மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்
Appearance
மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் | |
---|---|
இயக்கம் | எம். ஜி. ஆர் |
தயாரிப்பு | சொலீஸ்வர் கம்பைன்ஸ் |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | எம். ஜி. ஆர் லதா |
வெளியீடு | சனவரி 14, 1978 |
நீளம் | 3993 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். ஜி. ஆர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், லதா மற்றும் பலரும் நடித்திருந்தனர். எழுத்தாளர் அகிலன் எழுதிய கயல்விழி என்ற புதினத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது.[1]
1977 தேர்தலில் வெற்றி பெற்ற எம்.ஜி.ஆர், தமிழக முதல் அமைச்சராகப் பொறுப்பேற்றார். அவர் கடைசியாக நடித்த படம் "மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்." எம்.ஜி.ஆர், முதல் அமைச்சராகி 6 மாதங்களுக்குப் பின், 1978 பொங்கல் நாளன்று இத்திரைப்படம் வெளிவந்தது. இது நூறு நாள் ஓடிய படமாக அமைந்தது[2].
இப்படத்தின் தொடர்ச்சியாக மாய பின்பம் குழுமம் ''புரட்சித்தலைவன்''' என்ற முப்பரிமாணப் படம் ஒன்றை அமைப்பதாக இருந்தது.[3][4]
நடிகர்கள்
[தொகு]- ம. கோ. இராமச்சந்திரன் சுந்தரபாண்டியன் என்கிற பைந்தமிழ் குமரன்
- லதா கயல்விழி
- பத்மப்பிரியா இளவரசி பாமினி
- மா. நா. நம்பியார் இளவரசர் ராஜ ராஜன்
- பி. எஸ். வீரப்பா அமைச்சர் தாய்க்கும் வளவரை
- கே. கண்ணன் அரசன் நரசிம்மா
- எஸ். வி. சுப்பையா - சோழ அரசன்
- எஸ். வி. சகஸ்ரநாமம் குலசேகர பாண்டியன் என்ற அரசன்
- சண்முகசுந்தரம் (நடிகர்) அமைச்சரின் மகன்
- வி. எஸ். ராகவன் அமைச்சர்
- தேங்காய் சீனிவாசன் விலாவாக, இளவரசர் சுந்தரபாண்டியனின் உளவாளி
- ஐசரி வேலன் - நாகவன்
- முஸ்தபா
- என்னத்த கண்ணையா - சாலபு
- டி. கே. எஸ். நடராஜன் ஐயர்
- திருச்சி சௌந்தரராஜன் இராச்சியத்தின் மருத்துவர்
பாடல்கள்
[தொகு]இத்திரைப்படத்திற்கு எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்திருந்தார்.[5][6]
பாடல்கள் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | வரிகள் | பாடகர்(கள்) | நீளம் | ||||||
1. | "மாங்கல்யம்" | முத்துலிங்கம்[7] | வாணி ஜெயராம் | 3.26 | ||||||
2. | "வீரமகன் போராட" | முத்துலிங்கம்[7] | டி. எம். சௌந்தரராஜன் & பி. சுசீலா | 3:41 | ||||||
3. | "தாயகத்தின் சுதந்திரமே" | முத்துலிங்கம்[7] | டி. எம். சௌந்தரராஜன் | 3:53 | ||||||
4. | "அமுதத் தமிழில்" | புலமைப்பித்தன் | பி. ஜெயச்சந்திரன் & வாணி ஜெயராம் | 3:48 | ||||||
5. | "தென்றலில் ஆடிடும்" | புலமைப்பித்தன் | கே. ஜே. யேசுதாஸ் & வாணி ஜெயராம் | 4:43 |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ ஓர் எழுத்தாளரின் திரைப் பயணம், அகிலன் கண்ணன், இந்து தமிழ், 2020 சனவரி 31
- ↑ கடைசியாக நடித்த படம் பரணிடப்பட்டது 2010-12-20 at the வந்தவழி இயந்திரம், மாலைமலர்
- ↑ http://www.rediff.com/movies/2008/dec/01mgr-in-an-animation-film.htm
- ↑ http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/mgr-to-hit-silver-screen-again-in-animation-film/article1385464.ece
- ↑ "Maduraiyai Meetta Sundarapandian". Gaana (music streaming service)-Gaana. Archived from the original on 17 February 2021. பார்க்கப்பட்ட நாள் 17 February 2021.
- ↑ Srinivasan, Meera (15 July 2015). "Something for everyone". தி இந்து இம் மூலத்தில் இருந்து 29 November 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181129012705/https://www.thehindu.com/news/cities/chennai/something-for-everyone/article7423850.ece.
- ↑ 7.0 7.1 7.2 Parthasarathy, Anusha (8 November 2011). "Memories of Madras – Verse in the woods". தி இந்து இம் மூலத்தில் இருந்து 12 June 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210612003441/https://www.thehindu.com/features/metroplus/Memories-of-Madras-%E2%80%93-Verse-in-the-woods/article13477665.ece.