உள்ளடக்கத்துக்குச் செல்

தாசிப்பெண்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(தாசிப் பெண் (ஜோதிமலர்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாசிபெண்
இயக்கம்எல்லிஸ் டங்கன்
தயாரிப்புஎல்லிஸ் டங்கன்
புவனேஸ்வரி பிக்சர்ஸ்
ஆர். எஸ். மணி
இசைலலிதா வெங்கட்ராமன்
எஸ். ராஜேஸ்வர ராவ்
நடிப்புடி. ஆர். மகாலிங்கம்
எம். ஜி. ஆர்
என். எஸ். கிருஷ்ணன்
கிருஷ்ணமூர்த்தி
ஆர். பாலசரஸ்வதி
எம். ஆர். சந்தானலட்சுமி
டி. ஏ. மதுரம்
வெளியீடுசனவரி 25, 1943
நீளம்13623 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

தாசிப்பெண் (அல்லது ஜோதிமலர் அல்லது தும்பை மகாத்மியம்) 1943-ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும்.[1][2][3] இந்தத் திரைப்படத்தை எல்லிஸ் ஆர். டங்கன் இயக்கியிருந்தார். இதில் டி. ஆர். மகாலிங்கம், எம். ஜி. ஆர் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[4][5] புவனேஸ்வரி பிச்சர்ஸ் தயாரித்திருந்தது. லலிதா வெங்கட்ராமன், எஸ். ராஜேஸ்வர ராவ் ஆகியோர் இப்படத்திற்கு இசையமைத்திருந்தனர்.[6] ஒரு பெண் தேவதாசியாக மாறி, சிவனை வழிபடுவதற்கும், ஒரு ஆணைத் திருமணம் செய்யும் பாரம்பரிய வழியைப் பின்பற்ற மறுப்பதற்கும் தனது வாழ்க்கையை அர்ப்பணித்ததைப் பற்றிய ஒரு நாட்டுப்புறக் கதையை அடிப்படையாகக் கொண்டது இந்தப் படம். தாசிப்பெண் நன்றாக ஓடி வெற்றி பெற்றது. ஆனால் படத்தின் எந்தப் பிரதியும் கிடைக்கவில்லை.[5]

திரைக்கதை

[தொகு]

இளம் தேவதாசி (ஆர். பாலசரஸ்வதி), காமவெறி பிடித்த ஜமீன்தாருக்கு (வி. கே. தாஸ்) அடிபணியும்படி அவளது குடும்பத்தினரால் கட்டாயப்படுத்தப்படுகிறாள். ஆனால், அவள் சிவபெருமானின் (ம. கோ. இராமச்சந்திரன்) பக்தியாலும், தனது காதலனை (டி. ஆர். மகாலிங்கம்) மணக்க விரும்புவதாலும், இதைச் செய்ய மறுக்கிறாள். அவள் தனது பயணத்தில் பல தடைகளைச் சந்திக்கிறாள். ஜமீன்தார் அவளைத் தனது வைப்பாட்டியாக ஆக்குவதற்காகக் கடத்த முயற்சிக்கிறான். இருப்பினும், சிவனும் பார்வதியும் (எம். ஆர். சந்தானலட்சுமி) தலையிடுவதால் அவனது முயற்சிகள் தோல்வியடைகின்றன. இப்படத்தில், திருமணமான அவளது சகோதரி (டி. ஏ. மதுரம்) ஒரு புடவை விற்பனையாளருடன் (என். எஸ். கிருஷ்ணன்) கள்ள உறவில் ஈடுபடுவது பற்றிய ஒரு இணைக்கதையும் உள்ளது. அவளது சகோதரியின் முறையற்ற காதல், பயங்கரமான தோற்றமுடைய ஒரு இராட்சதனின் (புளிமூட்டை ராமசாமி) வருகையால் எப்போதும் முறியடிக்கப்படுகிறது. இறுதியில், தேவதாசி தனது வாழ்க்கையில் சோர்வடைந்து விடுகிறாள். அவளுடைய பிரார்த்தனைகளுக்கு பதிலளிக்கும் விதமாக, சிவன் அவளை தும்பைச் செடியாக மாற்றுகிறார் - அதன் பூக்கள் வழிபாட்டின் போது சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்படுகின்றன. இதனால் இந்த படம் தும்பை மகாத்மியம் என்ற தலைப்பையும் கொண்டிருந்தது.[5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Rajadhyaksha, Ashish; Willemen, Paul (1994). Encyclopaedia of Indian cinema. British Film Institute. p. 147. ISBN 0-85170-455-7. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-85170-455-5.
  2. Film News Anandan (2004). Sadhanaigal padaitha Tamil Thiraipada Varalaaru. Chennai: Sivagami Publications. pp. 28:33.
  3. Saraswathi, S. (1996). Government, politics, and people: linkage politics of Tamil Nadu. Manak Publications. p. 230. ISBN 8185445761. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-85445-76-2.
  4. தாசிப்பெண் தமிழ்த் திரைப்படம்
  5. 1 2 3 ராண்டார் கை (19 பிப்ரவரி 2011). "Dasi Penn (Jyothimalar) 1943". தி இந்து இம் மூலத்தில் இருந்து 2014-08-12 அன்று. பரணிடப்பட்டது.. http://archive.today/2014.08.12-110802/http://www.thehindu.com/features/cinema/blast-from-the-past-dasi-penn-jyothimalar-1943/article1471591.ece. பார்த்த நாள்: 26 April 2026.
  6. ஜோதிமலர் (அ) தாசிப்பெண்

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாசிப்பெண்&oldid=4524901" இலிருந்து மீள்விக்கப்பட்டது