உள்ளடக்கத்துக்குச் செல்

மெர்போக் மக்களவைத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மெர்போக் (P014)
மலேசிய மக்களவைத் தொகுதி
கெடா
Merbok (P014)
Federal Constituency in Kedah
கெடா மாநிலத்தில் மெர்போக் மக்களவைத் தொகுதி
மாவட்டம்கோலா மூடா மாவட்டம்; கெடா
வாக்காளர் தொகுதிமெர்போக் தொகுதி
முக்கிய நகரங்கள்சுங்கை பட்டாணி, சுங்கை லாலாங், பீடோங், குரூண், செமெலிங், மெர்போக், தஞ்சோங் டாவாய்
முன்னாள் தொகுதி
உருவாக்கப்பட்ட காலம்1984
கட்சி பெரிக்காத்தான் நேசனல்
மக்களவை உறுப்பினர்முகமது நசுரி அபு அசன்
(Mohd Nazri Abu Hassan)
வாக்காளர்கள் எண்ணிக்கை132,444[1][2]
தொகுதி பரப்பளவு451 ச.கி.மீ[3]
இறுதி தேர்தல்பொதுத் தேர்தல் 2022




2022-இல் மெர்போக் தொகுதியின் வாக்காளர்களின் இனப் பிரிவுகள்

  மலாயர் (69.9%)
  சீனர் (15.3%)
  இதர இனத்தவர் (0.5%)

மெர்போக் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Merbok; ஆங்கிலம்: Merbok Federal Constituency; சீனம்: 植联邦选区) என்பது மலேசியா, கெடா மாநிலத்தில், கோலா மூடா மாவட்டத்தில் (Kuala Muda District); அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P014) ஆகும்.[4]

மெர்போக் தொகுதி 1984-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. முதல் தேர்தல் 1986-ஆம் ஆண்டில் நடைபெற்றது. அதே 1986-ஆம் ஆண்டில் இருந்து மெர்போக் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தில் பிரதிநிதிக்கப் படுகிறது.

2022 அக்டோபர் 31-ஆம் தேதி வெளியிடப்பட்ட மலேசியக் கூட்டரசு அரசிதழின் படி (Federal Gazette issued on 31 October 2022), மெர்போக் தொகுதி 40 தேர்தல் வட்டாரங்களாக (Polling Districts) பிரிக்கப்பட்டது.[5]

பொது

[தொகு]

கோலா மூடா மாவட்டம்

[தொகு]

கோலா மூடா மாவட்டம் கெடா மாநிலத்தின் அதிக மக்கள் தொகை கொண்ட இரண்டாவது மாவட்டம் ஆகும். மலேசியாவில் புரதான நாகரீகங்கள் தோன்றிய இடமாகவும் இந்த இடம் கருதப் படுகிறது. மலேசியாவில் புகழ்பெற்ற ஜெராய் மலை இந்த மாவட்டத்தின் எல்லையில் உள்ளது. மூடா ஆறு இந்த மாவட்டத்தையும் பினாங்கு மாநிலத்தையும் பிரிக்கிறது.[6]

2004-ஆம் ஆண்டு நிகழ்ந்த சுனாமி பேரலைகளின் தாக்குதல்களினால் கோலா மூடா மாவட்டத்தின் கடற்கரைப் பகுதிகள் பெரிதும் பாதிக்கப் பட்டன.

வரலாறு

[தொகு]

சுங்கை மூடா (Sungai Muda) ஆறு, கெடா மாநிலத்தின் தென்பகுதியை இரு பிரிவுகளாகப் பிரிக்கின்றது. சுங்கை மூடா ஆற்றின் பெயரில் இருந்து தான் கோலா மூடா எனும் பெயர் வந்து இருக்கலாம் என்று புவியியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.[7] சுங்கை மூடா ஆறு மலாக்கா நீரிணையில் கலக்கும் இடத்தில் கம்போங் சுங்கை மூடா, கோத்தா கோலா மூடா எனும் மீன்பிடி கிராமங்கள் உள்ளன.

மூடா ஆறு, மெர்போக் ஆறு (Sungai Merbok), சுங்கை மாஸ் (Sungai Mas) போன்ற ஆறுகள் சங்கமிக்கும் இடத்தில் தான் மலாயாவின் பண்டைய கால நாகரிகங்கள் தோன்றி இருக்கலாம் எனும் கருத்து நிலவி வருகிறது.

மெர்போக் மக்களவைத் தொகுதி

[தொகு]
மெர்போக் நாடாளுமன்ற உறுப்பினர்கள் (1986 - 2023)
நாடாளுமன்றம் ஆண்டுகள் உறுப்பினர் கட்சி
கோலா மூடா தொகுதியில் இருந்து உருவாக்கப்பட்டது
7-ஆவது 1986–1990 டைம் சைனுடீன்
(Daim Zainuddin)
பாரிசான் (அம்னோ)
8-ஆவது 1990–1995
9-ஆவது 1995–1999
10-ஆவது 1999–2004
11-ஆவது 2004–2008 சைனுடீன் மைடீன்
(Zainuddin Maidin)
12-ஆவது 2008–2013 ரசீட் டின்
(Rashid Din)
பி.கே.ஆர்
13-ஆவது 2013–2018 இசுமாயில் டாவுட்
(Ismail Daut)
பாரிசான் (அம்னோ)
14-ஆவது 2018–2022 நோர் அசுரினா சுரிப்
(Nor Azrina Surip)
பாக்காத்தான் (பி.கே.ஆர்)
15-ஆவது 2022 – தற்போது வரையில் முகமது நசுரி அபு அசன்
(Mohd Nazri Abu Hassan)
பெரிக்காத்தான் (பாஸ்)

தேர்தல் முடிவுகள்

[தொகு]
மலேசியப் பொதுத் தேர்தல் 2022 (மெர்போக் தொகுதி)
பொது வாக்குகள் %
பதிவு பெற்ற வாக்காளர்கள்
(Registered Electors)
132,444 -
வாக்களித்தவர்கள்
(Turnout)
103,799 80.51%
செல்லுபடி வாக்குகள்
(Total Valid Votes)
102,544 100.00%
கிடைக்காத அஞ்சல் வாக்குகள்
(Unreturned Ballots)
208 -
செல்லாத வாக்குகள்
(Rejected Ballots)
1,027 -
பெரும்பான்மை
(Majority)
21,019 20.50%
வெற்றி பெற்ற கட்சி பெரிக்காத்தான் நேசனல்
Source: Results of Parliamentary Constituencies of Kedah

மெர்போக் வேட்பாளர் விவரங்கள்

[தொகு]
மலேசியப் பொதுத் தேர்தல் 2022
வேட்பாளர் கட்சி வாக்குப்பதிவு % ∆%
முகமது நசுரி அபு அசன்
(Mohd Nazri Abu Hassan)
பெரிக்காத்தான் 52,573 51.27% +51.27
நோர் அசுரினா சுரிப்
(Nor Azrina Surip)
பாக்காத்தான் 31,554 30.77% -12.54
சைபுல் அசிசி சைனோல் ஆபிதீன்
(Shaiful Hazizy Zainol Abidin)
பாரிசான் 16,691 16.28% -12.91
முகமது மொசின் அப்துல் ரசாக்
(Mohd Mosin Abdul Razak)
உள்நாட்டு போராளிகள் கட்சி 1,201 1.17% +1.17
கைருல் அனுவார் அகமட்
(Khairul Anuar Ahmad)
சபா பாரம்பரிய கட்சி 525 0.51% +0.51

சட்டமன்ற உறுப்பினர்கள் (2022)

[தொகு]
எண். தொகுதி உறுப்பினர் கூட்டணி (கட்சி)
N25 புக்கிட் செலம்பாவ்
(Bukit Selambau)
சண்முகம் ரெங்கசாமி
(Summugam Rengasamy)
பாக்காத்தான் (பி.கே.ஆர்)
N26 தஞ்சோங் டாவாய்
(Tanjong Dawai)
அனிப் கசாலி
(Hanif Ghazali)
பெரிக்காத்தான் (பாஸ்)

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Kedah National Seat Kedah - Malaysia's 15th General Election - China Press". live.chinapress.com.my. பார்க்கப்பட்ட நாள் 30 May 2023.
  2. "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). Election Commission of Malaysia. 2018-04-16. p. 2. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  3. Laporan Kajian Semula Persempadanan Mengenai Syor-Syor Yang Dicadangkan Bagi Bahagian-Bahagian Pilihan Raya Persekutuan Dan Negeri Di Dalam Negeri-Negeri Tanah Melayu Kali Keenam Tahun 2018 Jilid 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  4. Demarcation Review Report on Proposed Recommendations for Federal and State Electoral Divisions in the States of Malaya Sixth Year 2018 Volume 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  5. "Federal Government Gazette, Notice Under Subregulation 11(5A), Polling Hours for the Fifteenth General Election" (PDF). Attorney General's Chambers. 31 October 2022.
  6. Kota Kuala Muda terletak di pekan Kuala Muda berhampiran dengan Sungai Mas dan Kuala Sungai Muda.
  7. Kota Kuala Muda பரணிடப்பட்டது 2014-06-27 at the வந்தவழி இயந்திரம் Tourism Malaysia.

மேலும் காண்க

[தொகு]

வார்ப்புரு:கெடா மக்களவைத் தொகுதிகள்