குரோமியம்(II) புளோரைடு
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
குரோமியம் இருபுளோரைடு, குரோமியம் புளோரைடு , குரோமசு புளோரைடு
| |
இனங்காட்டிகள் | |
10049-10-2 | |
ChemSpider | 59614 |
EC number | 233-168-0 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 66229 |
| |
பண்புகள் | |
CrF2 | |
வாய்ப்பாட்டு எடை | 89.99 g·mol−1 |
தோற்றம் | நீலமும் பச்சையும் க்லந்த பன்னிறங் காட்டும் படிகங்கள் [1] நீருறிஞ்சும், காற்றில் சூடாக்கும் போது Cr2O3 மாறுகிறது.[1] |
அடர்த்தி | 3.79 கி/செ.மீ3[1] |
உருகுநிலை | 894 °C (1,641 °F; 1,167 K)[1] |
கொதிநிலை | > 1,300 °C (2,370 °F; 1,570 K)[1] |
76.7 கி/100 மி.லி | |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | ஒற்றைச்சரிவு[1] |
வெப்பவேதியியல் | |
Std enthalpy of formation ΔfH |
-8.645 கி.யூ/கி (solid) |
தீங்குகள் | |
ஈயூ வகைப்பாடு | Xn C |
R-சொற்றொடர்கள் | R20/21/22, R31, R34 |
S-சொற்றொடர்கள் | S25, S26, வார்ப்புரு:S27/28, S36/37/39, S45 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
குரோமியம்(II) புளோரைடு (Chromium(II) fluoride) என்பது CrF2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு வேதிச் சேர்மம் ஆகும். நீலம் கலந்த பச்சை நிறத்தில் காணப்படும் இச்சேர்மம் பன்னிறங்காட்டும் ஒரு சேர்மமாகும். அரிதாக தண்ணீரில் கரையும் குரோமியம்(II) புளோரைடு கிட்டத்தட்ட ஆல்ககாலில் கரைவதில்லை. கொதிக்கும் ஐதரோ குளோரிக் அமிலத்தில் கரைகின்ற இச்சேர்மம் சூடான வாலை வடித்த கந்தக அமிலம் மற்றும் நைட்ரிக் அமிலம் ஆகியனவற்றில் கரைவதில்லை. மற்ற குரோமசு சேர்மங்களைப் போலவே குரோமியம்(II) புளோரைடும் காற்றில் ஆக்சிசனேற்றம் அடைந்து குரோமியம்(III)ஆக்சைடாக மாறுகிறது.
தயாரிப்பு
[தொகு]நீரற்ற ஐதரசன் புளோரைடை நீரற்ற குரோமியம்(II) குளோரைடு வழியாக செலுத்துவதன் மூலமாகத் தயாரிக்கலாம். இவ்வினை அறை வெப்பநிலையில் நிகழ்ந்தாலும் வினையை முடிவுக்குக் கொண்டுவர குறிப்பாக 100 முதல் 200 பாகை செல்சியசு வெப்பநிலைக்கு சூடுபடுத்தப்படுகிறது.:[2]
- CrCl2 + 2 HF → CrF2 + 2 HCl
அமைப்பு
[தொகு]பல இருபுளோரைடுகளை போல CrF2 இல் உள்ள Cr(II) எண்முக மூலக்கூற்று வடிவமைப்பு கொண்ட உரூத்தைல் அமைப்பை ஏற்கிறது. F− அயனி முக்கோண வடிவமைப்பையும் ஏற்கிறது. ஆறு Cr-F பிணைப்புகளில் இரண்டு பிணைப்புகள் நீண்ட 2.43 Å பிணைப்பு நீளமும் மற்ற நான்கு பிணைப்புகளும் 2.00 Å நீளம் கொண்ட குறுகிய நீள பிணைப்பாகவும் உள்ளன[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 Perry, Dale L. (2011). Handbook of Inorganic Compounds, Second Edition. Boca Raton, Florida: CRC Press. p. 120. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-43981462-8. பார்க்கப்பட்ட நாள் 2014-01-10.
- ↑ Riley, edited by Georg Brauer ; translated by Scripta Technica, Inc. Translation editor Reed F. (1963). Handbook of preparative inorganic chemistry. Volume 1 (2nd ed.). New York, N.Y.: Academic Press. p. 256. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0121266011.
{{cite book}}
:|first=
has generic name (help)CS1 maint: multiple names: authors list (link) - ↑ Jack, K. H.; Maitland, R. "Crystal structures and interatomic bonding of chromous and chromic fluorides" Proceedings of the Chemical Society, London (1957), 232. எஆசு:10.1039/PS9570000217
புற இணைப்புகள்
[தொகு].