மாயாறு
Appearance
மாயாறு (Moyar) (மோயாறு) தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் ஓடும் ஒரு முக்கிய ஆறு ஆகும். இது முதுமலை பகுதியில் மாயாறு எனப் பெயர் பெற்றாலும் இதன் தோற்றுவாய் நீீீீீீலகிரி மலைகளின் மேற்கு உச்சியான முக்கூர்த்தி மலைப்பகுதியாகும். இங்கிருந்து பைகாரா, முதுமலை,மசினகுடி, தெங்குமரஹாடா வழியாகப் பாய்ந்து பவானி ஆற்றுடன் கலக்கிறது. [1][2] இவ்விடத்தில்தான் பவானிசாகர் அணை கட்டப்பட்டுள்ளதது.[3] இந்த ஆறு தமிழகம் கர்நாடகத்தின் எல்லைக்கோடாகவும் உள்ளது. நீலகிரி மலையின் மேற்குப் பகுதியில் உருவாகி தென்சரிவையொட்டி பவானி பாய்வதுபோல பவானிக்கருகில் நீலகிரி மலையின் மேற்குப்பகுதியில் உருவாகி வட சரிவையொட்டி பாய்ந்து பவானிசாகர் அணைப்பகுதியில் பவானியுடன் கலக்கிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ - சத்தியமங்கலம்
- ↑ - கொங்கு மண்டல வரலாறுகள்
- ↑ "மாயாறு காட்சி". Archived from the original on 2012-05-28. பார்க்கப்பட்ட நாள் 2012-04-27.