கொல்லிக் கண்ணன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கொல்லிக் கண்ணன் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். சங்கநூல் தொகுப்பில் அவரது பாடல் ஒன்றே ஒன்று இடம்பெற்றறுள்ளது. அது குறுந்தொகை 34 எண்ணுள்ள பாடலாக அமைந்துள்ளது.

பாடல்கள்[தொகு]

குறுந்தொகை 34[தொகு]

திருமணம் தடைபெறப்போவதைத் தோழி தலைவிக்குத் தெரிவிக்கும் பாடல் இது.

தலைவி மாந்தை நகரம் போல அழகுள்ளவள். மாந்தை சேர அரசன் குட்டுவனுக்கு உரியது. அவ்வூரில் யானைகள் மிகுதி. அந்த யானைகள் மாந்தை நகரின் கடலோரக் கானல் நிலத்தில் கூட்டம் கூட்டமாக மேயும். அவை போர்களத்தில் தம்மை அழித்த மன்னர்களின் ஆரவாரத்தைக் கேட்டு மருளும்.

இந்த ஊர் என்மேல் கௌவை தூற்றுகிறது. தண்டித்தாலும் ஓயாமல் ஊரார் தூற்றுகின்றனர். அவருக்கும் எனக்கும் உடலுறவு இல்லை என்று மறுத்தாலும் அவர்கள் தெரிந்துகொள்ள மறுக்கின்றனர். இனி தெரிந்துகொள்ளட்டும். (அவன் திருமணம் செய்துகொள்ள வந்துவிட்டான்). எனக்கு உரிய மணவாளக் கிழவன் அவன்தான்.

தோழி தன்னையே தலைவியாகப் பாவித்துக்கொண்டு சொல்லும் சொற்கள் இவை.

உடலுறவு இல்லாத உள்ளப் புணர்ச்சிக்கு இந்தப் பாடல் ஓர் எடுத்துக்காட்டு.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கொல்லிக்_கண்ணன்&oldid=685776" இலிருந்து மீள்விக்கப்பட்டது