அத்தினாபுரம்
அத்தினாபுரம் | |
|---|---|
கைலாஷ் பர்வதம் ரஞ்சனா | |
| ஆள்கூறுகள்: 29°10′N 78°01′E / 29.17°N 78.02°E | |
| நாடு | |
| மாநிலம் | உத்தரப் பிரதேசம் |
| மாவட்டம் | மீரட் |
| ஏற்றம் | 212 m (696 ft) |
| மக்கள்தொகை (2011) | |
| • மொத்தம் | 58,452 |
| மொழிகள் | |
| • அலுவல் மொழிகள் | இந்தி மற்றும் ஆங்கிலம் |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
| அஞ்சல் சுட்டு எண் | 250404 |
| வாகனப் பதிவு | UP-15 |

அஸ்தினாபுரம், இந்தியாவின் உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் மீரட் மாவட்டத்தில் அமைந்த பேரூராட்சி மற்றும் இந்தியாவின் பண்டைய நகரங்களில் ஒன்றாகும்.
அமைவிடம்
[தொகு]அத்தினாபுரம், மீரட் நகரத்திற்கு வடகிழக்கே 45.4 கிலோமீட்டர் தொலைவிலும்; புது தில்லிக்கு 133 கிலோமீட்டர் தொலைவில் கங்கை ஆற்றின் கரையில் அமைந்த பேரூராட்சி ஆகும். [1][2][3]
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2011ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, 15வார்டுகளும், 4,923 குடியிருப்புகளும் கொண்ட அஸ்தினாபுரம் பேரூராட்சியின் மக்கள் தொகை 26,452 ஆகும். மக்கள் தொகையில் 14,010 ஆண்கள் மற்றும் 12,442 பெண்கள் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 13.52% ஆக உள்ளனர்.இதன் மக்கள் தொகை பட்டியல் சமூகத்தவர்கள் 32.35% வீதம் உள்ளனர் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 888 வீதம் உள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 73.48% ஆகும். அத்தினாபுரம் பேரூராட்சியில் இந்து சமயத்தின் 91.47% இசுலாமியர்1.67%, கிறித்தவர் 0.25% சீக்கியர்கள் 5.03%, சமணர்கள் 1.51%, பௌத்தர்கள் 0.02% மற்றும் பிறர் 0.05% வீதம் உள்ளனர்.[4]
இந்து தொன்மவியலில் அத்தினாபுரம்
[தொகு]பண்டைய இந்தியாவில் குரு நாட்டை நிறுவியவர் சந்திர குல குரு ஆவார். குருநாட்டின் தலைநகரம் அஸ்தினாபுரம் ஆகும்.
ஆட்சியாளர்கள்
[தொகு]- குரு
- சாந்தனு
- பீஷ்மர்
- சித்ராங்கதன்- சாந்தனுவுக்கும் சத்தியவதிக்கும் பிறந்தவர்
- விசித்திரவீரியன் - சித்ராங்கதனின் தம்பி
- திருதராட்டிரன் - - அம்பிகாவின் மகன் (விசித்திரவீரியனின் முதல் மனைவி)
- பாண்டு - அம்பாலிகாவின் மகன் (விசித்திரவீரியனின் இரண்டாம் மனைவி)
- துரியோதனன்- திருதராட்டிரன் மகன்
- தருமர் - குந்தியின் மகன்
- பரீட்சித்து - அபிமன்யு - உத்தரைக்கும் பிறந்தவன்
- ஜனமேஜயன் - பரீட்சித்தின் மகன்
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Uttar Pradesh - History". Encyclopedia Britannica (in ஆங்கிலம்). Retrieved 2019-12-16.
- ↑ J.P. Mittal (2006). History Of Ancient India (a New Version) : From 7300 Bb To 4250 Bc. Vol. 1. New Delhi: Atlantic Publishers & Distributors. p. 308. ISBN 978-81-269-0615-4. Retrieved 21 March 2018.
- ↑ Singh, Upinder (2008). A History of Ancient and Early Medieval India From the Stone Age to the 12th Century. ISBN 9788131711200.
- ↑ Hastinapur Population Religion Data
மேலும் வாசிக்க
[தொகு]- B.B. Lal (1952). New Light on the "dark Age" of Indian History: Recent Excavations at the Hastinapura Site, Near Delhi. Illustrated London news.
- Braj Basi Lal (1955). Excavations at Hastinapura and Other Explorations [in the Upper Gangā and Sutlej Basins], 1950-52.