சாகீர் உசேன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஜாகீர் உசேன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஜாகிர் ஹுசைன்
زاکِر حسین
DR. ZAKIR HUSAIN - PICTORIAL BIOGRAPHY 0005.jpg
3வது இந்தியக் குடியரசுத் தலைவர்
பதவியில்
13 மே 1967 – 3 மே 1969
பிரதமர் இந்திரா காந்தி
துணை குடியரசுத் தலைவர் வி. வி. கிரி
முன்னவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்
பின்வந்தவர் வி. வி. கிரி
2வது இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்
பதவியில்
13 மே 1962 – 12 மே 1967
குடியரசுத் தலைவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்
முன்னவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்
பின்வந்தவர் வி. வி. கிரி
11வது பீகார் ஆளுனர்
பதவியில்
6 ஜூலை 1957 – 11 மே 1962
முன்னவர் ஆர்.ஆர் திவாகர்
பின்வந்தவர் மடபூஷிய அனந்தசயனம் அய்யங்கர்
தனிநபர் தகவல்
பிறப்பு ஐதராபாத்
இறப்பு புது தில்லி
அரசியல் கட்சி சுயேட்சை
வாழ்க்கை துணைவர்(கள்) சாஜகான் பேகம்
சமயம் இஸ்லாம்

சாகிர் உசேன் (Zakir Hussain, About this soundகேட்க , உருது: ذاکِر حسین, தெலுங்கு: జాకీర్ హుస్సైన్); 8 பெப்ரவரி 1897 - 3 மே 1969) இந்தியாவின் மூன்றாவது குடியரசுத் தலைவர் ஆவார். இவர் 1967 இல் இருந்து 1969 வரை அவர் இறக்கும் வரை அப்பதவியை வகித்தார். 1962-1967 காலத்தில் இவர் துணைக் குடியரசுத் தலைவராகவும் இருந்தார்.

இவர் கல்வித்துறையில் சிறந்த அறிஞராகவும் திறமைமிக்க நிருவாகியாகவும் விளங்கினார். ஆந்திர மாநிலத்தின் தலைநகரான ஐதராபாத்தில் 1897 பெப்ரவரி 8 ஆம் நாள் அவர் பிறந்தார்.[1][2][3] உத்தரப் பிரதேசத்திலுள்ள எடவா என்ற ஊரில் உயர்நிலைக் கல்வி கற்றார். அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்றார். பின் செருமானியிலுள்ள பெர்லின் பல்கலைக் கழகத்தில் பயின்று பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.[4]

அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகத்தில் மாணவராக இருந்தபோது , காந்தியடிகளின் தீவிர பற்றாளரானார். காந்தியடிகளின் ஆதாரக் கல்விமுறை இவரை மிகவும் கவர்ந்த்து. கல்வித்துறையில் அவர் பணியாற்றியபோது ஆதாரக் கல்விமுறையினை நாடெங்கும் பரப்ப அரும்பாடுபட்டார்.

இந்தியநாட்டின் தலைநகரான டெல்லியில் அமைந்துள்ள ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக் கழகத்தின் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக 1926 முதல் 1948 வரை பணியாற்றினார். அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராகவும் எட்டு ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்கள். பீகார் மாநிலத்தின் ஆளுநராகவும்இருந்தார். 1962 ல் மே மாதத்தில் இந்தியாவின் குடியரசுத் துணைத் தலைவராகத் தேர்வுபெற்றார். 1967 ல் இந்திய குடியரசுத் தலைவராகத் தேர்ந்து எடுக்கப்பட்டார். இரண்டு ஆண்டுகளே அப்பதவியிலிருந்த அவர் 1969 மே மாதம் 3 ஆம் நாள் காலமானார்.

ஜாகிர் ஹுசேன், இந்திய அரசின் உயர்நிலைக் கல்வி வாரியத்தின் தலைவராக இருந்து ,உயர்நிலைக் கல்விச் சீர்திருத்தத்திற்கான பலதிட்டங்களை வகுத்துக் கொடுத்தார். சர்வதேசக் கல்வ நிறுவனங்கள் பலவற்றுடன் தொடர்பு கொண்டிருந்தார்.யுனெஸ்கோ நிருவாக வாரியத்தின் உறுப்பினராகப் பணியாற்றினார். அவர் ஆங்கிலம் இந்தி, உருது ஆகிய மொழிகளில் சிறந்த பேச்சாளராகவும் எழுத்தாளராகவும் விளங்கினார்.இம்மூன்று மொழிகளிலும் ஆதாரக்கல்வி முறை குறித்தும் கல்வி வளர்ச்சி பற்றியும் பல நூல்கள் எழுதியுள்ளார். பிளேட்டோவின் குடியரசு என்ற நூலை உருது மொழியில் மொழிமாற்றம் செய்துள்ளார்.

வழங்கப்பட்ட விருதுகள்[தொகு]

கல்வித் துறையில் இவர் ஆற்றிய அருந்தொண்டினைப் பாராட்டி ,இந்திய அரசு இவருக்கு 1954 ல் பத்ம விபூஷண் எனும் விருதினை வழங்கிப் பாராட்டியது. 1963-ல் நாட்டின் மிக உயர்ந்த விருதாகிய பாரத ரத்னா விருது வழங்கிச் சிறப்பித்தது. டெல்லி, கல்கத்தா, அலகபாத், அலிகார், கெய்ரோ ஆகிய பல்கலைக் கழகங்கள் இவருக்கு இலக்கிய மேதை பட்டம் வழங்கிச் சிறப்பித்தன.

கல்வித்துறையில் எளிமையும் புதுமையும்[தொகு]

சாகிர் உசேன், ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்தபோது, மாணவர்கள் புழுதி படிந்த ஷூக்களுடன் வகுப்புக்கு வரக் கூடாது என்று கண்டிப்பாகக் கூறி இருந்தார்.ஆனால் சிலர் அந்த ஆணையைப் புறக்கணித்தனர். ஒரு நாள் சாகிர் உசேன் கல்லூரி வாசலில் நின்று கொண்டார். உள்ளே நுழைந்த மாணவர்கள் தங்களுக்கு அன்று திட்டும் தண்டனையும் கிடைக்கப் போவது நிச்சயம் என எண்ணினார்கள்.ஆனால் முதலில் உள்ளே வந்த மாணவனிடம் அவர், உன் காலணிகள் அழுக்கடைந்துள்ளன. கொஞ்சம் காலை நீட்டு. நான் அவற்றைத் துடைக்கிறேன் என்று பாலிஷும் பிரஷ்ஷுமாக நின்றார். இதைச் சிறிதும் எதிர்பாராத மாணவர்கள் அதிர்ச்சியும் வெட்கமும் அடைந்தனர். தங்கள் துணைவேந்தரின் எளிமையையும் அக்கறையையும் பார்த்த அவர்கள் அவரிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டனர். இனி தூசி படிந்த காலணிகளுடன் வகுப்புக்கு வர மாட்டோம் என்று சபதம் செய்தனர். [5]

மேற்கோள்கள்[தொகு]

  1. Zakir Husain, Encyclopædia Britannica Online, 12 February 2012, 13 May 2012 அன்று பார்க்கப்பட்டது
  2. "History under threat". The Hindu. 10 October 2011. http://www.thehindu.com/news/cities/Hyderabad/article2524995.ece. பார்த்த நாள்: 10 December 2012. 
  3. Sharma, Vishwamitra (2007). Famous Indians of the 21st century. Pustak Mahal. p. 60. ISBN 81-223-0829-5. Retrieved 18 September 2010
  4. First Indian President to Die in Office, 13 June 2014 அன்று பார்க்கப்பட்டது
  5. தலைவனாகத் தொண்டாற்று, 10 செப்டம்பர் 2014 அன்று மூலம் பரணிடப்பட்டது, 13 June 2014 அன்று பார்க்கப்பட்டது
  • குழந்தைகள் கலைக்களஞ்சியம்-தமிழ் வளர்ச்சிக் கழகம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாகீர்_உசேன்&oldid=3243418" இருந்து மீள்விக்கப்பட்டது