பாங்கர் கோட்டை

ஆள்கூறுகள்: 27°5′45″N 76°17′15″E / 27.09583°N 76.28750°E / 27.09583; 76.28750
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாங்கர் கோட்டை
இராஜஸ்தான், இந்தியா
பாங்கர் கோட்டையின் நுழைவாயில்
{{{name}}} is located in இராசத்தான்
{{{name}}}
{{{name}}}
இராஜஸ்தானில் பாங்கர் கோட்டையின் அமைவிடம் Bhangarh
ஆள்கூறுகள் 27°5′45″N 76°17′15″E / 27.09583°N 76.28750°E / 27.09583; 76.28750
வகை கோட்டை
இடத் தகவல்
உரிமையாளர் * இந்திய அரசு
மக்கள்
அனுமதி
Yes
நிலைமை சிதிலமடைந்துள்ளது. சுற்றுலாத் தலம்
இட வரலாறு
கட்டிய காலம் 1573
கட்டியவர் இராஜா பகவந்த் தாஸ்
கட்டிடப்
பொருள்
கல் மற்றும் செங்கல்

பாங்கர் கோட்டை (Bhangarh Fort), இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தில் 16ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோட்டை ஆகும்.[1] இராஜா பகவந்த் தாசின் இரண்டாம் மகன் மாதே சிங்கின் இருப்பிடமாக பாங்கர் நகரம் மற்றும் கோட்டை நிறுவப்பட்டது.[2] தற்போது சிதிலமடைந்த இக்கோட்டையை இந்திய அரசின் இந்தியத் தொல்லியல் ஆய்வகம் பராமரித்து வருகிறது.[3][4]

அமைவிடம்[தொகு]

பாங்கர் கோட்டை இராஜஸ்தான் மாநிலத்தின் ஆரவல்லி மலைத்தொடரில் உள்ள சரிஸ்கா தேசியப் பூங்கா பகுதியில் அமைந்த அல்வர் மாவட்டத்தில் உள்ளது.[5][6]

பாங்கர் கோட்டை ஜெய்ப்பூர் நகரத்திற்கு வடகிழக்கே 84.1 கிலோ மீட்டர் தொலைவிலும்; தில்லியிலிருந்து 235 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.

தொன்ம நம்பிக்கைகள்[தொகு]

சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு பாங்கர் கோட்டைக்கு வருபவர்கள் உயிருடன் திரும்புவதில்லை. இருட்டிய பிறகு இங்கு வருபவர்கள் இறந்துவிடுகிறார்கள் அல்லது காணாமல் போகிறார்கள் என்று கூறப்படுகிறது. சூரியன் மறைந்தது முதல் மறுநாள் சூரிய உதயம் வரை இங்கு நுழைவது கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளதாக கோட்டையின் பலகையில் தெளிவாக எழுதப்பட்டுள்ளது. இந்தக் கோட்டையில் பேய்கள் இருப்பதாக உள்ளுர் மக்கள் நம்புகின்றனர். இந்தியாவில் மிக அதிக எண்ணிக்கையில் பேய்கள் உலாவும் இடம் இது என்று கூறப்படுகிறது.[7]

பாங்கர் அரண்மனையிலிருந்து சுற்றுச்சுவருடம் கூடிய நகரம்

படக்காட்சிகள்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கல்[தொகு]

  1. "Bhangarh Fort, Rajasthan". Zee News. http://zeenews.india.com/slideshow/top-10-most-haunted-places-in-india_39.html. 
  2. Parveen, Wajeda; Sharma, Anrukati (2014). "Bangharh Fort: a case study of dark tourism". Dynamics of Commerce and Management. Archers & Elevators Publishing House. பக். 62. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9789383241439. https://books.google.com/books?id=3PxvEAAAQBAJ&dq=Bhangarh+Fort+history&pg=PT59. 
  3. Singh 2010, ப. 188.
  4. "View Population". Office of the Registrar General & Census Commissioner, India. பார்க்கப்பட்ட நாள் 21 July 2013.
  5. "Known As The Most Haunted Place In India, Bhangarh Fort Is Not Just Another Place To Visit". Holidify (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 12 August 2016.
  6. "Bhangarh Fort: The 'most haunted' place in India?". Yahoo News. பார்க்கப்பட்ட நாள் 21 July 2013.
  7. பாங்கர் கோட்டையில் விலகாத மர்மம்

ஊசாத்துணை[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=பாங்கர்_கோட்டை&oldid=3637096" இலிருந்து மீள்விக்கப்பட்டது