நல்லிறையனார்
Appearance
நல்லிறையனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். அவரது பாடல் சங்கநூல் தொகுப்பில் ஒன்றே ஒன்று இடம் பெற்றுள்ளது. அது புறநானூறு 393 எண்ணுள்ள பாடலாக அமைந்துள்ளது. சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவனிடம் பரிசில் வேண்டி இதனைப் பாடியுள்ளார்.
- இந்தப் பாடலில் அடிகள் சிதைந்துள்ளன.
பாடல் சொல்லும் செய்தி
[தொகு]புலவருக்கு ஊரில் தலைகாட்ட முடியாதபடி வறுமை. வீட்டுக் கூரை விழுந்துவிட்டது. வீட்டுப் பானைக்குச் சமைக்கும் ஆசையே இல்லாமல் போயிற்று. சோற்று ஈரம் அவரது சுற்றத்தின் கைகளுக்கு மறந்துவிட்டது. வளவ! வறுமையைப் போக்கு என உன்னிடம் வந்திருக்கிறேன். கொழுத்த கறிச்சோறு பருத்தி போல் வெளுத்த சோற்றோடு வேண்டும். பகன்றை மலர் போல வெண்ணிற ஆடை வேண்டும். - என்கிறார் புலவர்.
பழந்தமிழ்
[தொகு]- கலிங்கம் = நூலாடை
- கூமை = வீட்டுக் கூரை
- பழங்கண் = கவலைத் துன்பம்