சீசியம் எழுபுளோரோசெனேட்டு
Appearance
இனங்காட்டிகள் | |
---|---|
19033-04-6 | |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
| |
பண்புகள் | |
CsF7Xe | |
வாய்ப்பாட்டு எடை | 397.19 g·mol−1 |
தோற்றம் | மஞ்சள் நிறத் திண்மம் |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
சீசியம் எழுபுளோரோசெனேட்டு (Caesium heptafluoroxenate) என்பது CsXeF7 என்ற என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். சீசியம், செனான், புளோரின் ஆகிய தனிமங்கள் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.
தயாரிப்பு
[தொகு]செனான் அறுபுளோரைடை உருகிய சீசியம் புளோரைடில் கரைக்கும்போது சீசியம் எழுபுளோரோசெனேட்டு உருவாகிறது.:[1]
- CsF + XeF6 -> CsXeF7
இயற்பியல் பண்புகள்
[தொகு]சீசியம் எழுபுளோரோசெனேட்டு அறை வெப்பநிலையில் நிலைப்புத்தன்மையோடு மஞ்சள் நிறத்தில் ஒரு திண்மப் பொருளாகக் காணப்படுகிறது. இது மிகவும் வலுவான ஓர் ஆக்சிசனேற்றியாகும்.
வேதியியல் பண்புகள்
[தொகு]சீசியம் எழுபுளோரோசெனேட்டு 50°செல்சியசு வெப்பநிலையில் சிதைவுக்கு உள்ளாகி சீசியம் ஆக்டாபுளோரோ செனேட்டை உருவாக்குகிறது.:[2]
- 2CsXeF7 -> Cs2XeF8 + XeF6
பயன்கள்
[தொகு]ஒரு வினை கலவையிலிருந்து செனான் அறுபுளோரைடை தனித்துப் பிரிக்க சீசியம் எழுபுளோரோசெனேட்டு பயன்படுத்தப்படுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Raghavan, P. S. (1998). Concepts And Problems In Inorganic Chemistry (in ஆங்கிலம்). Discovery Publishing House. p. 283. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7141-418-5. பார்க்கப்பட்ட நாள் 29 February 2024.
- ↑ Holliday, A. K.; Massey, A. G. (22 October 2013). Non-Aqueous Solvents in Inorganic Chemistry: The Commonwealth and International Library: Chemistry Division (in ஆங்கிலம்). Elsevier. p. 110. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4831-5941-6. பார்க்கப்பட்ட நாள் 29 February 2024.