சப்தபரணி குகை

ஆள்கூறுகள்: 25°00′26″N 85°24′39″E / 25.007175°N 85.410792°E / 25.007175; 85.410792
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சப்தபரணி குகை
சப்தபரணி குகை
அமைவிடம்ராஜகிரகம், பீகார்
ஆள்கூற்றுகள்25°00′26″N 85°24′39″E / 25.007175°N 85.410792°E / 25.007175; 85.410792
நிர்வகிக்கும் அமைப்புஇந்தியத் தொல்லியல் ஆய்வகம்
சப்தபரணி குகை is located in இந்தியா
சப்தபரணி குகை
இந்தியா இல் சப்தபரணி குகை அமைவிடம்
சப்தபரணி குகை is located in பீகார்
சப்தபரணி குகை
சப்தபரணி குகை (பீகார்)

சப்த பரணி குகை (Saptaparni Cave)(சரைக்கி) அல்லது சத்தபணி குகை (பாலி) என்று குறிப்பிடப்படும் சப்தபரணி குகை, அதாவது ஏழு இலைகள்-குகை இந்தியாவின் பீகாரில் ராஜகிரகத்திலிருந்து சுமார் 2 கிலோமீட்டர்கள் (1.2 mi) உள்ள ஒரு புத்த குகைத் தளமாகும்.[1][2] இது ஒரு மலையில் அமைந்துள்ளது. பௌத்த மரபில் சப்தபரணி குகை முக்கியமானது, ஏனெனில் புத்தர் இறப்பதற்கு முன் சிறிது காலம் கழித்த இடமாகவும்,[3] புத்தர் இறந்த பிறகு (பரிநிர்வாணம்) முதல் பௌத்த சபை நடைபெற்ற இடமாகவும் பலர் நம்புகின்றனர்.[1][4][5] புத்தர் வட இந்தியாவில் பிரசங்கம் செய்தபோது அவருடன் வந்த ஆனந்தர், புத்தரின் உறவினர் மற்றும் உபாலி ஆகியோர் வருங்கால சந்ததியினருக்குப் புத்தரின் போதனைகளை இயற்றுவதற்கு சில நூறு துறவிகள் கொண்ட குழு இங்குதான் முடிவு செய்தது. புத்தர் தனது போதனைகளை எழுதவில்லை என்பதால் இது சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. சப்தபரணி குகையில் நடந்த சந்திப்பிற்குப் பிறகு, ஆனந்தர் தனது நினைவிலிருந்த புத்தரின் போதனையின் வாய்வழி மரபை உருவாக்கி, "இவ்வாறு நான் ஒரு சந்தர்ப்பத்தில் கேள்விப்பட்டேன்" என்று முன்வைத்தார். உபாலி வினய (ஒழுக்கம்) அல்லது " பிக்குகளுக்கான விதிகளை" ஓதினார்.[1] இந்த பாரம்பரியம் விநயபிடகம் II.284 முதல் II.287 மற்றும் திகா நிகாயா II.154 வரை காணப்படுகிறது.[6]

சப்தபரணி குகை நுழைவாயில்.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 Paul Gwynne (30 May 2017). World Religions in Practice: A Comparative Introduction. Wiley. பக். 51–52. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-118-97228-1. https://books.google.com/books?id=sU8nDwAAQBAJ&pg=PA51. 
  2. Jules Barthélemy Saint-Hilaire (1914). The Buddha and His Religion. Trübner. பக். 376–377. https://archive.org/details/in.ernet.dli.2015.174994. 
  3. Digha Nikaya 16, Maha-Parinibbana Sutta, Last Days of the Buddha, Buddhist Publication Society
  4. Kailash Chand Jain (1991). Lord Mahāvīra and His Times. Motilal Banarsidass. பக். 66. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-208-0805-8. https://books.google.com/books?id=8-TxcO9dfrcC&pg=PA66. 
  5. Chakrabartia, Dilip K (1976). "Rājagriha: An early historic site in East India". World Archaeology 7 (3): 261–268. doi:10.1080/00438243.1976.9979639. 
  6. Peter Harvey (2013). An Introduction to Buddhism: Teachings, History and Practices. Cambridge University Press. பக். 88–89. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-521-85942-4. https://books.google.com/books?id=u0sg9LV_rEgC. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சப்தபரணி_குகை&oldid=3761751" இலிருந்து மீள்விக்கப்பட்டது