனுக்கும் மகாதேவிக்கும் திருமணம் நடக்கிறது. மகாதவியை மறக்க முடியாத கருணாகரன் அவளைக் கடத்த முடிவு செய்கிறான். ஆனால் மகாதேவிக்கு பதிலாக அரசனின் வளர்ப்பு மகளான மங்கம்மாளைக் கடத்திவிடுகிறான். தன் முட்டாள் தனத்தை மறைக்க மங்கம்மாளையே கருணாகரன் திருமணம் செய்து கொள்கிறான். இரு இணையருக்கும் குழந்தைகள் பிறக்கின்றன. கருணாகரன் தொடர்ந்து மகாதேவியின் மீது மோகத்திலேயே இருக்கிறான். மங்கம்மா மகாதேவிக்கு அனுசரணையாக இருக்கிறான். கருணாகரனிடமிருந்து அவளைப் பாதுகாக்கிறாள். மகாதேவியின் குழந்தையைக் கொல்ல தன் கணவர் திட்டமிட்டுள்ளதை அறிந்த மங்கம்மா, தன் குழந்தையை மகாதேவியின் குழந்தைக்கு பதில் மாற்றிவிடுகிறாள். இதனால் கருணாகரன் தன் சொந்தக் குழந்தையைக் கொன்றுவிடுகின்றான். உண்மையை உணர்ந்த கருணாகரன் தற்கொலை செய்து கொள்கிறான். பின்னர் அவனது மனைவியும் தற்கொலை செய்து கொள்கிறாள்.
நடிப்பு
[தொகு]- தளபதி வல்லபனாக ம. கோ. இராமச்சந்திரன்
- மகாதேவியாக சாவித்திரி
- தளபதி கருணாகரனாக பி. எஸ். வீரப்பா
- இளவரசி மங்கம்மாளாக எம். என். ராஜம்
- மாரியப்பனாக ஜே. பி. சந்திரபாபு
- இளம் இளவரசனாக மாஸ்டர் முரளி
- வசந்தாவாக டி. பி. முத்துலட்சுமி
- தளபதியாக ஓ. ஏ. கே. தேவர்
- முத்துப்புலவனாக ஏ. கருணாநிதி
- சட்டாம்பிள்ளை வெங்கட்ராமன்
- சுசீலா
இசை
[தொகு]இப்படத்திற்கு விஸ்வநாதன்-ராமமூர்த்தி இசையமைத்தார்.[4][5]
| பாடல் | பாடகர் | வரிகள் | நீளம் |
|---|---|---|---|
| "காக்கா காக்கா மை கொண்டா" | எம். எஸ். இராஜேஸ்வரி | அ. மருதகாசி | 03:20 |
| "காமுகர் நெஞ்சில்" | கே. ஜமுனா ராணி | 03:29 | |
| "தாயத்து தாயத்து" | டி. எம். சௌந்தரராஜன் | பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் | 03:01 |
| "குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும்" | டி. எம். சௌந்தரராஜன் | 03:03 | |
| "உன் திருமுகத்தை ஒரு முகமா" | ஜே. பி. சந்திரபாபு, ஏ. ஜி. ரத்னமாலா | தஞ்சை இராமையாதாஸ் | 03:20 |
| "தந்தன்னா பாட்டு பாடணும் துந்தன்னா தாளம் போடணும்" | ஜே. பி. சந்திரபாபு, ஏ. ஜி. ரத்னமாலா | 03:21 | |
| "ஏறு பூட்டுவோம்" | டி. எம். சௌந்தரராஜன் | 03:17 | |
| "கண்மூடும் வேளையிலும்" | ஏ. எம். ராஜா, பி. சுசீலா | கண்ணதாசன் | 03:14 |
| "சிங்காரப் புன்னகை" | எம். எஸ். ராஜேஸ்வரி, ஆர். பாலசரசுவதி | 03:33 | |
| "மானம் ஒன்றே பெரிதென" | டி. எஸ். பகவதி | 03:29 | |
| "சேவைசெய்வதே ஆனந்தம்" | எம். எஸ். ராஜேஸ்வரி, டி. எம். சௌந்தரராஜன் | 04:08 |
வரவேற்பு
[தொகு][6] இப்படம் மிகவும் வெற்றிபெற்றது. சாவித்ரியின் அருமையான நடிப்பும், விஸ்வநாதன் ராமமூர்த்தியின் இசையும் பேசப்பட்டன. இதனால் பல திரையரங்குகளில் 100 நாட்கள் ஓடியது.
மரபு
[தொகு]இப்படத்தில் வீரப்பா பேசிய "மணந்தால் மகாதேவி இல்லையேல் மரணதேவி" என்ற வசனம் மிகப் பிரபலமானது.[7] மேலும் மங்கம்மாள் கருணாகரனை அத்தான் என்று அழைக்க "அத்தான் இந்த சத்தான வார்த்தையைக் கேட்டு செத்தான் கருணாகரன்", "இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்" உள்ளிட்ட வசனங்கள் பேசப்பட்டன. தமிழ்த் திரையுலகிற்கு பஞ்ச் டயலாக்குகள் எனப்படும் முத்திரை வசனங்களை முதலில் அறிமுகப்படுத்தியவர் கண்ணதாசன்.
"நானன்றி யார் வருவார்" என்ற பாடல் முதலில் இப்படத்திற்காக எழுதப்பட்டது. ஆனால் எம்.ஜி.ஆருக்கு அது பிடிக்கவில்லை. எனவே கண்ணதாசன் "கண் மைடும் வேளையிலே" என்று எழுதினார்.
பின்னர் கண்ணதாசன் தனது சொந்த திரைப்படமான மாலையிட்ட மங்கையில் "நானன்றி யார் வருவார்" பாடலைப் பயன்படுத்தினார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Mahadevi". இந்தியன் எக்சுபிரசு: pp. 1. 15 November 1957. https://news.google.com/newspapers?nid=vzY-6mMDyDUC&dat=19571115&printsec=frontpage&hl=en.
- ↑ Randor Guy (1 December 2012). "Mahadevi 1955 [sic]". தி இந்து இம் மூலத்தில் இருந்து 9 September 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210909122704/https://www.thehindu.com/news/cities/chennai/chen-cinema/Mahadevi-1955/article12190443.ece.
- ↑ "Mahadevi". இந்தியன் எக்சுபிரசு: pp. 1. 22 November 1957. https://news.google.com/newspapers?nid=vzY-6mMDyDUC&dat=19571122&printsec=frontpage&hl=en.
- ↑ "Mahadevi (1957)". Music India Online. Archived from the original on 17 June 2018. Retrieved 17 April 2021.
- ↑ Neelamegam, G. (December 2014). Thiraikalanjiyam — Part 1 (in Tamil) (1st ed.). Chennai: Manivasagar Publishers. p. 131.
{{cite book}}: CS1 maint: unrecognized language (link) - ↑ காந்தன் (1957-12-15). "மஹாதேவி" (PDF). Kalki (in Tamil). pp. 41–42. Retrieved 2025-02-12 – via Internet Archive.
{{cite magazine}}: CS1 maint: unrecognized language (link) - ↑ Randor Guy (2 August 2014). "The superstar villain". தி இந்து இம் மூலத்தில் இருந்து 30 January 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210130210439/https://www.thehindu.com/features/cinema/p-s-veerappa-was-tamil-cinemas-bad-guy-personified-says-randor-guy/article6275472.ece.