மாயாறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மோயாறு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
முதுமலை தேசிய பூங்கா அருகில் பாயும் மாயாறு

மாயாறு (Moyar) (மோயாறு)தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு முக்கிய ஆறு ஆகும். இது முதுமலை பகுதியில் மாயாறு எனப் பெயர் பெற்றாலும் இதன் தோற்றுவாய் நீீீீீீலகிரி மலைகளின் மேற்கு உச்சியான முக்கூர்த்தி மலைப்பகுதியாகும். அங்கிருந்து பைகாரா முதுமலை,மசினகுடி, தெங்குமரஹாடா வழியாகப் பாய்ந்து பவானி ஆற்றுடன் கலக்கிறது. [1].[2] இவ்விடத்தில்தான் பவானிசாகர் அணை கட்டப்பட்டுள்ளதது[3]. இவ்வாறு தமிழகம் கர்நாடகத்தின் எல்லைக்கோடாகவும் உள்ளது. நீலகிரி மலையின் மேற்குப் பகுதியில் உருவாகி தென்சரிவையொட்டி பவானி பாய்வதுபோல பவானிக்கருகில் நீலகிரி மலையின் மேற்குப்பகுதியில் உருவாகி வட சரிவையொட்டி பாய்ந்து பவானிசாகர் அணைப்பகுதியில் பவானியுடன் இணைகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. - சத்தியமங்கலம்
  2. - கொங்கு மண்டல வரலாறுகள்
  3. "மாயாறு காட்சி". 2012-05-28 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2012-04-27 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாயாறு&oldid=3224485" இருந்து மீள்விக்கப்பட்டது