தேவனார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தேவனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரது பாடல் ஒன்றே ஒன்று மட்டும் உள்ளது. அது நற்றிணை 227 எண்ணுள்ள பாடலாக அமைந்துள்ளது.

நற்றிணை 227 பாடல் சொல்லும் செய்தி[தொகு]

  • நெய்தல் திணை

தலைவன் புன்னையங்கானல் கடலோரப் பகுதியில் பல நாள் தேரில் வந்து தலைவியோடு இருந்துவிட்டுச் செல்கிறான். இதனை நிறுத்திவிட்டுத் தலைவியைத் திருமணம் செய்துகொண்டு அடைய வேண்டும் என்று தோழி தலைவனிடம் எடுத்துரைக்கிறாள்.

தலைவன் வந்து போவது அலராகிறது என்கிறாள்.

எப்படி அலராகிறது? சோழர் ஆர்க்காட்டில் கள் உண்டபோது புள் ஒலித்தது போல் அலராகிறதாம்.

சோழர் - ஆர்க்காடு[தொகு]

பசும்பூண் சோழர் யானைப்படையை மிகுதியாகக் கொண்டவர். அவர்கள் தம் போர் வெற்றி ஒன்றுக்குப் பின் ஆர்க்காடு என்னும் ஊரில் தேரோடும் தெருவில் கூடிக் வெற்றிக் கொடிகளைக் கட்டிப் பறக்க விட்டுக்கொண்டு பலரும் கூடி கள் உண்டு களித்தனர். அப்போது பறவைகள் அங்கு ஒன்று திரண்டு ஆரவாரம் செய்தன. அந்தப் புள் ஆரவாரம் போல அலர் ஊரெல்லாம் தூற்றப்பட்டதாம்.

ஆர்க்காடு இருப்பிடம்[தொகு]

இது காவிக் கரையில் உள்ளதோர் ஊர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தேவனார்&oldid=856254" இலிருந்து மீள்விக்கப்பட்டது