ஆலியார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆலியார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரது பாடல் ஒன்றே ஒன்று சங்கப் பாடல்களில் இடம் பெற்றுள்ளது. அது புறநானூறு: 298 (கரந்தை, நெடுமொழி)

ஆலி

புலவர் பெயர்[தொகு]

மழை பெய்யும்போது மழைத்துளி கட்டி கட்டியாக விழுவதை 'ஆலி' என்பர். இப்புலவர் பெயர் இதன் அடிப்படையில் தோன்றியது எனலாம்.

பாடல்[தொகு]

எமக்கே கலக்கம் தருமே தானே
தேறல் உண்ண மன்னே நன்றும்
இன்னான் மன்ற வேந்தே இனியே
தேரார் ஆர்எயில் முற்றி
வாய் மடித்து உரறி 'நீ முந்து' என்றானே

காட்சி[தொகு]

போர்க்களத்தில் ஓர் காட்சி இந்தப் பாடலில் காட்டப்பட்டுள்ளது.

செய்தி[தொகு]

போர்மறவன் போருக்குச் செல்லும் மகிழ்வோடு தேறல்கள்ளைப் பருகிக்கொண்டிருக்கிறான். அவனிடம் அரசன் தன் வாயை மடித்து உரறுகிறான்(=உருமுகிறான்) 'நீ முந்து' இதுதான் அரசனின் உருமல். இந்தக் காட்சியைக் கண்ட புலவர் 'அரசன் இன்னான்(=கொடியவன்)' என்று கூறிவிட்டுத், தனக்கே கலக்கம் தருவதாகக் குறிப்பிடுகிறார்.

எது நெடுமொழி[தொகு]

இந்தப் பாடலில் அரசன் உரறியது நெடுமொழி அன்று. 'முந்துவேன்' என்று போர்மறவன் முன்பே நெடுமொழி கூறியிருக்கவேண்டும். அதுதான் நெடுமொழி. அதனை அறியாத அறியாது அரசன் உரறியதால்தான் புலவருக்குக் கலக்கம் வருகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆலியார்&oldid=3204300" இலிருந்து மீள்விக்கப்பட்டது