ஓரிற்பிச்சையார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சங்க காலப் புலவர்களில் ஒருவர் ஓரில் பிச்சையார். சங்கநூல் தொகுப்பில் இவரது பாடல் ஒன்றே ஒன்று காணப்படுகிறது. (குறுந்தொகை: 277 - பாலை). இவரது பெயர் தெரியவில்லை. இவரது பாடலில் 'ஓரிற் பிச்சை' என்னும் தொடர் வருகிறது. அதனைக் கொண்டு குறுந்தொகையைத் தொகுத்த ஆசிரியர் இவருக்குப் பெயர் சூட்டியுள்ளார்.

பாடல் தரும் செய்தி[தொகு]

  • தலைமகன் பிரிந்து சென்றான். அவன் எப்போது வருவான் என்று தெரியவில்லை. தோழி அவ்வூர் அறிவனிடம் சென்று வினவுகிறாள்.
  • அறிவன் பிச்சைக்காரன்.
  • பல இல்லங்களில் பிச்சை எடுத்து இனி உண்ணவேண்டா. இனி என் இல்லமாகிய ஒன்றிலேயே வயிறார உண்ணலாம். எப்போது வருவார் என்று கூறுக. நீ சொன்னால் அது பலிக்கும். அப்போதே அவர் வந்துவிடுவார், என்கிறாள் தோழி.

அறிவன் என்பவன் ஊரார் செய்திகளை அறிந்தவன். ஊர் ஊராகச் சென்று பல ஊர்ச் செய்திகளையும் அறிந்தவன்

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓரிற்பிச்சையார்&oldid=1804824" இருந்து மீள்விக்கப்பட்டது