சங்க காலப் புலவர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சங்கநூல் சொல்லடைவு

{{சங்க இலக்கியங்கள்} பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் நமக்குக் கிடைத்துள்ள சங்கநூல்கள். ஆகும். அவற்றில் தற்போது கிடைத்துள்ள சங்கப்பாடல்கள் 2381. அவற்றுள் 2279 பாடல்களுக்கு மட்டுமே அவற்றைப் பாடிய புலவர்களின் பெயர்கள் தெரியவருகின்றன. ஏனைய பாடல்களைப் பாடிய புலவர்களின் பெயர்கள் தெரியவில்லை.

பத்துப்பாட்டு நூல்கள் தொகுப்பில் உள்ள ஒவ்வொன்றும் தனித்தனி நூல். இந்தத் தொகுப்பு முழுமைக்கும் அவற்றுள் ஒன்றான திருமுருகாற்றுப்படை கடவுள் வாழ்த்தைப் போல முதல் நூலாக வைத்துப் பத்து என்று எண்ணப்பட்டுள்ளது. எட்டுத்தொகை நூல்களில் கடவுள் வாழ்த்துப் பாடல்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அவை நூல் தொகுக்கப்பட்ட காலத்தில் சேர்க்கப்பட்டவை. அவற்றையும் சேர்த்துதான் இந்த 2381. மொத்தம் உள்ள பாடல்களில் ஆசிரியர் பெயர் தெரிந்த 2279 பாடல்களைப் பாடிய புலவர்கள் 475 பேர்.

இந்தச் செய்திகள் சங்க இலக்கியம் பாட்டும் தொகையும் நூலின் [1] இறுதியில் சிறப்புப்பெயர் அகராதி என்னும் தலைப்பின் கீழ்த் தரப்பட்டுள்ள பெயர்ப்பட்டியலிலிருந்து தொகுக்கப்பட்டு உரிய பாடல்களை ஒப்புநோக்கி இந்தக் கட்டுரை உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் புலவர்களின் பெயர்கள் அகர வரிசையில் பின்வருமாறு தொகுத்துத் தரப்பட்டுள்ளன

மேலும் சங்கநூல் சொல்லடைவு [2] என்னும் நூலிலிருந்து ஒவ்வொரு சொல்லும் ஒப்புநோக்கப்பட்டுள்ளன.

தொகுப்பின் சீர்மை[தொகு]

இந்தத் தொகுப்பு சங்க காலப் புலவர்களை முதலில் அகரவரிசைப் படுத்திய சு. வையாபுரிப்பிள்ளை தொகுப்பினைப் பின்பற்றியது. இதனை வழிமொழிந்து சில மாற்றங்களைக் காட்டும் தொகுப்பு ஒன்று உள்ளது.[3]

எண்ணிக்கைச் சிக்கல்கள்[தொகு]

நற்றிணை ராஜம் பதிப்பு இத் தொகைநூல் பாடல்களைப் பாடிய புலவர்களின் எண்ணிக்கை 192 என்று காட்டுகிறது. வையாபுரிப் பிள்ளை 175 என்று குறிப்பிடுகிறார்.[4] பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் பதிப்பும் 175 எனக் காட்டுகிறது. இந்த வேறுபாடுகளுக்குக் காரணம் ஒருசில புலவர்களின் பெயர்களுக்கு உள்ள அடைமொழிகள் வேறுப்பட்டிருப்பதே.

மாங்குடி மருதன், மாங்குடி கிழார் என்று குறிப்பிடப்பட்டுள்ள புலவர்கள் வெவ்வேறு புலவர்கள் என்றும், ஈழத்துப் பூதன் தேவன், மதுரை ஈழத்துப் பூதன் தேவன் என்று குறிப்பிடப்பட்டுள்ள புலவர்கள் வெவ்வேறு புலவர்கள் என்றும் ராஜம் முதல் பதிப்பு கொண்டதே ஆகும்.

மேலும் புலவர் பெயர்களில் காணப்படும் பாட வேறுபாடுகளும் காரணமாகும். குறுந்தொகை 79 ஆம் பாடலைப் பாடிய புலவர் பெயர் குடவாயில் கீரனத்தன் என்றும், குடவாயில் கீரத்தனார் என்றும் உள்ளன. குறுந்தொகை 131 ஆம் பாடலைப் பாடிய புலவர் பெயர் ஓரேர் உழவன் என்பதற்குப் பதிலாக நக்கீரன் என்றும், குறுந்தொகை 315 ஆம் பாடலைப் பாடிய புலவர் பெயர் மதுரை வேளாத்தத்தன் என்பதற்குப் பதிலாக தும்பிசேர் கீரனார் என்றும் பதிப்புகள் புலவர் பெயர்களை மாறுபாடுகளுடன் காட்டுகின்றன.

“மாங்குடி மருதன் தலைவன் ஆக … புலவர் பாடா வரைக என் நிலவரை” எனப் பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் பாட்டு குறிப்பிடுவதிலிருந்து அவனைப் பாடிய மாங்குடி மருதன், மாங்குடி கிழார் ஆகிய இருவரும் ஒருவரே எனத் தெளிவாகிறது.

இவ்வாறு விளக்கி ராஜம் பதிப்பு வையாபுரிப் பிள்ளை பதிப்பை வழிமொழிவதால் அப்பதிப்பு காட்டிய அகரவரிசை இங்குப் பின்பற்றப்பட்டுள்ளது.

அகம், புறம், நற்றிணை, குறுந்தொகை ஆகிய நானூற்றுத் தொகுப்பு-நூல்கள் காட்டும் புலவர் பெயர்களில் உள்ள இந்தச் சிக்கல்களே அன்றிக் கலித்தொகைப் பாடல்களைப் பாடிய புலவர் பெயர்களிலும் சிக்கல்கள் உள்ளன. இதில் உள்ள பாடல்கள் ஒரே புலவரால் பாடப்பட்டவை என்னும் கருத்துடன் ராஜம் பதிப்பு அவர்களின் பெயர்களைக் குறிப்பிடாமல் ஒதுக்கியுள்ளமை கருதத் தக்கது.

அகர வரிசைப்படி சங்கப் புலவர்கள்[தொகு]

[தொகு]

[தொகு]

[தொகு]

 1. இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார் \ சிறுபாண் ஆற்றுப்படை
 2. இடைக்காடனார் \ பாடல் 10
 3. இடைக்குன்றூர் கிழார் \ பாடல் 4
 4. இடையன் சேந்தன் கொற்றனார் \ பாடல் 1
 5. இடையன் நெடுங்கீரனார் \ பாடல் 1
 6. இம்மென் கீரனார் \ பாடல் 1
 7. இரணியமுட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார் \ மலைபடுகடாம் (கூத்தர் ஆற்றுப்படை)
 8. இருங்கோன் ஒல்லையாயன் செங்கண்ணனார் \ பாடல் 1
 9. இருந்தையூர்க் கொற்றன் புலவன் \ பாடல் 1
 10. இரும்பிடர்த் தலையார் \ பாடல் 1
 11. இளங் கீரந்தையார் \ பாடல் 1
 12. இளங் கீரனார் \ பாடல் 16
 13. இள நாகனார் \ பாடல் 3
 14. இளந் திரையன் \ பாடல் 4
 15. இளந் தேவனார் \ பாடல் 4
 16. இளம்புல்லூர்க் காவிதி \ பாடல் 1
 17. இளம்பூதனார் \ பாடல் 1
 18. இளம்பெருவழுதி \ பாடல் 2
 19. இளம்போதியார் \ பாடல் 1
 20. இளவெயினனார் \ பாடல் 1
 21. இறங்குகுடிக் குன்றநாடன் \ பாடல் 1
 22. இறையனார் \ பாடல் 1
 23. இனிசந்த நாகனார் \ பாடல் 1

[தொகு]

 1. ஈழத்துப் பூதன்தேவனார் \ பாடல் 7

[தொகு]

[தொகு]

[தொகு]

[தொகு]

 1. ஐயாதிச் சிறு வெண்டேரையார் \ பாடல் 1
 2. ஐயூர் முடவனார் \ பாடல் 10
 3. ஐயூர் மூலங்கிழார் \ பாடல் 1

[தொகு]

[தொகு]

[தொகு]

 1. ஔவையார் \ பாடல் 59

[தொகு]

 1. கங்குல் வெள்ளத்தார் - பாடல் 1
 2. கச்சிப்பேட்டு இளந்தச்சனார் - பாடல் 1
 3. கச்சிப்பேட்டுக் காஞ்சிக் கொற்றனார் - பாடல் 2
 4. கச்சிப்பேட்டுப் பெருந்தச்சனார் - பாடல் 2
 5. கடம்பனூர்ச் சாண்டிலியன் - பாடல் 1
 6. கடலூர்ப் பல்கண்ணனார் - பாடல் 1
 7. கடியலூர் உருத்திரங்கண்ணனார் - பாடல் 4
 8. கடுந்தொடைக் காவினார் - பாடல் 1
 9. கடுந்தோட் கரவீரன் - பாடல் 1
 10. கடுவன் இளமள்ளனார் - பாடல் 1
 11. கடுவன் இளவெயினனார் - பாடல் 3
 12. கடுவன் மள்ளனார் - பாடல் 4
 13. கணக்காயன் தத்தனார் - பாடல் 1
 14. கணியன் பூங்குன்றனார் - பாடல் 2
 15. கண்ணகனார் - பாடல் 2
 16. கண்ணகாரன் கொற்றனார் - பாடல் 1
 17. கண்ணங் கொற்றனார் - பாடல் 1
 18. கண்ணம் புல்லனார் - பாடல் 2
 19. கண்ணனார் - பாடல் 2
 20. கதக் கண்ணனார் - பாடல் 2
 21. கதப் பிள்ளையார் - பாடல் 5
 22. கந்தரத்தனார் - பாடல் 8
 23. கபிலர் - பாடல் 235
 24. கயத்தூர் கிழார் - பாடல் 1
 25. கயமனார் - பாடல் 23
 26. கருங்குழல் ஆதனார் - பாடல் 2
 27. கரும்பிள்ளைப் பூதனார் - பாடல் 1
 28. கருவூர் கிழார் - பாடல் 1
 29. கருவூர்க் கண்ணம்பாளனார் - பாடல் 3
 30. கருவூர்க் கந்தப்பிள்ளைச் சாத்தனார் - பாடல் 3
 31. கருவூர்க் கலிங்கத்தார் - பாடல் 1
 32. கருவூர்க் கோசனார் - பாடல் 1
 33. கருவூர்ச் சேரமான் சாத்தன் - பாடல் 1
 34. கருவூர் நன்மார்பனார் - பாடல் 1
 35. கருவூர்ப் பவுத்திரனார் - பாடல் 1
 36. கருவூர்ப் பூதஞ்சாத்தனார் - பாடல் 1
 37. கருவூர்ப் பெருஞ்சதுக்கத்துப் பூத நாதனார் - பாடல் 1
 38. கல்பொரு சிறுநுரையார் - பாடல் 1
 39. கல்லாடனார் - பாடல் 14
 40. கவைமகன் - பாடல் 1
 41. கழாத்தலையார் - பாடல் 6
 42. கழார்க் கீரன் எயிற்றியனார் - பாடல் 1
 43. கழார்க் கீரன் எயிற்றியார் - பாடல் 8
 44. கழைதின் யானையார் - பாடல் 1
 45. கள்ளிக்குடிப் பூதம் புல்லனார் - பாடல் 1
 46. கள்ளில் ஆத்திரையனார் - பாடல் 3

கா[தொகு]

 1. காக்கை பாடினிடியார் நச்செள்ளையார் - பாடல் 12
 2. காசிபன் கீரன் - பாடல் 1
 3. காட்டூர் கிழார் மகனார் கண்ணனார் - பாடல் 1
 4. காப்பியஞ் சேந்தனார் - பாடல் 1
 5. காப்பியாற்றுக் காப்பியனார் - பாடல் 10
 6. காமஞ்சேர் குளத்தார் - பாடல் 1
 7. காரி கிழார் - பாடல் 1
 8. காலெறி கடிகையார் - பாடல் 1
 9. காவட்டனார் - பாடல் 2
 10. காவற்பெண்டு - பாடல் 1
 11. காவல் முல்லைப் பூதனார் - பாடல் 8
 12. காவிரிப் பூம்பட்டினத்துக் கந்தரத்தனார் - பாடல் 1
 13. காவிரிப் பூம்பட்டினத்துக் காரிக் கண்ணனார் - பாடல் 10
 14. காவிரிப் பூம்பட்டினத்துச் செங்கண்ணனார் - பாடல் 3
 15. காவிரிப் பூம்பட்டினத்துச் சேந்தன் கண்ணனார் - பாடல் 1
 16. காவிரிப் பூம்பட்டினத்துப் பொன்வாணிகனார் மகனார் நப்பூதனார் - பாடல் 1

கி[தொகு]

கீ[தொகு]

 1. கீரங்கீரனார் - பாடல் 1
 2. கீரந்தையார் - பாடல் 1

கு[தொகு]

கூ[தொகு]

கே[தொகு]

 1. கேசவனார் - பாடல் 1

கொ[தொகு]

கோ[தொகு]

[தொகு]

சா[தொகு]

 1. சாகலாசனார் - பாடல் 2
 2. சாத்தந்தையார் - பாடல் 5
 3. சாத்தனார் - பாடல் 1

சி[தொகு]

சீ[தொகு]

 1. சீத்தலைச் சாத்தனார் - பாடல் 10

செ[தொகு]

சே[தொகு]

சோ[தொகு]

[தொகு]

 1. தங்கால் ஆத்திரேயன் செங்கண்ணனார் - பாடல் 1
 2. தங்கால் பொற்கொல்லன் வெண்ணாகனார் - பாடல் 6
 3. தனிமகனார் - பாடல் 1

தா[தொகு]

தி[தொகு]

 1. திப்புத்தோளார் - பாடல் 1
 2. திருத்தாமனார் - பாடல் 1

தீ[தொகு]

 1. தீன்மதி நாகனார் - பாடல் 1

து[தொகு]

 1. தும்பிசேர் கீரனார் - பாடல் 7
 2. துறைக்குறு மாவிற் பாலங்கொற்றனார் - பாடல் 1
 3. துறையூர் ஓடைகிழார் - பாடல் 1

தூ[தொகு]

 1. தூங்கலோரியார் - பாடல் 3

தே[தொகு]

தொ[தொகு]

 1. தொடித்தலை விழுத்தண்டினார் - பாடல் 1
 2. தொண்டி ஆமூர்ச் சாத்தனார் - பாடல் 1
 3. தொல்கபிலர் - பாடல் 6

[தொகு]

 1. நக்கண்ணையார் - பாடல் 6
 2. நக்கீரர் - பாடல் 37
 3. நப்பசலையார் - பாடல் 1
 4. நப்பண்ணனார் - பாடல் 1
 5. நப்பாலத்தனார் - பாடல் 2
 6. நம்பி குட்டுவன் - பாடல் 5
 7. நரிவெரூஉத் தலையார் - பாடல் 4
 8. நரைமுடி நெட்டையார் - பாடல் 1
 9. நல்லச்சுதனார் - பாடல் 1
 10. நல்லந்துவனார் - பாடல் 40
 11. நல்லழிசியார் - பாடல் 2
 12. நல்லாவூர் கிழார் - பாடல் 2
 13. நல்லிறையனார் - பாடல் 1
 14. நல்லுருத்திரனார் - 17
 15. நல்லூர்ச் சிறுமேதாவியார் - பாடல் 1
 16. நல்லெழுநியார் - பாடல் 1
 17. நல்வழுதியார் - பாடல் 1
 18. நல்விளக்கனார் - பாடல் 1
 19. நல்வெள்ளியார் - பாடல் 4
 20. நல்வேட்டனார் - பாடல் 5
 21. நற்சேந்தனார் - பாடல் 1
 22. நற்றங் கொற்றனார் - பாடல் 1
 23. நற்றமனார் - பாடல் 1
 24. நன்பலூர்ச் சிறுமேதாவியார் - பாடல் 2
 25. நன்னாகனார் - பாடல் 5
 26. நன்னாகையார் - பாடல் 8

நா[தொகு]

 1. நாகம்போத்தன் - பாடல் 1
 2. நாமலார் மகன் இளங்கண்ணன் - பாடல் 1

நி[தொகு]

 1. நிகண்டன் கலைக்கோட்டுத் தண்டனார் - பாடல் 1

நெ[தொகு]

நொ[தொகு]

 1. நொச்சி நியமங்கிழார் - பாடல் 5

நோ[தொகு]

 1. நோய்பாடியார் - பாடல் 1

[தொகு]

பா[தொகு]

பி[தொகு]

பு[தொகு]

 1. புதுக்கயத்து வண்ணக்கன் கம்பூர்கிழான் - பாடல் 1
 2. புல்லாற்றூர் எயிற்றியனார் - பாடல் 1
 3. புறத்திணை நன்னாகனார்

பூ[தொகு]

பெ[தொகு]

பே[தொகு]

பொ[தொகு]

போ[தொகு]

 1. போதனார் - பாடல் 1
 2. போந்தைப் பசலையார் - பாடல் 1

[தொகு]

 1. மடல் பாடிய மாதங்கீரனார் - பாடல் 2
 2. மதுரை அளக்கர் ஞாழலார் மகனார் மள்ளனார் - பாடல் 13
 3. மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார் - பாடல் 12
 4. மதுரை ஆசிரியர் கோடங்கொற்றனார் - பாடல் 1
 5. மதுரை இளங்கண்ணிக் கௌசிகனார் - பாடல் 1
 6. மதுரை இளங்கௌசிகனார் - பாடல் 1
 7. மதுரை இளம்பாலாசிரியன் சேந்தன் கூத்தனார் - பாடல் 3
 8. மதுரை ஓலைக்கடைக் கண்ணம் புகுந்தாராயத்தனார் - பாடல் 1
 9. மதுரை ஓலைக்கடையத்தார் நல்வெள்ளையார் - பாடல் 2
 10. மதுரைக் கடையத்தார் மகன் வெண்ணாகனார் - பாடல் 1
 11. மதுரைக் கணக்காயனார் - பாடல் 5
 12. மதுரைக் கண்டராதித்தனார் - பாடல் 1
 13. மதுரைக் கண்ணத்தனார் - பாடல் 2
 14. மதுரைக் கவுணியன் பூதத்தனார் - பாடல் 1
 15. மதுரைக் கள்ளிற் கடையத்தன் வெண்ணாகனார் - பாடல் 2
 16. மதுரைக் காமக்கணி நப்பாலத்தனார் - பாடல் 1
 17. மதுரைக் காருலவியங் கூத்தனார் - பாடல் 1
 18. மதுரைக் கூத்தனார் - பாடல் 1
 19. மதுரைக் கொல்லன் புல்லன் - பாடல் 1
 20. மதுரைக் கொல்லன் வெண்ணாகனார் - பாடல் 2
 21. மதுரைச் சுள்ளம் போதனார் - பாடல் 1
 22. மதுரைத் தத்தங்கண்ணனார் - பாடல் 1
 23. மதுரைத் தமிழக்கூத்தனார் நாகன் தேவனார் - பாடல் 1
 24. மதுரைத் தமிழக் கூத்தனார் - பாடல் 1
 25. மதுரைப் படைமங்க மன்னியார் - பாடல் 1
 26. மதுரைப் பாலாசிரியர் சேந்தன் கொற்றனார் - பாடல் 1
 27. மதுரைப் பாலாசிரியர் நப்பாலனார் - பாடல் 1
 28. மதுரைப் பாலாசிரியர் நற்றாமனார் - பாடல் 1
 29. மதுரைப் புல்லங்கண்ணனார் - பாடல் 1
 30. மதுரைப் பூதன் இளநாகனார் - பாடல் 1
 31. மதுரைப் பூவண்ட நாகன் வேட்டனார் - பாடல் 1
 32. மதுரைப் பெருங்கொல்லன் - பாடல் 1
 33. மதுரைப் பெருமருதனார் - பாடல் 1
 34. மதுரைப் பெருமருது இளநாகனார் - பாடல் 1
 35. மதுரைப் போத்தனார் - பாடல் 1
 36. மதுரை மருதங்கிழார் மகனார் சொகுத்தனார் - பாடல் 2
 37. மதுரை மருதங்கிழார் மகனார் பெருங்கண்ணனார் - பாடல் 3
 38. மதுரை மருதங்கிழார் மகன் இளம்போத்தன் - பாடல் 1
 39. மதுரை வேளாசன் - பாடல் 1
 40. மருங்கூர் கிழார் பெருங்கண்ணனார் - பாடல் 1
 41. மருங்கூர்ப் பட்டினத்துச் சேந்தன் குமரனார் - பாடல் 1
 42. மருங்கூர்ப் பாகை சாத்தன் பூதனார் - பாடல் 1
 43. மருதம் பாடிய இளங்கடுங்கோ - பாடல் 3
 44. மருதன் இளநாகனார் - பாடல் 79
 45. மலையனார் - பாடல் 1
 46. மள்ளனார் - பாடல் 2

மா[தொகு]

மி[தொகு]

 1. மிளைக் கந்தன் - பாடல் 1
 2. மிளைப் பெருங்கந்தன் - பாடல் 3
 3. மிளைவேள் தித்தன் - பாடல் 1

மீ[தொகு]

 1. மீனெறி தூண்டிலார் - பாடல் 1

மு[தொகு]

மூ[தொகு]

 1. மூலங்கீரனார் - பாடல் 1

மை[தொகு]

 1. மையோடக் கோவனார் - பாடல் 1

மோ[தொகு]

[தொகு]

வா[தொகு]

வி[தொகு]

வீ[தொகு]

 1. வீரை வெளியனார் - பாடல் 1
 2. வீரை வெளியன் தித்தனார் - பாடல் 1

வெ[தொகு]

வே[தொகு]

 1. வேட்டகண்ணன் - பாடல் 1
 2. வேம்பற்றூர்க் கண்ணன்கூத்தன் - பாடல் 1
 3. வேம்பற்றூர்க் குமரனார் - பாடல் 2

சங்கம் மருவிய காலப் புலவர்கள்[தொகு]

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களைப் பாடிய புலவர்களைச் சங்கம் மருவிய காலப் புலவர்கள் என்று குறிப்பிடுகிறோம். கபிலர் என்னும் புலவர் சங்க காலப் புலவர் பட்டியலிலும், சங்கம் மருவிய காலப் புலவர் பட்டியலிலும் உள்ளார். இவர்கள் வெவ்வேறு புலவர்கள் என்பதைத் தெளிவுபடுத்திக்கொள்வதற்காகவே இந்தப் பட்டியல் இங்குத் தரப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

 1. சங்க இலக்கியம் (பாட்டும் தொகையும்), பாரி நிலையம், வையாபுரிப்பிள்ளை அறிஞர் கழகம் ஆராய்ந்து வழங்கியது, (முதல் பதிப்பு 1940) இரண்டாம் பதிப்பு 1967, சென்னை - 1
 2. Index des mots de la literature tamoule ancienne, PUBLICATIONS DE L’INSTITUT FRANCAIS D’INDOLOGIE N0.37. PONDICHERY: INSTITUT FRAFRANCAIS D’INDOLOGIE. 1967. 
 3. பாட்டும் தொகையும், பதிப்பு – ஆசிரியக் குழுவினரால் வெளியிடப்பட்டது, எஸ். ராஜம், 5, தம்புச் செட்டித் தெரு, சென்னை-1, முதல் பதிப்பு 1958, பக்கம் 9-21.
 4. Tamil language and literature, page 24
"https://ta.wikipedia.org/w/index.php?title=சங்க_காலப்_புலவர்கள்&oldid=2755078" இருந்து மீள்விக்கப்பட்டது