தெங்குமரஹாடா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தெங்குமரஹாடா
இருப்பிடம்: தெங்குமரஹாடா
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 11°34′06″N 76°55′35″E / 11.568232°N 76.926494°E / 11.568232; 76.926494ஆள்கூறுகள்: 11°34′06″N 76°55′35″E / 11.568232°N 76.926494°E / 11.568232; 76.926494
மாவட்டம் நீலகிரி
வட்டம் கோத்தகிரி
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர்
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)


தெங்குமரஹாடா, (Thengumarahada), தமிழ்நாட்டின், நீலகிரி மாவட்டத்தின், கோத்தகிரி வட்டம், கோத்தகிரி ஊராட்சி ஒன்றியப் பகுதியில் உள்ள தெங்குமரஹாடா ஊராட்சியில் அமைந்த சிற்றூர் ஆகும். இங்கு மாயாறு பாய்கிறது.

அமைவிடம்[தொகு]

மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள காப்புக் காட்டில் அமைந்த முதுமலை தேசியப் பூங்கா பரப்பில் தெங்குமரஹாடா கிராமம் உள்ளது. இக்கிராமம் நீலகிரி மாவட்டத்தின் கோத்தகிரி வட்டத்தில் அமைந்திருப்பினும், கொடநாட்டிலிருந்து மலைக்காடுகள் வழியாக, மூன்றரை மணி நேரம் நடந்து, 10 கி.மீ தொலைவில் உள்ள தெங்குமரஹாடா கிராமத்தை அடையலாம். தெங்குமரஹாடாவிலிருந்து கொடநாடு செல்ல அடிப்படை சாலை வசதிகள் இல்லை. ஆனால் ஈரோடு மாவட்டத்தின், பவானிசாகருக்கு வடமேற்கே 25 கிமீ தொலைவில் உள்ள தெங்குமரஹாடாவிற்கு செல்ல அரசுப் பேருந்து வசதிகள் இல்லாவட்டாலும், சொந்த ஊர்திகளில் மட்டும் செல்ல முடியும்.

மலையேற்றம்[தொகு]

தெங்குமரஹாடா பகுதிக்கு மலையேற்றப் பயிற்சி மேற்கொள்பவர்கள் உதகமண்டலம் வடக்கு மாவட்ட வனத்துறை அதிகாரிகளிடம் முறையாக அனுமதிபெற வேண்டும். வனத்துறை வழிகாட்டிகள் மூலம் மட்டும் மலையேற்றப் பயிற்சி மேற்கொள்ள முடியும். தெங்குமரஹாடாவில் உள்ள வனத்துறை அலுவலவகத்துக்குச் சொந்தமான விடுதியில் தங்கிக்கொள்ள முன் அனுமதி பெறவேண்டும்.[3][4]

மக்கள் பிரச்சனைகள்[தொகு]

இக்கிராமத்தில் நான்கு தலைமுறைகளாக 350 குடும்பங்கள், இங்கு பாயும் மோயாறு நீர்வளத்தைக் கொண்டு காட்டு வேளாண்மை செய்து வாழ்கின்றனர். சத்தியமங்கலம் வனவிலங்கு உய்வகம் மற்றும் புலிகள் காப்பகம் நிறுவப்பட்டதற்குப் பின், தெங்குமரஹாடா கிராம மக்கள், 38 கிமீ கிழக்கில் உள்ள சத்தியமங்கலத்தில் உள்ள கல்விநிலையம், சந்தை மற்றும் மருத்துவமனைகளுக்குச் செல்வதற்கு, நல்ல சாலை வசதி இன்மையால் பெருந்துயர் கொள்கின்றனர். இதனால் தெங்குமராஹாடா கிராம மக்கள் தங்களை வேறிடங்களில் குடியேற்றி வாழ வழிவகை செய்து தருமாறு அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.[5]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தெங்குமரஹாடா&oldid=3134470" இருந்து மீள்விக்கப்பட்டது