விரியூர் நக்கனார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

விரியூர் நக்கனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். புறநானூறு 332 எண் கொண்ட ஒரே ஒரு பாடல் மட்டும் இவரது பாடலாகச் (திணை - வாகை; துறை - மூதின்முல்லை) சங்கநூல் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.

பாடல் சொல்லும் செய்தி[தொகு]

வேல்

மூதில் மகன் ஒருவனின் வேல் எப்படிப்பட்டது என்பதைக் கூறிப் புலவர் அம்மகனின் பெருமையைப் புலப்படுத்துகிறார்.

இந்த மறவன் நெடுந்தகையின் வேல் பிறரது வேல் போன்றது அன்று.

தெருப்புழுதி படிந்து அவனது வீட்டுக் கூரையில் சார்த்தப்பட்டுக் கிடக்கினும் கிடக்கும்.
மாலை சூட்டப்பட்டு, மங்கல மகளிர் சூழ்ந்துவர, இரும்பை மரத்தில் செய்த யாழிசை ததும்ப, தெருவில் ஊர்வலம் வரினும் வரும்.
விழாக் கொண்டாடி தெளிந்த நீரில் நீராட்டப்படினும் படும்.
வேந்தர் எதிர்த்துத் தாக்கும் போரில் அவரது களிற்று முகத்தில் பாயவும் செய்யும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=விரியூர்_நக்கனார்&oldid=711155" இருந்து மீள்விக்கப்பட்டது