இன்னா நாற்பது
இன்னா நாற்பது என்னும் நூல் கபிலர் என்னும் புலவரால் இயற்றப்பட்டது. நாற்பத்தொரு பாடல்களைக் கொண்ட இது பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என அழைக்கப்படும் சங்கம் மருவிய காலத் தமிழ் நூற்றொகுதியுள் அடங்குவது. உலகத்தில் கூடாதவை என்னென்ன என்பது பற்றிக் கூறி நீதி உரைப்பது இந்நூல். இது கி. பி. நான்காம் நூற்றாண்டைச் சார்ந்த நூலாகும். இந்நூல் இன்னிசை வெண்பாக்களால் ஆனது. இதில் நூற்று அறுபத்து நான்கு கூடாச் செயல்கள் கூறப்பட்டுள்ளன.
எடுத்துக்காட்டு
[தொகு]அறிவிற் சிறந்தவர்கள் வீற்றிருக்கின்ற சபையிலே அறிவில்லாத ஒருவன் புகுவது துன்பத்தைத் தரும். இருட்டிய பின்னர் வழியிற் செல்வது பெரிதும் துன்பம் விளைவிக்கும். விளையக் கூடிய துன்பங்களைத் தாங்கக் கூடிய ஆற்றல் இல்லாதவர்களுக்குத் தவம் துன்பம் தரும். தன்னைப் பெற்ற அன்னையைப் பேணிக் காப்பாற்றாமல் விடுவதும் துன்பமாகும் என்று மனித வாழ்வில் துன்பத்துக்குரிய நான்கு விடயங்களைக் கூறி நீதி புகட்டும் கீழ்க்காணும் பாடல் இந் நூலில் வருகிறது.
- ஆன்றவித்த சான்றோருட் பேதை புகலின்னா
- மான்றிருண்ட போழ்தின் வழங்கல் பெரிதின்னா
- நோன்றவிந்து வாழாதார் நோன்பின்னா வாங்கின்னா
- ஈன்றாளை யோம்பா விடல்.
கள்ளி வயிற்றில் அகில் பிறக்கும்
இவற்றையும் பார்க்கவும்
[தொகு]வெளியிணைப்புகள்
[தொகு]இன்னா நாற்பதை உள்ளடக்கிய நான்கு நூல்களின் தொகுதி பரணிடப்பட்டது 2006-02-19 at the வந்தவழி இயந்திரம்