அசாம்
அசாம் | |
---|---|
பண்: "ஓ’ மோர் ஆபோனார் தேஷ்"[1] (ஓ, என் அன்புமிக்க தாய்மண்ணே) | |
ஆள்கூறுகள் (திஸ்பூர், குவகாத்தி): 26°08′N 91°46′E / 26.14°N 91.77°E | |
நாடு | இந்தியா |
Statehood† | 26 சனவரி 1950[1] |
தலைநகரம் | திஸ்பூர் |
பெரிய நகரம் | குவகாத்தி |
மாவட்டங்கள் | 33 |
அரசு | |
• ஆளுநர் | ஜகதீஷ் முகீ [2] |
• முதலமைச்சர் | ஹிமாந்த பிஸ்வாஸ் சர்மா (பாஜக) |
• சட்டமன்றம் | ஓரவை (126 இடங்கள்) |
• நாடாளுமன்ற இடங்கள் | மக்களவை 7 மக்களவை 14 |
• உயர்நீதிமன்றம் | கவுகாத்தி உயர்நீதிமன்றம் |
பரப்பளவு | |
• மொத்தம் | 78,438 km2 (30,285 sq mi) |
• பரப்பளவு தரவரிசை | 17வது |
ஏற்றம் | 45−1,960 m (148−6,430 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 3,12,05,576 |
• தரவரிசை | 15வது |
• அடர்த்தி | 397/km2 (1,030/sq mi) |
இனம் | அசாமியர் |
GDP | |
• மொத்தம் (2018–19) | ₹3.33 இலட்சம் கோடி (US$42 பில்லியன்) |
• தனிநபர் வருமானம் (2015–16) | ₹60,952 (US$760) |
மொழிகள் | |
• அலுவல்முறை | அசாமியம் |
• கூடுதல் அலுவல்முறை | வங்காளம்[5] போடோ[6] |
நேர வலயம் | ஒசநே+05:30 (IST) |
ஐஎசுஓ 3166 குறியீடு | IN-AS |
HDI (2015) | 0.605[7] medium · 30th |
படிப்பறிவு (2011) | 72.19%[8] |
பாலின விகிதம் (2011) | 958 ♀/1000 ♂[8] |
இணையதளம் | assam |
† First recognised as an administrative division on 1 April 1911, and led to the establishment of Assam Province by partitioning Province of East Bengal and Assam. ^[*] Assam was one of the original provincial divisions of British India. ^[*] Assam has had a legislature since 1937.[9] |
சின்னம் | அசாமின் முத்திரை |
---|---|
அலுவல் மொழி(கள்) | அசாமியம் |
நடனம் | பிகு நடனம் |
விலங்கு | இந்திய காண்டாமிருகம் |
பறவை | வெள்ளை இறகு வாத்து |
மலர் | Rhynchostylis retusa |
மரம் | ' ஓலோங் மரம் |
ஆறு | பிரம்மபுத்திரா ஆறு |
அசாம் மாநிலம் வடகிழக்கு இந்தியாவில் அமைந்துள்ளது, 28 மாநிலங்களுள் ஒன்றாகும். இதன் தலைநகர் திஸ்பூர். குவகாத்தி இம்மாநிலத்தின் முக்கிய நகரம் ஆகும். அசாமிய மொழி, போடோ மொழி மற்றும் வங்காள மொழி ஆகியன அசாமின் அலுவல்முறை மொழிகளாகும்.
அசாம் மாநிலம் தெற்கு இமய மலையின் கிழக்குப் பகுதியில், பிரம்மபுத்திரா மற்றும் பாரக் ஆகிய ஆறுகளின் பாயும் பள்ளத்தாக்கையும், அதனை ஒட்டி அமைந்துள்ள மலைகளையும் கொண்டுள்ளது. இம்மாநிலத்தின் பரப்பளவு சுமார் 78,438 சதுர கிலோமீட்டர்கள். அசாம் மாநிலத்தை ஒட்டியுள்ள 6 மாநிலங்களையும், அசாம் மாநிலத்தையும் , ஏழு சகோதரிகள் என்று அழைப்பர். அவையாவன: அருணாச்சலப் பிரதேசம், நாகலாந்து, மணிப்பூர், மிசோரம், திரிபுரா மற்றும் மேகாலயா.
இவ்வேழு மாநிலங்களும் மற்ற இந்திய மாநிலங்களோடு மேற்கு வங்காளம் மாநிலத்தின் ஒரு சிறிய பகுதியின் மூலமாகவே நிலவழியாக இணைக்கப்படுகின்றன. இப்பாதையை சிலிகுரி பாதை என்றும், கோழி கழுத்துப் பாதை என்றும் அழைக்கப்படுகிறது .[10] அசாம் மாநிலம் பூட்டான் மற்றும் வங்காள தேசம் ஆகிய நாடுகளுடன் சர்வதேச எல்லைகளையும் கொண்டுள்ளது.
அசாம் மாநிலம், 1826 ஆம் ஆண்டு ஆங்கிலேயரின் யாண்டபோ உடன்படிக்கையால் இந்தியாவின் அங்கமானது.
தேயிலை உற்பத்தியில் சிறந்து விளங்கும் அசாம் மாநிலம், பெட்ரோலியம், பட்டு ஆகியவற்றின் உற்பத்தியிலும் சிறந்து விளங்குகிறது. உலகில் வேறெங்கிலும் காண கிடைக்காத பல அரிய விலங்கினங்களும், தாவர வகைகளும் அசாம் காடுகளில் காணப்படுகின்றன. உதாரணமாக, ஒற்றைக்கொம்பு காண்டாமிருகம், புலி, ஆசிய யானை ஆகிய அரியவகை விலங்குகள் இம்மாநிலக் காடுகளில் வாழுகின்றன. இதன் காரணமாக, இவ்விலங்கினங்களைக் காண உலகமெங்கிலும் இருந்து இயற்கை ஆர்வலர்களும், சுற்றுலாப் பயணிகளும் அசாம் மாநிலத்திற்கு வருகை தருகின்றனர். குறிப்பாக, காசிரங்கா பகுதியும், மணாஸ் பகுதியும் உலக பாரம்பரியக் களங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன[11]. முன்காலத்தில் அசாம் மாநிலம் அதன் காட்டு வளத்திற்கும், காட்டில் இருந்து கிடைக்கும் பொருள்களுக்கும் புகழ்பெற்றிருந்தது. தொடர்ச்சியான காட்டழிப்பால் இம்மாநிலத்தின் காடுகளின் நிலை பெரும் கேள்விக்குள்ளாகியுள்ளது. உலகின் அதிக மழைபெய்யும் இடங்களில் ஒன்றான அசாம் மாநிலம், மாபெரும் ஆறான பிரம்மபுத்திரா ஆற்றினால் வளம் பெறுகிறது
பெயர்க்காரணம்
[தொகு]அசாம் மகாபாரதத்தில் பிரகியோதிசா என்ற பெயரிலும், காமரூபா அரசு என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது. அசாம் என்ற பெயர் இப்பகுதியை 1228 முதல் 1826 வரை ஆண்ட அகோம் அரசின் பெயரால் சூட்டப்பட்டதாகத் தெரிகிறது.[12] ஆங்கிலேய ஆதிக்கத்தின்கீழ் 1838 ஆம் ஆண்டு வந்த அசாம் நிலப்பகுதி, அதே பெயரிலேயே அழைக்கப்பட்டது. 2006 ஆம் ஆண்டு பெப்பிரவரி மாதம் 27ஆம் தியதி இன்றைய அசாம் அரசு மாநிலத்தின் பெயரை அசோம் என மாற்றியமைத்தது.[13] இம்மாற்றம் மக்களிடையே பரவலான எதிர்ப்பை உருவாக்கியது.[14]
புவியியல்
[தொகு]பல புவியியல் ஆய்வுகளின் முடிவில் அசாம் மாநிலத்தின் வற்றாஆறான பிரம்மபுத்திரா ஆறு, இமயமலை தோன்றுவதற்கு முன்னரே தோன்றியதாகக் கண்டறிந்துள்ளனர். அருணாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் மிகவேகமாக பாயும் பிரம்மபுத்திரா ஆறானது அசாம் மாநிலத்தில் வேகம் குறைந்து, பல கிளை ஆறுகளாக பிரிந்து, சுமார் 80 முதல் 100 கிலோமீட்டர் அகலமும், 1000 கிமீ நிளமும் கொண்ட பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கை வளம் செய்கிறது.
அசாம் மாநிலத்தின் நிர்வாகக் கோட்டங்கள்
[தொகு]- கீழ் அசாம் கோட்டம்
- நடு அசாம் கோட்டம்
- மலைகள் மற்றும் பராக் பள்ளத்தாக்கு கோட்டம்
- மேல் அசாம் கோட்டம்
- வடக்கு அசாம் கோட்டம்
மாவட்டங்கள்
[தொகு]அசாம் மாநிலத்தில் 33 மாவட்டங்கள் உள்ளன, அவை பின்வருமாறு,
- பார்பேட்டா மாவட்டம்
- போங்கைகாவொன் மாவட்டம்
- கசார்
- தர்ரங் மாவட்டம்
- தேமாஜி மாவட்டம்
- துப்ரி மாவட்டம்
- திப்ருகார் மாவட்டம்
- கோல்பாரா மாவட்டம்
- கோலாகட் மாவட்டம்
- ஹைலாகண்டி மாவட்டம்
- ஜோர்ஹாட் மாவட்டம்
- கர்பி ஆங்கலாங்கு மாவட்டம்
- கரீம்கஞ்சு மாவட்டம்
- கோகராஜார் மாவட்டம்
- லக்கீம்பூர் மாவட்டம்
- மரிகாவன் மாவட்டம்
- |நகாமோ மாவட்டம்
- நல்பாரி மாவட்டம்
- திமா ஹசாவ் மாவட்டம்
- சிவசாகர் மாவட்டம்
- சோணித்பூர் மாவட்டம்
- தின்சுகியா மாவட்டம்
- காமரூப் மாவட்டம்
- கம்ருப் பெருநகர் மாவட்டம்
- பாக்சா மாவட்டம்
- உதல்குரி மாவட்டம்
- சிராங் மாவட்டம்
- கிழக்கு கர்பி அங்லோங் மாவட்டம்
- மேற்கு கர்பி அங்லோங் மாவட்டம்
- சராய்தியோ மாவட்டம்
- தெற்கு சல்மாரா மாவட்டம்
- ஹொஜாய் மாவட்டம்
- பிஸ்வநாத் மாவட்டம்
- பஜாலி மாவட்டம்
- மாஜுலி
மக்கள் தொகையியல்
[தொகு]2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி அசாம் மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை 31,205,576 ஆக உள்ளது. கிராமப்புறங்களில் 85.90% மக்களும்; நகர்புறங்களில் 4.10% மக்களும் வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 17.07% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் 15,939,443 ஆண்களும் மற்றும் 15,266,133 பெண்களும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு பெண்கள் 958 வீதம் உள்ளனர். 78,438 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாநிலத்தில் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 398 மக்கள் வாழ்கின்றனர். இம்மாநிலத்தின் சராசரி படிப்பறிவு 72.19 % ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 77.85 % ஆகவும், பெண்களின் படிப்பறிவு 66.27 % ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 4,638,130 ஆக உள்ளது.[15]
சமயம்
[தொகு]இம்மாநிலத்தில் இந்து சமயத்தவரின் மக்கள் தொகை 19,180,759 (61.47 %) ஆகவும் இசுலாமிய சமய மக்கள் தொகை 10,679,345 (34.22 %) ஆகவும், சீக்கிய சமயத்தவரின் மக்கள் தொகை 20,672 (0.07 %), சமண சமய மக்கள் தொகை 25,949 (0.08 %) ஆகவும், கிறித்தவ சமயத்தினரின் மக்கள் தொகை 1,165,867 (3.74 %) ஆகவும், , பௌத்த சமய மக்கள் தொகை 54,993 (0.18 %) ஆகவும், பிற சமயத்து மக்கள் தொகை 27,118 (0.09 %) ஆகவும் மற்றும் சமயம் குறிப்பிடாதவர்கள் மக்கள் தொகை 50,873 (0.16 %) ஆகவும் உள்ளது.
மொழிகள்
[தொகு]இம்மாநிலத்தின் ஆட்சி மொழியான அசாமிய மொழியுடன் போடோ மொழி, இந்தி, வங்காளம் மற்றும் வட்டார மொழிகள் பேசப்படுகிறது.
போக்குவரத்து
[தொகு]தொடருந்து
[தொகு]கௌஹாத்தி தொடருந்து நிலையம் நாட்டின் அனைத்து நகரங்களுடன் இருப்புப் பாதை மூலம் தொடருந்துகளால் இணைக்கப்பட்டுள்ளது.[16]
தேசிய நெடுஞ்சாலைகள்
[தொகு]1126 கிலோ மீட்டர் நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலை 31 வடகிழக்கு இந்தியாவின் நுழைவாயிலாக உள்ளது.
வானூர்தி நிலையம்
[தொகு]கௌஹாத்தி லோக்பிரியா கோபிநாத் பர்தலை சர்வதேச விமான நிலையம் நாட்டின் மற்றும் உலகின் பல நகரங்களுடன் இணைக்கிறது.
வரலாறு
[தொகு]முன் வரலாறு
[தொகு]கற்காலத்தில் அசாம் பகுதி ஒருகிணைந்த பகுதியாக இருந்து உள்ளது. இதணை அப்பொழுது வாழ்ந்த மக்களின் பரிமாற்ற பொருட்கள் விளக்குகிறது.ஆனால் இரும்பு மற்றும் வெண்கல காலத்தில் வணிகத்திற்கான காலச் சான்று எதுவும் இல்லை.[2]
புராண கதை
[தொகு]முன்பு அசாம் பகுதியை தானவர்கள் அரச மரபை சேர்ந்த மஹிரங்க தானவரால் ஆட்சி செய்யப்பட்டது. இவர் ஆட்சியை நரகாசூரனால் அழிக்கப்பட்டது. நரகாசூரன் கிருஷ்ணரால் கொல்லபட்டார். பிறகு நரகாசூரனின் மகன் பகதத்தன் அரசனானார்.
பண்டைய காலம்
[தொகு]சமுத்திரகுப்தரின் 4வது நூற்றாண்டு கல்வெட்டுகள் காமரூபம் (மேற்கு அசாம்) மற்றும் தேவாகம் (மத்திய அசாம்) பகுதினை குப்த பேரரசின் எல்லைகளாக குறிப்பிடுகின்றன.[3]
காமரூப பேரரசு
[தொகு]காமரூப பேரரசின் பிராக்ஜோதிஷ்புரம் மற்றும் திஸ்பூர் தலைநகரங்களாகக் கொன்டு பொ.ஊ. 350 முதல் 1140 முடிய ஆட்சி செய்தனர்.
அகோம் பேரரசு
[தொகு]அகோம் பேரரசினர் அசாம் பகுதியை பொ.ஊ. 1228 முதல் 1826 முடிய ஆண்டனர்.
இவற்றையும் பார்க்கவும்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Steinberg, S. (2016). The Statesman's Year-Book 1964-65: The One-Volume ENCYCLOPAEDIA of all nations (in ஆங்கிலம்). Springer. p. 412. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780230270930.
- ↑ "Assam Budget 2018-19". தெ நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ். பார்க்கப்பட்ட நாள் 30 செப்டம்பர் 2018.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)[தொடர்பிழந்த இணைப்பு] - ↑ "Assam Budget 2018-19" (PDF). Assam Finance Dept. Archived from the original (PDF) on 17 மார்ச் 2018. பார்க்கப்பட்ட நாள் 15 March 2018.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "STATE WISE DATA" (PDF). rbi.org.in. Reserve Bank of India, New Delhi. பார்க்கப்பட்ட நாள் 17 February 2017.
- ↑ India, Press Trust of (2014-09-09). "Govt withdraws Assamese as official language from Barak valley". Business Standard India. http://www.business-standard.com/article/pti-stories/govt-withdraws-assamese-as-official-language-from-barak-valley-114090901180_1.html.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-04-19. பார்க்கப்பட்ட நாள் 2019-01-27.
- ↑ "Sub-national HDI - Area Database - Global Data Lab". hdi.globaldatalab.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-09-13.
- ↑ 8.0 8.1 "Census 2011 (Final Data) - Demographic details, Literate Population (Total, Rural & Urban)" (PDF). planningcommission.gov.in. Planning Commission, Government of India. பார்க்கப்பட்ட நாள் 3 October 2018.
- ↑ http://www.assamassembly.gov.in/history.html
- ↑ Dixit 2002
- ↑ World Heritage Centre 2007
- ↑ Sarma, Satyendra Nath (1976) அசாமிய Literature, Harrassowitz, Wiesbaden, p2. “While the Shan invaders called themselves Tai, they came to be referred to as Āsām, Āsam and sometimes as Acam by the indigenous people of the country. The modern அசாமிய word Āhom by which the Tai people are known is derived from Āsām or Āsam. The epithet applied to the Shan conquerors was subsequently transferred to the country over which they ruled and thus the name Kāmarūpa was replaced by Āsām, which ultimately took the Sanskritized form Asama, meaning ‘unequalled, peerless or uneven’”
- ↑ Times News Network, February 28, 2006
- ↑ Editorial, The அசாம் மாநிலம் Tribune, January 6, 2007.
- ↑ Assam Population 2011
- ↑ http://erail.in/guwahati-railway-station
வெளி இணைப்புகள்
[தொகு]- அரசாங்கம்