நல்லூர்ச் சிறுமேதாவியார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நல்லூர்ச் சிறுமேதாவியார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர் ஆவார். சங்க இலக்கியம் தொகுப்பில் இவரது பாடலாக ஒன்றே ஒன்று உள்ளது.[1]

நற்றிணை 282 சொல்லும் செய்தி[தொகு]

தலைவி சொல்கிறாள். 'நான் அவன் நினைவாகவே இருக்கிறேன். அதனால் என் தோள் மெலிந்து வளையல் கழன்றோடுகிறது. என் அல்குல் வரி ஏக்கத்தால் வாடிப்போயிற்று. இதனை வேலன் தன் கழங்கை உருட்டி அணங்கு வருத்திற்று என்று சொல்லித் தணிக்கிறான்.' தணியுமா? தணிந்தால் சரி.[2]

மேற்கோள் குறிப்பு[தொகு]

  1. நற்றிணை 282
  2. தோடு அமை செறிப்பின் இலங்கு வளை ஞெகிழ,
    கோடு ஏந்து அல்குல் அவ் வரி வாட,
    நல் நுதல் சாய, படர் மலி அரு நோய்
    காதலன் தந்தமை அறியாது, உணர்த்த,
    அணங்குறு கழங்கின் முது வாய் வேலன் 5
    கிளவியின் தணியின், நன்றுமன்-சாரல்
    அகில் சுடு கானவன் உவல் சுடு கமழ் புகை,
    ஆடு மழை மங்குலின், மறைக்கும்
    நாடு கெழு வெற்பனொடு அமைந்த, நம் தொடர்பே?