உள்ளடக்கத்துக்குச் செல்

இலித்தியம் அயோடைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலித்தியம் அயோடைடு
லித்தியம் அயோடைடு
இனங்காட்டிகள்
10377-51-2 Y
ChemSpider 59699 Y
InChI
  • InChI=1S/HI.Li/h1H;/q;+1/p-1 Y
    Key: HSZCZNFXUDYRKD-UHFFFAOYSA-M Y
  • InChI=1/HI.Li/h1H;/q;+1/p-1
    Key: HSZCZNFXUDYRKD-REWHXWOFAM
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 66321
  • [Li+].[I-]
பண்புகள்
LiI
வாய்ப்பாட்டு எடை 133.85 கி/மோல்
தோற்றம் திடரூப வெண்படிகம்
அடர்த்தி 4.076 கி/செமீ3 (நீரற்ற)
3.494 கி/செமீ3 (டிரைஐதரேட்டு)
உருகுநிலை 469 °C (876 °F; 742 K)
கொதிநிலை 1,171 °C (2,140 °F; 1,444 K)
151 கி/100 மிலீ (0 °செ)
167 கி/100 மிலீ (25 °செ)
433 கி/100 மிலீ (100 °செ) [1]
கரைதிறன் எத்தனால், புரோபனால், ஈத்தேன்டையால், அம்மோனியா இவற்றில் கரையும்
மெத்தனால்-இல் கரைதிறன் 343 கி/100 மிலீ (20 °செ)
அசிட்டோன்-இல் கரைதிறன் 42.6 கி/100 மிலீ (18 °செ)
ஒளிவிலகல் சுட்டெண் (nD) 1.955
வெப்பவேதியியல்
Std enthalpy of
formation
ΔfHo298
-2.02 கிஜூ/கி அல்லது -270.48 கிஜூ/மோல்
நியம மோலார்
எந்திரோப்பி So298
75.7 ஜூ/மோல் கெ
வெப்பக் கொண்மை, C 0.381 ஜூ/கி கெ அல். 54.4 ஜூ/மோல் கெ
தீங்குகள்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் External MSDS
தீப்பற்றும் வெப்பநிலை புகையாது
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் இலித்தியம் புளோரைடு
இலித்தியம் குளோரைடு
இலித்தியம் புரோமைடு
ஏனைய நேர் மின்அயனிகள் சோடியம் அயோடைடு
பொட்டாசியம் அயோடைடு
உரூபிடியம் அயோடைடு
சீசியம் அயோடைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

இலித்தியம் அயோடைடு (Lithium iodide) என்பது LiI என்ற மூலக்கூறு வாய்பாடு கொண்ட ஒரு கனிம சேர்மமாகும். இலித்தியமும் அயோடினும் இணைந்து இச்சேர்மம் உருவாகிறது. காற்றில் திறந்து வைக்கும்போது அயோடைடு அயோடினாக ஆக்சிசனேற்றம்[2] அடைவதால் இது மஞ்சள் நிறமாக மாறுகிறது. சோடியம் குளோரைடு படிகமாதலின் மையக்கருத்தைப் பின்பற்றியே இலித்தியம் அயோடைடும் படிகமாகிறது[3] Various hydrates are also known.[4]

பயன்கள்

[தொகு]

உயர்வெப்ப மின்கலன்களில் இலித்தியம் அயோடைடு மின்பகுளியாகப் பயனாகிறது. மேலும் செயற்கையாக இதயத்துடிப்பை முடுக்கிவிடக்கூடிய நீண்ட கால பயன்பாட்டு மின்கலன்களில் இது பயனாகிறது. திடரூப இலித்தியம் அயோடைடு நியூட்ரான்களை கண்டறியும் ஒளிர்பொருளாக விளங்குகிறது[5]. அயோடினுடன் சேர்ந்து அயோடின் கலவையாகவும் சூரிய மின்கலன்களில் சாய உணர் மின்பகுளியாகவும் இது பயன்படுகிறது.

கரிம தொகுப்பு வினைகளில் கார்பன் – ஆக்சிசன் பிணைப்பில் பிளவை உண்டாக்க உதவுகிறது. உதாரணமாக மெத்தில் எசுத்தர்களை கார்பாக்சிலிக் அமிலங்களாக மாற்றுவதில் பயன்படுகிறது:[6].

RCO2CH3 + LiI + H2O → RCO2H + LiOH + CH3II

இலித்தியம் அயோடைடு இட அமைப்பியல் ஆய்வுகளில் முகவராக பயன்படுகிறது. சிறுநீரக நச்சுத்தன்மை காரணமாக தற்பொழுது இம்முறை கைவிடப்பட்டு இதற்குப் பதிலாக கரிம அயோடின் மூலக்கூறுகள் பயன் படுத்தப்படுகின்றன. கனிம அயோடின் கரைசல்களால் அதியூடழுத்தம், உயர் பாகுத்தன்மை போன்ற துன்பங்கள் விளைகின்றன[7] .

மேற்கோள்கள்

[தொகு]
  1. Pradyot Patnaik. Handbook of Inorganic Chemicals. McGraw-Hill, 2002, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-07-049439-8
  2. "A PDF file from ESPICorp Inc., a supplier of lithium iodide" (PDF). Archived from the original (PDF) on 2008-03-09. பார்க்கப்பட்ட நாள் 2005-09-16.
  3. Wells, A.F. (1984) Structural Inorganic Chemistry, Oxford: Clarendon Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-855370-6.
  4. Ulrich Wietelmann, Richard J. Bauer "Lithium and Lithium Compounds" in Ullmann's Encyclopedia of Industrial Chemistry 2005, Wiley-VCH: Weinheim. எஆசு:10.1002/14356007.a15_393.
  5. Some lithium iodide phosphors for slow neutron detection, K. P. Nicholson et al. Br. J. Appl. Phys. 6 104-106 (1955) எஆசு:10.1088/0508-3443/6/3/311
  6. André B. Charette, J. Kent Barbay, Wei He "Lithium Iodide" in Encyclopedia of Reagents for Organic Synthesis, 2005, John Wiley & Sons. எஆசு:10.1002/047084289X.rl121.pub2
  7. Hrvoje Lusic and Mark W. Grinstaff. X-ray-Computed Tomography Contrast Agents| Chem. Rev. 2013, 113 pp. 1641-1666.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலித்தியம்_அயோடைடு&oldid=3574906" இலிருந்து மீள்விக்கப்பட்டது