உள்ளடக்கத்துக்குச் செல்

கைந்நிலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தமிழ் இலக்கியம்
சங்க இலக்கிய நூல்கள்
அகத்தியம் தொல்காப்பியம்
பதினெண்மேற்கணக்கு
எட்டுத்தொகை
நற்றிணை குறுந்தொகை
ஐங்குறுநூறு பதிற்றுப்பத்து
பரிபாடல் கலித்தொகை
அகநானூறு புறநானூறு
பத்துப்பாட்டு
திருமுருகாற்றுப்படை பொருநராற்றுப்படை
சிறுபாணாற்றுப்படை பெரும்பாணாற்றுப்படை
முல்லைப்பாட்டு மதுரைக்காஞ்சி
நெடுநல்வாடை குறிஞ்சிப்பாட்டு
பட்டினப்பாலை மலைபடுகடாம்
பதினெண்கீழ்க்கணக்கு
நாலடியார் நான்மணிக்கடிகை
இன்னா நாற்பது இனியவை நாற்பது
களவழி நாற்பது கார் நாற்பது
ஐந்திணை ஐம்பது திணைமொழி ஐம்பது
ஐந்திணை எழுபது திணைமாலை நூற்றைம்பது
திருக்குறள் திரிகடுகம்
ஆசாரக்கோவை பழமொழி நானூறு
சிறுபஞ்சமூலம் முதுமொழிக்காஞ்சி
ஏலாதி கைந்நிலை
சங்கநூல் தரும் செய்திகள்
தமிழ்ச் சங்கம் சங்கம் மருவிய காலம்
சங்க காலப் புலவர்கள் சங்ககால நிலத்திணைகள்
சங்க கால ஊர்கள் சங்க கால மன்னர்கள்
சங்க கால நாட்டுமக்கள் சங்க காலக் கூட்டாளிகள்
சங்ககால விளையாட்டுகள் சங்ககால மலர்கள்

கைந்நிலை பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் எனப்படும் சங்கம் மருவிய காலத் தமிழ் நூல் தொகுதியில் அடங்கிய ஒரு நூல். இத் தொகுப்பில் காணப்படும் ஆறு அகப்பொருள் நூல்களுள் இதுவும் ஒன்று. இஃது அறுபது பாடல்களால் ஆனது. ஐந்து தமிழர் நிலத்திணைப் பிரிவுகளைப் பின்னணியாகக் கொண்டு பாடல்கள் வெண்பா பாவகையில் உள்ளன. இதன் காரணமாக இதற்கு ஐந்திணை அறுபது என்ற பெயரும் உண்டு. இதை இயற்றியவர் புல்லங்காடனார் என்னும் ஒரு புலவர். சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் உரை இந்நூலுக்கு உள்ளது. கை என்றால் ஒழுக்கம். நிலை என்றால் தன்மை.[1] ஆகவே,ஐந்திணையின் ஒழுக்க நிலையைக் கூறும் நூல் என்னும் பொருளில் இந்நூலின் பெயர் கைந்நிலை என அமைந்துள்ளது.இந்நூலில் ஆசை,பாசம்,கேசம், இரசம்,இடபம்,உத்தரம் போன்ற வடசொற்கள் கலந்து காணப்படுகின்றன.[2] [3]

கைந்நிலை நூலில் 60 பாடல்கள் உள்ளன. [4]
குறிஞ்சி 12
பாலை 7
முல்லை 3
மருதம் 11
நெய்தல் 12
ஆகிய 45 பாடல்கள் முழுமையான வடிவில் உள்ளன. பிற செல் அரித்த நிலையில் சிதைந்துள்ளன. [5] [6]

மேற்கோள்

[தொகு]
  1. மது.ச. விமலானந்தம் (2020). தமிழ் இலக்கிய வரலாறு. தி-நகர், சென்னை.: முல்லை நிலையம். p. பக்க எண். 76. {{cite book}}: Unknown parameter |மொழி-= ignored (help)
  2. சான்று:முனைவர் பாக்யமேரி, வகைமை நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு,NCBH வெளியீடு,சென்னை-98,முதல்பதிப்பு-ஜூலை-2008.
  3. பதினெண்கீழ்க் கணக்கு, இன்னிலை, கைந்நிலை, தி சங்குப் புலவர் விக்க உரையுடன், சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் வெளியீடு, 1964 பதிப்பு, கைந்நிலை நூல் பதிவு பக்கம் 76 முதல் 145
  4. அனந்தராமையர் பதிப்பு, 1931
  5. பதினெண்கீழ்க் கணக்கு, இன்னிலை, கைந்நிலை, தி சங்குப் புலவர் விக்க உரையுடன், சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் வெளியீடு, 1964 பதிப்பு, கைந்நிலை நூல், முன்னுரை
  6. கைந்நிலை மூலமும் உரையும்

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கைந்நிலை&oldid=3823353" இலிருந்து மீள்விக்கப்பட்டது