வேம்பற்றூர்க் கண்ணன்கூத்தன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மறி மந்தை

வேம்பற்றூர்க் கண்ணன்கூத்தன் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். சங்கநூல் தொகுப்பில் இவரது பாடல் ஒன்றே ஒன்று மட்டும் இடம் பெற்றுள்ளது. அது குறுந்தொகை 362 எண கொண்ட பாடல்.

பாடல் சொல்லும் செய்தி

வேலன் வெறியாட்டு விழாக் கொண்டாட வருகிறான். தோழி அவனைத் தடுப்பதற்காக இதனைக் கூறுகிறாள்.

முதுவாய் வேல! நீ தலைவிக்கு முருகயர்ந்து வந்திருக்கிறாய். சினம் கொள்ளாமல் நான் சொல்வதைக் கேள். பலவகையான உணவுப் பொருள்களை முருகனுக்குப் படைத்து, சிறிய ஆட்டுக்குட்டியைக் கொன்று பலி கொடுத்து, அதன் குருதியைத் தலைவியின் நெற்றியிலே தடவினால், அந்தப் பலி இவளது காதலன் சிலம்பனுக்குப் போய்ச் சேறுமா? (இவளது மெலிவு இவள் தன் காதலனை எண்ணிக்கிடப்பதால் அன்றோ வந்தது?), என்கிறாள் தோழி.