உத்தரப் பிரதேசம்
உத்தரப் பிரதேசம் | |
---|---|
மேலிருந்து கடிகாரச் சுற்றாக: தாஜ் மகால், ஆக்ரா கோட்டை, பத்தேப்பூர் சிக்ரி, சாரநாத், மணிகர்ணிகா படித்துறை, புதிய யமுனை பாலம் | |
சின்னம் | |
இந்தியாவில் உத்தரப் பிரதேசத்தின் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 26°51′N 80°55′E / 26.85°N 80.91°E | |
நாடு | இந்தியா |
மாநில அந்தஸ்து | 24 சனவரி 1950[1] |
தலைநகரம் மற்றும் பெரிய நகரம் | லக்னோ |
மாவட்டங்கள் | 75[2][3] |
அரசு | |
• நிர்வாகம் | உத்தரப் பிரதேச அரசு |
• ஆளுநர் | ஆனந்திபென் படேல்[4] |
• முதலமைச்சர் | யோகி ஆதித்தியநாத் (பாஜக) |
• சட்டமன்றம் | ஈரவை (404 + 100 இடங்கள்) |
• நாடாளுமன்ற தொகுதிகள் | மாநிலங்களவை 31 மக்களவை 80 |
• உயர் நீதிமன்றம் | அலகாபாத் உயர் நீதிமன்றம் |
பரப்பளவு | |
• மொத்தம் | 2,43,290 km2 (93,930 sq mi) |
• பரப்பளவு தரவரிசை | 4வது |
மக்கள்தொகை | |
• மொத்தம் | 19,98,12,341 |
• தரவரிசை | 1-வது |
• அடர்த்தி | 820/km2 (2,100/sq mi) |
இனம் | உத்தரப் பிரதேசியர் |
GDP (2018–19) | |
• மொத்தம் | ₹14.89 இலட்சம் கோடி (US$190 பில்லியன்) |
• தனிநபர் வருமானம் | ₹55,339 (US$690) |
மொழிகள்[8] | |
• அலுவல்முறை | இந்தி |
• கூடுதல் அலுவல்முறை | உருது |
நேர வலயம் | ஒசநே+05:30 (IST) |
UN/LOCODE | IN-UP |
வாகனப் பதிவு | UP XX—XXXX |
HDI (2017) | 0.583[9] medium · 35th |
கல்வியறிவு (2011) | 67.68%[10] |
பாலின விகிதம் (2011) | 912 ♀/1000 ♂[10] |
இணையதளம் | Official Website |
உத்தரப் பிரதேசம் (ஆங்கில மொழி: Uttar Pradesh) இந்தியாவின் மாநிலங்களுள் ஒன்றாகும். இந்தியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலம் இதுவே. லக்னோ இம்மாநிலத்தின் தலைநகராகும். அலகாபாத், கான்பூர், வாரணாசி, ஆக்ரா ஆகியவை மற்ற முக்கிய நகரங்கள். இந்தி, உருது ஆகியவை இம்மாநிலத்தில் பெரும்பான்மையாக பேசப்படும் மொழிகள். இந்தியாவின் ஆறு பிரதமர்கள் ஜவஹர்லால் நேரு, லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி, சரண் சிங், வி. பி. சிங், சந்திரசேகர் இம்மாநிலத்தில் பிறந்தவர்கள்.
புவியமைப்பு
[தொகு]இந்தியாவின் வட பகுதியில் அமைந்த மாநிலமான உத்தரப் பிரதேசம், இந்தியாவில் அதிக பரப்பளவு கொண்ட மாநிலங்களில் ஐந்தாம் இடம் வகிக்கிறது. உத்தரப் பிரதேசத்தின் அண்மையில் அமைந்த மாநிலங்கள் உத்தராகண்டம், இமாசலப் பிரதேசம், அரியானா, தில்லி, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சட்டிஸ்கர், ஜார்க்கண்ட், மற்றும் பீகார் ஆகியவை. உத்திரப் பிரதேசத்தின் வடக்கில் நேபாள நாடு அமைந்துள்ளது. கங்கை, யமுனை, கோமதி ஆறு ஆகிய பெரு நதிகள் உத்தரப் பிரதேசத்தின் வழியாக ஓடுவதால் இம்மாநிலம் செழிப்பாக உள்ளது.
2000ஆம் ஆண்டு உத்தராகண்டம் மாநிலம், உத்தரப் பிரதேசத்திலிருந்து பிரிக்கப்பட்டது. மாநிலத்தின் தெற்கு பகுதிகளில் புந்தேலி மொழி பேசும் வறண்ட வானிலை கொண்ட புந்தேல்கண்ட் மேட்டு நிலங்கள் அமைந்துள்ளது.
வேத காலத்தில் உத்தரப் பிரதேசம் குரு நாடு, பாஞ்சாலம் மற்றும் கோசல நாடு என மூன்று பகுதிகளாக இருந்தது.
வரலாற்றுக் காலத்தில் உத்தரப் பிரதேசம் புந்தேல்கண்ட், அவத், ரோகில்கண்ட், பூர்வாஞ்சல் மேல், நடு மற்றும் கீழ் தோப் பகுதிகள் என ஐந்து பகுதிகளாக உள்ளது.
வரலாறு
[தொகு]பண்டைய வேத காலத்தில் உத்தரப் பிரதேசப் பகுதிகளை குருக்கள், பாஞ்சாலர்கள் மற்றும் கோசலர்கள் என மூன்று அரச குலங்கள் ஆண்டனர்.
வரலாற்றுக் காலத்தில் இம்மாநிலத்தின் வளமான அவத், தோவாப், பூர்வாஞ்சல், புந்தேல்கண்ட் மற்றும் ரோகில்கண்ட் பகுதிகளை தில்லி சுல்தானகம் மற்றும் மொகலாயர்களாலும்; பின்னர் பாரசீக சியா இசுலாமிய நவாப்புகள் மற்றும் ஆப்கானிய பஷ்தூன் அரச குலம் 1719 முதல் 1858 முடிய தனியுரிமையுடனும்; பின்னர் சிப்பாய்க் கிளர்ச்சிக்குப் பின்னர் 1858 முதல் 1947 முடிய ஆங்கிலேயர்களுக்கு கட்டுப்பட்டு, ஆண்டுதோறும் கப்பம் செலுத்தி சுதேச சமஸ்தான மன்னர்களாக ஆட்சி செய்தனர். பின்னர் இந்திய விடுதலைக்குப் பின்னர் 1948-ஆம் ஆண்டில் அவத் இராச்சியம் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. அவத் பகுதிகளில் சமசுகிருதம் – பாரசீகம் கலந்த அவதி மொழி பேசப்படுகிறது.
அரசியல்
[தொகு]உத்தரப் பிரதேச மாநிலத்தின் தற்போதைய முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்.
மக்கள் தொகையியல்
[தொகு]2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை 199,812,341 ஆக உள்ளது. நகர்புறங்களில் 22.27% மக்களும், கிராமப்புறங்களில் 77.73% மக்களும் வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001–2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 20.23% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் 104,480,510 ஆண்களும் மற்றும் 95,331,831 பெண்களும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு பெண்கள் 912 வீதம் உள்ளனர். 240,928 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாநிலத்தில் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 829 ஆக உள்ளது. இம்மாநிலத்தின் சராசரி படிப்பறிவு 67.68% ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 77.28% ஆகவும், பெண்களின் படிப்பறிவு 57.18% ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 30,791,331 ஆக உள்ளது.[11]
சமயம்
[தொகு]இம்மாநிலத்தில் இந்து சமயத்தவரின் மக்கள் தொகை 159,312,654 (79.73 %) ஆகவும் இசுலாமிய சமய மக்கள் தொகை 38,483,967 (19.26%) ஆகவும், சீக்கிய சமயத்தவரின் மக்கள் தொகை 643,500 (0.32%) ஆகவும் கிறித்தவ சமயத்தினரின் மக்கள் தொகை 356,448 (0.18%) ஆகவும், சமண சமய மக்கள் தொகை 213,267 (0.11%) ஆகவும், பௌத்த சமய மக்கள் தொகை 206,285 (0.10%) ஆகவும், பிற சமயத்து மக்கள் தொகை 13,598 (0.01%) ஆகவும் மற்றும் சமயம் குறிப்பிடாதவர்கள் மக்கள் தொகை 582,622 (0.29%) ஆகவும் உள்ளது.
மொழிகள்
[தொகு]இம்மாநிலத்தின் ஆட்சி மொழியான இந்தி மொழியுடன், உருது, பஞ்சாபி மற்றும் வட்டார மொழிகளும் பேசப்படுகிறது.[8]
மாவட்டங்கள்
[தொகு]உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் பதினெட்டு நிர்வாகக் கோட்டங்களின் கீழ், எழுபது வருவாய் மாவட்டங்கள் அமைந்துள்ளன. அவைகள் பின்வருமாறு;
- ஆக்ரா
- அலகாபாத்
- அலிகர்
- அம்பேத்கார் நகர்
- ஔரையா
- ஆசம்கர்
- பாராபங்கி
- பதாவுன்
- பகராயிச்
- பிஜ்னோர்
- பலியா
- சம்பல் (பீம்நகர்)
- பாந்தா
- பலராம்பூர்
- பரேலி
- பஸ்தி
- புலந்சகர்
- சந்தௌலி
- சித்திரகூடம்
- தியோரியா
- ஏட்டா
- இட்டாவா
- பெரோசாபாத்
- பரூகாபாத்
- பதேபூர்
- பைசாபாத்
- கௌதம புத்தர் நகர்
- கோண்டா
- காசிப்பூர்
- கோரக்பூர்
- காசியாபாத்
- அமீர்பூர்
- ஹர்தோய்
- மகாமாயா நகர்
- ஜான்சி
- அம்ரோகா
- ஜவுன்பூர்
- இராமாபாய் நகர்
- கன்னோஜ்
- கான்பூர்
- கன்ஷிராம் நகர்
- கௌசாம்பி
- குசிநகர்
- லலித்பூர்
- லக்கிம்பூர் கேரி
- லக்னோ
- மவூ
- மகாராஜ்கஞ்ச்
- மகோபா
- மிர்சாபூர்
- மொராதாபாத்
- மைன்புரி
- மதுரா
- முசாபர்நகர்
- பிலிபித்
- பிரதாப்கர்
- ராம்பூர்
- ரேபரேலி
- சகாரன்பூர்
- சீதாப்பூர்
- ஷாஜகான்பூர்
- சாம்லி
- சித்தார்த் நகர்
- சோன்பத்ரா
- சந்த் ரவிதாஸ் நகர்
- சுல்தான்பூர்
- சிராவஸ்தி
- உன்னாவ்
- வாரணாசி
- ஹப்பூர்
சுற்றுலா
[தொகு]உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களும், ஆன்மிக வழிபாட்டுத் தலங்களும்; தாஜ்மகால், பத்தேப்பூர் சிக்ரி , ஆக்ரா, பிரயாகை, வாரணாசி, அயோத்தி, ராம ஜென்மபூமி, மதுரா, பிருந்தாவனம், கிருஷ்ண ஜென்மபூமி, கயை, புத்தகயா, சாரநாத் மற்றும் குசிநகர் ஆகும்.
முக்கிய கல்வி நிலையங்கள்
[தொகு]இந்திய தொழில்நுட்பக் கழகம் கான்பூர், பனாரசு இந்து பல்கலைக்கழகம், அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம், அலகாபாத் பல்கலைக்கழகம், இந்திய மேலாண்மை கழகம் லக்னோ, இராஜிவ் காந்தி பெட்ரேலிய தொழில் நுட்ப நிறுவனம் மற்றும் மோதிலால் நேரு தேசிய தொழில் நுட்பக் கழகம் ஆகும்.
பொருளாதாரம்
[தொகு]மாநிலத்தின் பொருளாதாரம் வேளாண்மைத் தொழிலையே சார்ந்து உள்ளது. முக்கிய விளைபொருட்கள் கோதுமை, நெல், கரும்பு ஆகும். புதிய நொய்டா பெருநகர் ஆசியாவில் மிக விரைவாக வளர்ந்துவரும் தொழில் நகரங்களில் ஒன்றாக உள்ளது.
முக்கிய விழாக்கள்
[தொகு]படங்கள்
[தொகு]-
உத்தரபிரதேச கிராம மக்கள்
-
உத்தரபிரதேச கிராம மக்கள்
-
உத்தரபிரதேச கிராம மக்கள்
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "United Province, UP was notified in Union gazette on January 24, 1950". தி நியூ இந்தியன் எக்சுபிரசு. 2 May 2017 இம் மூலத்தில் இருந்து 8 May 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170508200722/http://www.newindianexpress.com/nation/2017/may/02/uttar-pradesh-introduces-new-transfer-policy-1600219.html. பார்த்த நாள்: 4 May 2017.
- ↑ "Uttar Pradesh District". up.gov.in. Government of Uttar Pradesh. Archived from the original on 15 ஏப்பிரல் 2017. பார்க்கப்பட்ட நாள் 12 ஏப்பிரல் 2017.
- ↑ "List of districts in Uttar Pradesh". archive.india.gov.in. இந்திய அரசு. Archived from the original on 26 ஏப்பிரல் 2017. பார்க்கப்பட்ட நாள் 12 ஏப்பிரல் 2017.
- ↑ "The Governor of Uttar Pradesh". uplegisassembly.gov.in. 'Uttar Pradesh Legislative Assembly. Archived from the original on 3 மே 2017. பார்க்கப்பட்ட நாள் 12 ஏப்பிரல் 2017.
- ↑ "Social Demography" (PDF). உத்தரப் பிரதேச அரசு. Archived from the original (PDF) on 29 சூன் 2017. பார்க்கப்பட்ட நாள் 30 ஆகத்து 2017.
- ↑ "Statistics Of Uttar Pradesh". up.gov.in. 'Government of Uttar Pradesh. Archived from the original on 12 ஏப்பிரல் 2017. பார்க்கப்பட்ட நாள் 12 ஏப்பிரல் 2017.
- ↑ Khullar, Vatsal (20 February 2018). "Uttar Pradesh Budget Analysis 2018–19" (PDF). பி ஆர் எஸ் சட்ட ஆராய்ச்சி நிறுவனம். Archived from the original (PDF) on 21 February 2018. பார்க்கப்பட்ட நாள் 28 March 2018.
- ↑ 8.0 8.1 "Report of the Commissioner for linguistic minorities: 52nd report (July 2014 to June 2015)" (PDF). Commissioner for Linguistic Minorities, Ministry of Minority Affairs, Government of India. pp. 49–53. Archived from the original (PDF) on 2016-11-15. பார்க்கப்பட்ட நாள் 16-02-2016.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Sub-national HDI – Area Database". Global Data Lab. Institute for Management Research, Radboud University. பார்க்கப்பட்ட நாள் 25 September 2018.
- ↑ 10.0 10.1 "Census 2011 (Final Data) – Demographic details, Literate Population (Total, Rural & Urban)" (PDF). planningcommission.gov.in. Planning Commission, Government of India. பார்க்கப்பட்ட நாள் 3 October 2018.
- ↑ http://www.census2011.co.in/census/state/uttar+pradesh.html