உள்ளடக்கத்துக்குச் செல்

கணக்காயன் தத்தனார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கணக்காயன் தத்தனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரது பாடல் ஒன்றே ஒன்று உள்ளது. அது குறுந்தொகை 304. கணக்கு என்னும் சொல் நூலைக் குறிக்கும். கீழ்க்கணக்கு, மேல்கணக்கு என்னும் தொடர்களால் இதனை உணரலாம். நூல்களை மாணாக்கர்களுக்குச் சொல்லித் தருபவர் கணக்காயர்.

குறுந்தொகை 304 தரும் செய்தி

[தொகு]

தலைவன் பிரிந்தால் தலைவி தாங்கமாட்டாள் என்று கவலைப்படும் தோழிக்குத் தலைவி சொல்லும் செய்தி இது.

அவனுக்கும் அவளுக்கும் இடையே உள்ள உறவை அவள் 'பகைதரு நட்பு' என்று கூறுவது புதுமையாக உள்ளது.

கடலை 'நீர்ச் சுரம்' என்பதும் புதுமை.

மீன்மீது உளியை வீசும்போது கரையில் மேயும் அன்னப் பறவைகள் வெள்ளைச் சிறகுகளை விரித்துக்கொண்டு ஓடுமாம். தலைவன் அத்தகைய நாட்டை உடையவனாம்.

மீன் மீது வீசும் உளி என்பது தலைவி மாட்டுத் திணிக்கப்படும் பிரிவு போன்றது எனக் கொள்வது இறைச்சிப்பொருள்

பழக்கம்
[தொகு]

பரதவர் உளியை வீசிக் கடலில் பெருமீனைப் பிடிப்பார்களாம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கணக்காயன்_தத்தனார்&oldid=4164292" இலிருந்து மீள்விக்கப்பட்டது