மதுரைச் சுள்ளம் போதனார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மதுரைச் சுள்ளம் போதனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரது பாடல் ஒன்றே ஒன்று உள்ளது. அது நற்றிணை 215.

சுள்ளம் என்பது மதுரையின் ஒரு பகுதியாகச் சங்ககாலத்தில் விளங்கியது.

கொடுமுடி அவ்வலை - கோட்சறா வேட்டம்

பாடல் சொல்லும் செய்தி[தொகு]

  • திணை - நெய்தல்

நெய்தல் நிலத் தலைவன் பகலில் வந்து நெய்தல் நிலத் தலைவியைத் துய்த்துச் செல்கிறான். பகலில் வரலாமே! திருமணம் செய்துகொண்டு அடையலாமே! (பகலில் மறைந்து மறைந்து ஏன் துய்க்கவேண்டும்?) என்று தோழி தலைவனிடம் கூறுகிறாள்.

மாலை[தொகு]

பகல்கெழு செல்வன்(கதிரவன்) குணகடலில் தோன்றிக் குடமலையில் மறையும் காலம்.

மாலையில் மகளிர்[தொகு]

மகளிர் வீட்டில் விளக்கு வைத்து மாலைவிழாக் கொண்டாடுவர்.

மாலையில் பரதவர்[தொகு]

கொழுப்பில் எரியும் சுடர்விளக்கைத் திமிலில் வைத்துக்கொண்டு கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்வர். அந்த விளக்குகள் வானத்தில் பூத்திருக்கும் மீன்கள் போலக் கடலில் தோன்றும்.

பாடல் தலைவியின் தந்தை[தொகு]

கொடுமுடி வலையுடன் மீன் பிடிக்கக் கடலுக்குள் சென்ற தந்தை தன் வேட்டையில் சுறாமீன் கிடைத்தால் ஒழிய வீடு திரும்பமாட்டான்.

தந்தை இல்லாத தக்க சமயம். இரவில் தங்கிச் செல்லலாம் என்கிறாள் தோழி.

தங்கின் எவனோ தெய்ய[தொகு]

தங்கின் எந்தக் குற்றமும் வந்துவிடாது - என்பது ஒரு பொருள்.
இரவில் தங்குவது ஏன்? (குறமாகும் - என்பது மற்றொரு பொருள்)
"https://ta.wikipedia.org/w/index.php?title=மதுரைச்_சுள்ளம்_போதனார்&oldid=2718177" இலிருந்து மீள்விக்கப்பட்டது