உள்ளடக்கத்துக்குச் செல்

ஜி. மாதவன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஜி. மாதவன் நாயர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஜி. மாதவன் நாயர்
இஸ்ரோ முன்னாள் தலைவர் ஜி. மாதவன் நாயர் (வலது) மற்றும் ஏ. பி. ஜே. அப்துல் கலாம் (சூலை 8, 2002)
பிறப்பு31 அக்டோபர் 1943 (1943-10-31) (அகவை 81)
திருவனந்தபுரம், இந்தியா
வாழிடம் இந்தியா
தேசியம் இந்தியர்
துறைவிறிசு தொழில்நுட்பம் மற்றும் மின்னியல் மற்றும் மின்னணுவியல் பொறியியல்
பணியிடங்கள்இந்திய விண்வெளி ஆய்வு மையம்
பாபா அணு ஆராய்ச்சி மையம்
கல்வி கற்ற இடங்கள்இளங்கலை அறிவியல் (பொறியியல் - மின்னியல் & தொலைதொடர்பு) (1966), பொறியியல் கல்லூரி, திருவனந்தபுரம்
அறியப்படுவதுஇந்திய விண்வெளித் திட்டம்
விருதுகள்பத்ம பூசன் (1998)
பத்ம விபூசண் (2009)

ஜி. மாதவன் நாயர் (G. Madhavan Nair, மலையாளம்: ജി. മാധവന്‍ നായര്‍,பிறப்பு அக்டோபர் 31, 1943) இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் முன்னாள் தலைவராகவும் இந்திய அரசின் விண்வெளித்துறை செயலராகவும் இருந்தவர். மேலும் இவர் விண்வெளி ஆணையத்தின் தலைவராகவும் பெங்களூருவிலிருந்து இயங்கும் அன்ட்ரிக்சு நிறுவனத்தின் மேலாண் அமைப்பின் தலைவராகவும் இருந்தவர். இவரது அரசுப்பணிச் சேவைகளைப் பாராட்டி இவருக்கு 2009ஆம் ஆண்டு பத்ம விபூசண் விருது வழங்கப்பட்டது.[1][2] இவர் தலைமையேற்ற ஆந்திரிக்சு கழகம் தேவாசு பல்லூடக நிறுவனத்துடன் சனவரி 28, 2005 அன்று ஒப்பிட்ட எசு அலைக்கற்றை பகிர்வுக்கான பேர ஊழல் தொடர்பாக இவர் மீது சனவரி 25, 2012 அன்று எந்த அரசுத்துறை பணிகளிலும் பொறுப்பேற்க இவருக்குத் தடை விதிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது.[3] இதனையடுத்து இந்திய தொழில்நுட்பக் கழகம் பட்னாவின் ஆளுனர் குழுமத் தலைவர் பதவியிலிருந்து விலகியுள்ளார்.[4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Padma Vibhushan for Kakodkar, Madhavan Nair, Nirmala". The Hindu (Chennai, India). January 26, 2009 இம் மூலத்தில் இருந்து 2009-02-05 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090205011658/http://hindu.com/2009/01/26/stories/2009012659270100.htm. பார்த்த நாள்: 2009-02-14. 
  2. "Madhavan Nair dedicates Padma Vibhushan to ISRO staff". The Hindu. January 25, 2009 இம் மூலத்தில் இருந்து 2009-02-25 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090225190635/http://www.hindustantimes.com/StoryPage/StoryPage.aspx?sectionName=RSSFeed-Common-Chunk-HT-UI-Common-LatestNews&id=51ae53e0-fc1d-4313-983b-78e848cdf264&&Headline=Madhavan+Nair+dedicates+Padma+Vibhushan+to+ISRO+staff. பார்த்த நாள்: 2009-02-14. 
  3. One, India. "Web". News paper. one india. பார்க்கப்பட்ட நாள் 25 January 2012.
  4. "Former ISRO chief steps down from IIT-Patna board". Times of India. http://timesofindia.indiatimes.com/india/Former-ISRO-chief-steps-down-from-IIT-Patna-board/articleshow/11658069.cms. 

வெளியிணைப்புகள்

[தொகு]
அரசு பதவிகள்
முன்னர் இஸ்ரோ தலைவர்
2003–2009
பின்னர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜி._மாதவன்&oldid=3762063" இலிருந்து மீள்விக்கப்பட்டது