சேரமான் இளங்குட்டுவன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சேர நாணயங்களில காணப்படும் சேரமன்னர் முத்திரை, வாங்குவில் எனக் குறிப்பிடப்படும் எய்யும் வில்

சேரமான் இளங்குட்டுவன் சங்ககாலப் புலவர். இவரது பாடல் ஒன்றே ஒன்று உள்ளது. அது அகநானூறு 153. பாலைத்திணை.

பாடல் சொல்லும் செய்தி[தொகு]

மகளை அவளது காதலனுடன் வழியனுப்பி வைத்துவிட்டுச் செவிலி இவ்வாறு எண்ணிக் கவலை கொள்கிறாள்.

அவள் பந்தாட்டத்தில் பந்தின் பின் செல்வதற்கே அடி நோகிறது என்று அன்று சொன்னாள். அவளது அந்த நல்லடிகள், மூங்கில் தீ வெடித்துச் சிதறும் வழியில் சுட்டெரிக்கும் வெயிலில் அவனுடன் செல்லும் வலிமை உள்ளனவோ?