மாங்குடிமருதனார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மாங்குடி மருதனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். பாட்டும் தொகையும் ஆகிய சங்கநூல்களில் இவரது பாடல்கள் 13 உள்ளன. பத்துப்பாட்டில் மதுரைக்காஞ்சி என்னும் நூல் இவரால் பாடப்பட்டது.

இவரது பாடல்கள்[தொகு]

மதுரைக்காஞ்சி
அகநானூறு 89,
குறுந்தொகை 164, 173, 302
நற்றிணை 120, 123,
புறநானூறு 24[1], 26[2], 313, 335, 372, 396 (புறநானூற்றில் இவரது பெயர் 'மாங்குடி கிழார்' என்று உள்ளது)

மதுரைத் தமிழ்ச் சங்கத் தலைவர்[தொகு]

மதுரைக்காஞ்சி நூலின் பாட்டுடைத் தலைவன் தலையாலங் கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியன். இவனும் ஒரு புலவன். இவன் தனது பாடலில் புலவர்கள் தன் அவையில் மாங்குடி மருதனைத் தலைவனாகக் கொண்டு பாடியதைக் குறிப்பிட்டுள்ளான். (புறநானூறு 72)

வெளி இணைப்புகள்[தொகு]

  1. மாங்குடி கிழார் பாடல் புறநானூறு 24
  2. மாங்குடி கிழார் பாடல் புறநானூறு 26
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாங்குடிமருதனார்&oldid=2718201" இருந்து மீள்விக்கப்பட்டது