பொதும்பில் புல்லாளங் கண்ணியார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பொதும்பில் புல்லாளங் கண்ணியார் சங்ககாலப் பெண்பால் புலவர்களில் ஒருவர். இவரது பாடல் ஒன்றே ஒன்று சங்கநூல் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. அது அகநானூறு 154ஆம் பாடலாக உள்ளது.

  • பொதும்பில் என்பது இவர் ஊர்.
  • புல்லாளம் என்பது இவர் கண்களிலிருந்த புல் போன்ற வரிக் கோடுகள். ஒப்புநோக்குக பூங்கணுத்திரையார்

இவரதுபாடல் சொல்லும் செய்திகள்[தொகு]

போர்வினை முடிந்து மனை திரும்பும் தலைவன் தன் தேர்ப்பாகனிடம் சொல்கிறான்.

பகுவாய்த் தேரை

மழை பொழிந்ததால் தவளை பல இசைக்கருவிகள் முழங்குவது போலக் கறங்குகிறது(ஒலிக்கிறது).

பிடவம்

பிடவம் பூக்கள் நுண்மணல் போல் வழியெங்கும் வரிவரியாக வரித்துக் கிடக்கின்றன.

கோடல்

பாம்பு படமெடுப்பது போல கோடல் பூ பூத்திருக்கிறது.

இரலை

இரலைமான் ஊற்றோடும் அறல்நீரைப் பருகித் தன் துணையோடு படுத்துக்கிடக்கிறது.

வலவ!

நம் தேரில் பூட்டிய குதிரை ஓடும் மணியோசை காடு முழுவதும் கேட்கும்படி தேரை ஓட்டுக!

(தேர்க்காலில் அகப்பட்டுக்கொள்ளாமல் அவை விலகட்டும்).
நான் அம்மா அரிவையைத் துன்னவேண்டும்.

  • துன்னல் = தைத்தல், புணர்தல்