ஜேப்பியார்
முனைவர் ஜேப்பியார் | |
---|---|
பிறப்பு | முட்டம், நாகர்கோவில் | 11 சூன் 1931
இறப்பு | 18 சூன், 2016 (வயது 85) சென்னை, தமிழ்நாடு |
தேசியம் | இந்தியா |
துறை | தொழில்முன்ழிவோர், கல்வியாளர் |
கல்வி கற்ற இடங்கள் | அண்ணா பல்கலைக்கழகம் |
அறியப்படுவது | சத்யபாமா பல்கலைக்கழகத்தின் நிறுவனர், வேந்தர் |
விருதுகள் | தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமான் நிக்கோபார் பகுதிகளின் தேசிய மாணவர் படை இயக்குனரகத்தின் சார்பில் கௌரவ கர்னல் பதவி |
துணைவர் | இரெமிபாய் ஜேப்பியார் |
ஜேப்பியார் ( Dr. Jeppiaar) (11 ஜூன் 1931 - 18 ஜூன் 2016), ஓர் இந்திய அரசியல்வாதியும், கல்வியாளரும், தொழிலதிபரும் ஆவார் . திருவிதாங்கூர்- கொச்சி மாகாணத்திலிருந்த நாகர்கோயிலுக்கு அருகிலுள்ள முட்டம் என்ற இடத்தில் பிறந்தார் . இப்போது தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ளது.
சென்னைப் பல்கலைக்கழகத்தில் தனது இளங்கலை சட்டத்தையும் (பி.எல்) அண்ணா பல்கலைக்கழகத்தில் முனைவர் ஆராய்ச்சியையும் முடித்தார். இவர் ஜேப்பியார் கல்வி அறக்கட்டளையின் நிறுவனர்-, சத்தியபாமா பல்கலைக்கழகத்தின் நிறுவனர்- வேந்தராக இருந்தார். தமிழகத்தின் நிபுணத்துவ, கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் கூட்டமைப்பின் தலைவராகவும் இருந்தார்.
இவர், தமிழ்நாட்டில் பொறியியல் கல்வியை தனியார்மயமாக்குவதில் முன்னோடிகளில் ஒருவர். இவரது நிகர சொத்து மதிப்பு 2016 இல் ₹ 3,000 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
ஆரம்ப கால வாழ்க்கை
[தொகு]ஜேப்பியார் கத்தோலிக்கக் கிறிஸ்தவ குடும்பத்தில் முக்குவரான இயேசுஅடிமை - பனிமலர் அம்மாள் ஆகியோருக்கு பிறந்தார். இவரது தாயின் பெயரில் பனிமலர் கல்வி நிறுவனங்களுக்கு பெயரிட்டார். இவர், ம. கோ. இராமச்சந்திரனின் நெருங்கிய கூட்டாளி என்று கூறப்பட்டது.
அரசியல் வாழ்க்கை
[தொகு]ம. கோ. இராமச்சந்திரன் ஆட்சியின் போது, இவர் தமிழக சட்டமன்றத்தின் அரசாங்க தலைமை கொறடாவாக செயல்பட்டார். 1972 முதல் 1987 வரை சென்னை மாவட்ட அதிமுக கட்சியின் செயலாளராகவும் பணியாற்றிய இவர் முதல்வருக்கு சிறப்பு தூதராக இருந்தார்.
வகித்த பதவிகள்
[தொகு]- சென்னை நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியத்தின் (மெட்ரோ நீர்) தலைவர்.
- சட்டமன்றத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினராக கௌரவ சேவைகள்
- தமிழ்நாடு மீன்வள மேம்பாட்டுக் கழகத்தின் இயக்குநர்.
இறப்பு
[தொகு]18 ஜூன் 2016 அன்று, தனது 85 வயதில் இறந்தார்.[1] [2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Prominent educationist Jeppiaar dies in Chennai". The News Minute. 18 June 2016. பார்க்கப்பட்ட நாள் 18 June 2016.
- ↑ "Jeppiaar a pioneer in setting up of private engineering institutions died". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 18 June 2016.