நெடுங்கழுத்துப் பரணர்
நெடுங்கழுத்துப் பரணர் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். பரணர், வன்பரணர் போன்று பரணர் என்னும் பெயர் கொண்ட புலவர்கள் இருப்பதால் அவர்களினின்று இவரை வேறுபடுத்திக் காட்ட இவரை நெடுங்கழுத்து என்னும் அடைமொழி சேர்த்து நெடுங்கழுத்துப் பரணர் என வழங்கினர்.[1]
புறநானூறு 291 எண் கொண்ட ஒரே ஒரு பாடல் மட்டும் இவர் பாடியதாக உள்ளது.
புறம் 291 சொல்லும் செய்தி
[தொகு]கரந்தை மாயோன்
[தொகு]பகைவர் ஆனிரைகளைக் கவர்ந்து சென்றனர். அவற்றை மீட்க அரசன் வீரர்களை அனுப்பினான். ஆனிரைகளை மீட்டுத் திரும்பிய மாயோன் போன்ற கருநிறத்தவன் விழுப்புண் பட்டுச் சாகக் கிடந்தான். அவனைத் தின்ன நரிகள் வட்டமிட்டன.
பிணத்தின் மேல் வெள்ளைத்துணி
[தொகு]அவன் மேல் வெள்ளை ஆடை போர்த்தினர். சிறுவர்களும், துடி முழக்குவோரும், பாடும் மக்களும் கூடினர்.
மணிமாலை
[தொகு]மக்கள் தாம் அணிந்திருக்கும் மணிமாலையை வீரன் மாயோனுக்குச் சூட்டி மகிழ்ந்தனர்.
ஒருகாழ் மாலை
[தொகு]துடிதுடித்து விதுப்புற்ற வேந்தனும் வீரன் மாயோனுக்குத் தன் ஒருகாழ் மாலையைச் சூட்டிப் பெருமைப்படுத்தினான்.
துடி முழக்கம்
[தொகு]இக்காலத்தில் மேளம் கொட்டுவது போல அக்காலத்திலும் துடியை முழக்கினர்.
புகழ் பாடுவோர்
[தொகு]இக்காலத்தில் சாவுமேளம் கொட்டுவோர் இறந்தவரின் புகழைப் பாடிக்கொண்டு கொட்டுவர். அதுபோல விழுப்புண் பட்டுச் சாகக் கிடந்த மாயோனுக்கும் அவனது புகழைப் பாடிக்கொண்டு துடி முழக்கினர். இப்படிக் கொட்டி அவர்கள் அவன் சாகும்வரையில் நரி அண்ட விடாமல் தடுத்தனர்.
விளரிப்பண்
[தொகு]இறந்தவன் நிரந்தரமாக உலகை விட்டுப் பிரிந்துவிட்டான். இந்தப் பிரிவைப் பாடுவது பாலைப்பண். இதனை விளரிப்பண் என்றும் கூறுவர்.
துடி முழக்கத்துடன் இறந்தவரின் புகழைப் பாடுவதும், மகளிர் இறந்தவரின் புகழைப் பாடி ஒப்பாரி வைப்பதும் விளரிப்பண்.