மகாபிரஸ்தானிக பருவம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தர்மன் தவிர இதர பாண்டவர் மற்றும் திரௌபதியின் இறப்புகளை விளக்கும் பகுதி

மகாபிரஸ்தானிக பருவம் (Mahaprasthanika Parva), வியாச மகாபாரத்தின் 17வது பர்வம். இப்பர்வத்தில் தர்மன் தவிர இதர பாண்டவர் மற்றும் திரௌபதியின் இறப்புகளை விளக்கும் பகுதி.

பரிட்சித்திற்கு அத்தினாபுர அரச மகுடம் சூட்டியபின், பாண்டவர் மற்றும் திரௌபதி துறவு பூண்டு காணகம் செல்கையில் ஒரு நாயும் அவர்களுடன் சென்றது. இமயமலை மற்றும் மேரு மலை கடந்து சென்று தேவ உலகம் செல்லும் வழியில் முதலில் திரௌபதி சேர்வடைந்து இறந்தாள். பின் சகாதேவன், நகுலன், அருச்சுனன் மற்றும் வீமன் ஆகியோர் ஒருவர் பின் ஒருவராக இறந்தனர்.

தருமரை மட்டும் சுவர்க்கத்திற்கு அழைத்துச் செல்ல தேவேந்திரனே தேவ விமானத்துடன் வந்தார். தன் சகோதரர்களும், திரௌபதியும் இல்லாமல் நான் மட்டும் வர இயலாது என தருமர் பதில் உரைத்த போது, விமானத்தில் நாய் ஏற முற்பட்டது. அப்போது இந்த நாய்க்குச் சுவர்க்கத்தில் இடமில்லை என்று கூறித் தடுத்தான் இந்திரன்.

என்னிடம் அடைக்கலம் அடைந்த நாயை விட்டு சுவர்க்கலோகம் வர மாட்டேன் என்றார் தருமர். அப்போது நாய் வடிவத்தில் இருந்த தர்மதேவதை, தருமருக்கு காட்சியளித்து மறைந்தது. தருமர் மட்டும் ரதத்தில் ஏறிச் சுவர்க்கலோகம் சென்றார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.yorku.ca/inpar/mahapras_ganguli.inp.pdf

வெளியிணைப்புக்கள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=மகாபிரஸ்தானிக_பருவம்&oldid=3463250" இலிருந்து மீள்விக்கப்பட்டது