பி. ஏ. தாமஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பி. ஏ. தாமஸ்
பிறப்புமார்ச்சு 22, 1922 (1922-03-22) (அகவை 100)
திருவனந்தபுரம்
பணிஇயக்குனர்
செயற்பாட்டுக்
காலம்
1950–2002
பெற்றோர்ஆபிரகாம் -மரியம்மா
வாழ்க்கைத்
துணை
உரோசு (திரேசியா)
பிள்ளைகள்3

பி. ஏ. தாமஸ் (P. A. Thomas) ஓர் இந்திய திரைப்பட இயக்குனரும், தயாரிப்பாளரும், திரைக்கதை எழுத்தாளரும், நாடகக் கலைஞரும்,மலையாளத் திரைப்படங்களில் நடிக்கும் நடிகரும் ஆவார். [1] இவர் 15க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார். மேலும், 1960கள்-1970களில் 11 திரைப்படங்களைத் தயாரித்திருந்தார். சுமார் 20 திரைப்படங்களில் நடித்தும் உள்ளார். [2] ஓரல் கூடி கல்லனாயி (1964), குடும்பினி (1964), போர்ட்டர் குஞ்சலி (1965), ஸ்டேஷன் மாஸ்டர் (1967), தாமஸ்லீஹா (1975) போன்றவை இவர் தயாரித்த பிரபலமான திரைப்படங்கள் ஆகும். [3] இவரது திரைப்படங்கள் அனைத்தும் அந்தக் காலத்தின் சமகால சமூகப் பிரச்சினைகளைக் கையாண்டன.[4]

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

இவர், கேரளாவில் புத்தானங்கடி குடும்பத்தில் ஆபிரகாம் -மரியம்மா தம்பதியினருக்கு 22 மார்ச் 1922 அன்று ஞாரக்கலில் பிறந்தார். [5] இடைநிலை படிப்பில் தேர்ச்சி பெற்ற பிறகு, இவர் ஒரு நடிகராக தொழில்முறை நாடக குழுவில் நுழைந்தார். பின்னர் தனது சொந்த நாடகக் குழுவை உருவாக்கி கேரளாவிலும் இந்தியாவின் பிற பகுதிகளிலும் பல நாடகங்களை வழங்கினார். சிறீ ராமா நாயுடு இயக்கத்தில் 1950 ஆம் ஆண்டு வெளிவந்த "பிரசன்னா" என்ற திரைப்படத்தில் இவருக்கு ஒரு பாத்திரம் வழங்கப்பட்டது. அடுத்த ஆண்டு 1951ஆம் ஆண்டில் ஜி. விசுவநாத் இயக்கிய "வனமாலா" படத்தின் நாயகனார். [6] 1951இல் வெளியான "வனமாலா" மலையாளத்தின் முதல் கட்டை அடிப்படையாகக் கொண்ட படமாகும். பின்னர் இவர் திரைப்படங்களை இயக்கவும் ஆரம்பித்தார் . மலையாளத்தில் பல வெற்றிகரமான படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்கிய பல படங்களின் தயாரிப்பாளராகவும் இருந்தார். இவர் திரேசியா என்பவரை மணந்தார். இத்தம்பதியினருக்கு 3 குழந்தைகள் இருந்தன. [7]

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/oral-koodi-kallanayi-1964/article1141026.ece
  2. "Archived copy". 10 September 2014 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2014-09-16 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: archived copy as title (link)
  3. http://en.msidb.org/movies.php?tag=Search&director=PA%20Thomas&limit=15&sortorder=3&sorttype=2
  4. "Archived copy". 10 September 2014 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2014-09-10 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: archived copy as title (link)
  5. http://www.americanbazaaronline.com/2014/07/18/malayalee-film-director-j-sasikumar-passes-away-age-86/
  6. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2018-01-17 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2021-07-29 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  7. http://prominentindianpersonalities.blogspot.in/2013/04/pathomas.html

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._ஏ._தாமஸ்&oldid=3370897" இருந்து மீள்விக்கப்பட்டது