உறையனார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

உறையனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். குறுந்தொகை 207 பாலைத் திணைப் பாடல் ஒன்று மட்டும் இவர் பாடியதாகச் சங்கநூல் தொகுப்பில் உள்ளது.

புலவர் பெயர்[தொகு]

உறை என்னும் சொல் மழைநீரைக் குறிக்கும். (திருக்குறள் 559 'முறை கோடி மன்னவன் செய்யின் உறை கோடி ஒல்லாது வானம் பெயல்'). இதனால் இப் புலவர் பெயரின் பொருள் விளங்கும். இறையனார் என்னும் புலவரின் பெயர் இதனோடு ஒப்புநோக்கத் தக்கது. திருக்குறளின் முதல் அதிகாரம் இறை பற்றியது. இரண்டாவது அதிகாரம் மழை (வான், உறை) பற்றியது.

பாடல் சொல்லும் செய்தி[தொகு]

தலைவன் பொருள் தேடச் செல்லப்போகிறான் என்பதைக் குறிப்பால் உணர்ந்துகொண்ட தோழி அதனைத் தலைவியிடம் சொல்ல, அதைக் கேட்டுத் தலைவி சொல்வதாக அமைந்துள்ள பாடல் இது.

சொல்லிவிட்டால் செல்வது தடைபடும் என்பதை அவன் தெரிந்திருக்கிறான். தன் இனத்திலிருந்து பிரிந்த பருந்து ஒன்று ஓமை மரத்தில் இருந்துகொண்டு புலம்புவதைக் கேட்கும் தெள்விளிதான் அவனுக்குத் துணை. பொடி சுடும் காலில் அவன் தவ்வித் தவ்வி நடக்கவேண்டியிருக்குமே!

"https://ta.wikipedia.org/w/index.php?title=உறையனார்&oldid=606475" இருந்து மீள்விக்கப்பட்டது